search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    குடிநீர் கேட்டு  பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம். 

    உடுமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    • திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஆண்டிகவுண்டனூர் பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    உடுமலை:

    உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . கிராமத்தின் அருகே ஜக்கம் பாளையம் குட்டிய கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இப்பகுதியில் திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தினமும் 60 ஆயிரம் லிட்டர் வரை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் 30 ஆயிரம் லிட்டர் ஆக குறைந்தது. இந்த நிலையில் கடந்த 27 நாட்களாக இப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.ஊராட்சி தலைவர் மோகன வள்ளி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் ஒன்றிய அதிகாரிகளிடம் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதை அடுத்து ஆண்டிகவுண்டனூர் பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    Next Story
    ×