search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளி கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - 3-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்

    தளி கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - 3-ந்தேதி நடக்கிறது

    • கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதென ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
    • 8.35 மணிக்கு கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த தளி பகுதியில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதென ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் வருகின்ற 3-ந்தேதி கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், மகாலட்சுமி, துர்க்கை, கருப்பராயசாமி, சப்த கன்னிமார் மற்றும் கோஸ்ட சக்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    விழாவின் முதல் நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி காலை 9.15 மணிக்கு வாஸ்து சாந்தி, கணபதி பூஜையும், மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை நடைபெற உள்ளது. 2-ந் தேதி காலை 9.15 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.

    3-ந்தேதி காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், 8.15 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசங்கள் உலா வருதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து 8.35 மணிக்கு கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×