search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பகுதியில் கால்நடை சுகாதாரம்- விழிப்புணர்வு முகாம்
    X

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி.


    உடுமலை பகுதியில் கால்நடை சுகாதாரம்- விழிப்புணர்வு முகாம்

    • முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    உடுமலை:

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடுமலை கோட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் ஊராட்சி குளத்துப்பாளையம் கிராமத்தில் நேற்று சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு மேலாண்மைக்கான விருதுகளும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன்,பிரகாஷ், ராஜ்குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கார்த்தி,பத்மா கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணியினை மேற்கொண்டனர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை கோட்ட உதவி இயக்குனர் வி. ஜெயராமன் கூறியதாவது:-

    உடுமலை கோட்டத்தில் மொத்தம் 60 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 20 முகாம்கள் வீதம் 2024 ம் ஆண்டு மார்ச் வரை நடைபெற உள்ளது.முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விபரம் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் ஊராட்சி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.முகாமில் சிகிச்சை, மலடு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தாது உப்பு, வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார விழிப்புணர்வு முகாமுக்கு கால்நடைகளை கொண்டு வந்து மேற்படி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

    Next Story
    ×