என் மலர்
திருப்பூர்
- இத்திட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்கும் பயனாளிக்கு பணிகள் நிறைவு செய்த பின் 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
- தியாண்டு கடந்து நடப்பு நிதியாண்டின் 6 மாதங்கள் முடிந்த பிறகும், கழிப்பிடம் அமைக்கும் இலக்கை எட்ட முடியாத நிலை தொடர்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளில், தனிநபர் இல்ல கழிப்பறை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவிநாசி - 314, தாராபுரம் - 288, குடிமங்கலம் -1 74, காங்கயம் - 298, குண்டடம் - 484, மடத்துக்குளம் - 84, மூலனூர் - 50, பல்லடம் - 215, பொங்கலூர் - 261, திருப்பூர் - 231, உடுமலை - 303, ஊத்துக்குளி - 249, வெள்ளகோவில் - 194 என 3,145 வீடுகளில் தனிநபர் இல்ல கழிப்பறை அமைக்க அனுமதிக்கப்பட்டது.
தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்க, கூடுதல் செலவு ஏற்பட்டதாலும், திறந்தவெளி மலம் கழிப்பதை கட்டுப்படுத்தும் வகையில், தனிநபர் இல்லக்கழிப்பிடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்கும் பயனாளிக்கு பணிகள் நிறைவு செய்த பின் 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கு 3,145 கழிப்பறைகள் கட்ட மானியம் ஒதுக்கப்பட்டது. அதாவது தலா 12 ஆயிரம் ரூபாய் வீதம், 3 கோடியே 77 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டது.
நிதியாண்டு கடந்து நடப்பு நிதியாண்டின் 6 மாதங்கள் முடிந்த பிறகும், கழிப்பிடம் அமைக்கும் இலக்கை எட்ட முடியாத நிலை தொடர்கிறது. கடந்த மாத நிலவரப்படி, 1,701 கழிப்பறைகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதற்காக 2.04 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், பணி முழுமையாக நிறைவு பெற்றால் மட்டுமே மானிய தொகை விடுவிக்கப்படும்.அதன்படி 40 சதவீதம் அளவுக்கு நிலுவை இருக்கிறது. இருப்பினும், டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை 100 சதவீதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
- திருமணத்துக்கு மறுத்ததோடு கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று கூறி மிரட்டி வருகிறார்.
- காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவி புகார் மனு அளித்தார்.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தாய் சென்னையில் வேலை செய்து வருகிறார். நான் எனது தந்தையுடன் திருப்பூரில் தங்கி இருந்து படித்து வந்தேன்.
கல்லூரியில் என்னுடன் படிக்கும் வெற்றிவேல் (வயது 17) என்பவர் என்னுடன் நண்பராக பழகி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தந்தை வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனை அறிந்து கொண்ட வெற்றிவேல் எனது வீட்டிற்கு வந்து நாம் இருவரும் சேர்ந்து படிக்கலாம் என கூறினார்.
அப்போது வெற்றிவேல் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதே போல் மீண்டும் ஒருமுறை உல்லாசத்திற்கு அழைத்த போது நான் மறுத்தேன். உடனே அவர், ஏற்கனவே உல்லாசமாக இருந்ததை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி பலமுறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்.
இதனால் நான் கர்ப்பமானேன். இது குறித்து வெற்றிவேலிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்ததோடு இந்த கர்ப்பத்திற்கு நான் காரணம் இல்லை என்று கூறி என்னை மிரட்டி வருகிறார்.
எனவே என்னை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கல்லூரி மாணவர் வெற்றிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
- ஆடைகள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
- தீபாவளி பண்டிகைக்கு 11 நாட்களே உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்கும் விற்பனையே கைகொடுக்கும்.
திருப்பூர்:
அன்றாட பயன்பாட்டில் பின்னலாடைகளின் பங்களிப்பு அதிகரித்து விட்டது. ஆண்கள், பெண்கள், முதியோர், இளைஞர், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் டீ-சர்ட், ஷார்ட்ஸ், டிராக் பேன்ட், விளையாட்டு ஆடைகள், வாக்கிங் மற்றும் ஜிம் செல்லும்போது அணியும் ஆக்டிவ் பேன்ட் மற்றும் டீ-சர்ட் என பல்வகை ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற ஆடைகள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளியையொட்டி பின்னலாடைகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பின்னலாடை வர்த்தகம் திருப்பூரில் சூடுபிடித்துள்ளது. டீ-சர்ட், இரவு நேர ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் ஆகியவற்றை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.
மேலும் தீபாவளி விற்பனைக்காக கடந்த ஒரு மாதமாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் ஆடை கொள்முதல் செய்து முடித்து விட்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தீபாவளிக்கு முந்தைய 10 நாட்கள் ஆடை விற்பனை களைகட்டும். அதற்காக கடந்த சில நாட்களாக திருப்பூர் காதர்பேட்டை கடைகளில் விழாக்கால விற்பனைக்கான கொள்முதலும், ஆர்டர் விசாரணையும் பரபரப்பாக நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு 11 நாட்களே உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்கும் விற்பனையே கைகொடுக்கும். அதற்காக குறு, சிறு வியாபாரிகள், புதிய ஆடைகளை, உள்ளாடைகளை கொள்முதல் செய்ய காதர்பேட்டை மொத்த விற்பனை கடைகளில் குவிந்து வருகின்றனர். பொதுமக்களும் ஆடைகள் வாங்க வருகின்றனர். இதனால் திருப்பூர் காதர்பேட்டை பகுதிகளை கட்ட தொடங்கி உள்ளது.
- கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதென ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
- 8.35 மணிக்கு கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
உடுமலை:
உடுமலையை அடுத்த தளி பகுதியில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதென ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் வருகின்ற 3-ந்தேதி கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், மகாலட்சுமி, துர்க்கை, கருப்பராயசாமி, சப்த கன்னிமார் மற்றும் கோஸ்ட சக்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி காலை 9.15 மணிக்கு வாஸ்து சாந்தி, கணபதி பூஜையும், மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை நடைபெற உள்ளது. 2-ந் தேதி காலை 9.15 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.
3-ந்தேதி காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், 8.15 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசங்கள் உலா வருதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து 8.35 மணிக்கு கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
உடுமலை:
கேரள மாநிலம் எர்ணாகுளம் கிறிஸ்தவ கூட்டரங்கில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் எதிரொலியாக கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி அருகே உள்ள ஒன்பதாறு சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களில் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்படும் சோதனையை பார்வையிட்டார். மேலும் உடுமலை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
- யுவராஜ், அவிநாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
- ஆடு திருடியவரை கைது செய்து ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உகாயனூர், வடுகபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது ஆடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இதுகுறித்து யுவராஜ், அவிநாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த ஆட்டை விழுப்புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது மகன் அமல்ராஜ் (வயது 35) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஆடு திருடிய அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- களரிப்பயட்டுப் போட்டிகள் நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது.
- நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு களரி பயட்டு ஸ்டேஷன் தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி தலைமை வகித்தார்.
உடுமலை:
ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது. 43 வகையான விளையாட்டுகள் அதில் அடங்கும்.அதில் முதல் முறையாக களரிப்பயட்டு சேர்க்கப்பட்டு உள்ளது..37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம்மாதம் தொடங்குகிறது.
இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் .களரிப்பயட்டுப் போட்டிகள் நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. இதில் 300க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் 12 மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர்.
இதில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை சார்பில் ஜீவா, கே.ருத்ரேந்தர்,டி.விக்னேஸ்வரன்.எம்.முத்துச்செல்வம், வி.தரன்,எம்.விக்னேஷ்,ஆர்.ராமசந்திரன்.,கே.விசாலிஆகியோர் களரி பயட்டு போட்டியில் உடுமலை ,மடத்துக்குளம் பகுதியில் இருந்து கலந்து கொள்கின்றனர்.
7வகையான பிரிவுகளில் போட்டி நடைபெறுகின்றது. சுவடு, மெய்பயட்டு,உருமிவீசல்,சவுட்டி பொங்கல், கைப்போர்,கேட்டுக்கரி, வாளும் பரிச்சா ஆகிய பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு களரி பயட்டு ஸ்டேஷன் தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி தலைமை வகித்தார்.
லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் எஸ் .ஆர்.எஸ் .செல்வராஜ் , விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி, பணி நிறைவு நூலகர் கணேசன், ஜிவிஜி., காசாளர் சங்கர மகாதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த தகவலை தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் மாநில செயலாளர் ஆசான் வீரமணி தெரிவித்தார்.
- முடிவு தெரியாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
- மதுக்கடையால் பிரச்சினைகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள விருகல்பட்டியில் அரசு மதுபான கடை உள்ளது. தற்போது இந்த கடையை மூங்கில்தொழுவு அருகே உள்ள வி.வேலூர் பகுதிக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் வி.வேலூர் பகுதியை சுற்றி உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று (திங்கட்கிழமை) காலையில் திடீரென ஒன்று திரண்டு இங்கு மதுக்கடை அமைக்க க்கூடாது என்ற கோஷ த்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடுமலை போலீஸ் டி.எ.ஸ்.பி. சுகுமாறன் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவித சம்பவம் எதுவும் நடை பெறாமல் இருக்க பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.இதனால் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து போரா ட்டம் நடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதற்கு முடிவு தெரியாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இது குறித்து வி.வேலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது:- புதிதாக அமைய உள்ள மது க்கடையை சுற்றிலும் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அனைத்து மக்களும் இந்த மதுக்கடை வழியாகத்தான் சென்று வர வேண்டிய இடமாக உள்ளது. இதனால் இங்கு வரும் மதுபிரி யர்களால் எங்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தற்போது நாங்கள் நிம்மதி யாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த மது க்கடையால் பிரச்சினைகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது. எனவே மதுக்கடையை இப்பகுதியில் அமைக்க கூடாது என்று கூறினர்.
- மழைநீர் செல்லக்கூடிய வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது.
- விஷ ஜந்துக்கள் மழை நீரோடு வீட்டிற்குள் வந்து விடுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பூமலூர் அபிராமி கார்டன் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரக்கூடிய நிலையில் மழை பெய்யும் போது அப்பகுதியில் முறையான வடிகால் மற்றும் மழைநீர் செல்லக்கூடிய வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு மட்டுமல்லாமல் , விஷ ஜந்துக்கள் மழை நீரோடு வீட்டிற்குள் வந்து விடுகிறது. மேலும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் .
மழைநீர் செல்லக்கூடிய பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் கிரிஷ் சரவணன் , ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
- சிவன்மலை ஊராட்சியுடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரங்கள் மற்றும் அழிந்து வரும் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர்.
- வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி பெரிய கோவில் அடஞ்சாரம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
காங்கயம்:
காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது, குளம் குட்டைகளை தூர்வார்வது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றது.சிவன்மலை ஊராட்சியுடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரங்கள் மற்றும் அழிந்து வரும் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர். மேலும் இதுவரை 800 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 131-வது கட்டமாக வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி பெரிய கோவில் அடஞ்சாரம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் வெள்ளகோவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஸ், சிவாஸ் பேப்பர் மில் சி.சண்முகராஜ், சபரி கன்ஸ்ட்ரக்சன் வி.தங்கமுத்து, அம்மன் கன்ஸ்ட்ரக்சன் சக்திவேல் முருகன், வீரசோழபுரம் ஜி. பாலசுப்பிரமணியம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், காங்கயம் துளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
- வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 1-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- ஜீவாநகர், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்திரா,டி.டி.பி.மில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
திருப்பூர்:
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 1-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் ஒரு பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்திரா,டி.டி.பி.மில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து திடங்களையும் முடக்கி உள்ளனர்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நல்லாட்சியை தந்தார்.
திருப்பூர்:
திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க.சார்பில் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருமுருகன்பூண்டி சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ், அ.தி.மு.க. தலைமை பேச்சாளர் அறிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அப்போது செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நல்லாட்சியை தந்தார். இன்று தி.மு.க. ஆட்சியில் 52 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. சொத்து வரி அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் முடக்கி உள்ளனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இன்றுவரை அதை ரத்து செய்ய முடியாமல் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏழை மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத தி.மு.க. அரசை விரைவில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






