என் மலர்
திருப்பூர்
- அரசியல் கட்சி ஊா்வலமாக இல்லாமல் கட்டுப்பாடு உள்ள அணிவகுப்பாக அந்த ஊா்வலம் நடைபெறும்.
- தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-
கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமியன்று ஆா்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் நிறுவன நாளும், இந்நாட்டின் வெற்றி திருநாளுமாக கொண்டாடப்படும் விதமாக விஜயதசமி நாளில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலம் கடந்த 98 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சி ஊா்வலமாக இல்லாமல் கட்டுப்பாடு உள்ள அணிவகுப்பாக அந்த ஊா்வலம் நடைபெறும். தனிநபரை குறிப்பிட்ட வாழ்க, ஒழிக கோஷங்கள் எதுவும் எழுப்பப்படாது. சீருடை அணிந்த தன்னாா்வலா்களால் மக்களிடையே கட்டுப்பாடு, தேசபக்தி, ஒற்றுமை, ஒழுங்கு போன்ற நற்சிந்தனையை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெறும்.
கேரளம், புதுச்சேரி உள்பட எல்லா மாநிலங்களிலும் எந்த நிபந்தனைகளும் இன்றி ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியும் அமைதியாக உற்சாகமாக நடைபெற்றது. எந்த மாநிலத்திலும் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னை தமிழகத்தில் இருக்கிறது என தமிழக அரசு கருதுவது திமுக., அரசின் ஆளுமை தன்மையில் உள்ள குறைபாடாகத்தான் தெரிகிறது.
அதே சமயம் தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்தில் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊா்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தும் தமிழகஅரசு செயப்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். இது ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிரானதாகும்.
ஆகவே, தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு காலதாமதமின்றி அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.
- ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 4 விவசாயிகள் 18 மூட்டைகள் (902 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.74 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.84-க்கும், குறைந்த பட்சமாக ரூ.60-க்கும், சராசரியாக ரூ.60- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.
- காங்கயம் வாரச் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- பெரிய வெங்காயத்தின் விலை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முத்தூர்:
காங்கயம் வாரச் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது .வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள்,வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். வார சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள் ,தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.
நேற்று கூடிய வார சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், தக்காளி கிலோ ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயத்தின் விலை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது பரவலாக பெய்து வரும் மழை காரணமாக பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை ஏற்றமாக உள்ளது. மேலும் வரும் வாரங்களில் இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று நடைபெற்று வருகிறது.
- மின் பயனீட்டாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெறலாம்
முத்தூர்:
காங்கயத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை 1-ந் தேதி (புதன்கிழமை) காங்கயம் பஸ் நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. மின் பயனீட்டாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெறலாம் என மின் வாரிய காங்கயம் செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
- விழாவில் தாராபுரம் அறிவுத்திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார்.
- முடிவில் தாராபுரம் நகர அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
தாராபுரம்:
தாராபுரம் அறிவு திருக்கோவிலின் 29-வது ஆண்டு விழா, அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் 113 -வது ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாள் 109-வது பிறந்தநாள் மற்றும் மனைவி நல வேட்பு விழா ஆகிய முப்பெரும் விழா தாராபுரம் அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் தாராபுரம் அறிவுத்திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார்.துணைத்தலைவர் மருத்துவர் தங்கராசு வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஆயிமுத்துரத்தினம் , பொருளாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அருட்செல்வி தம்பதியினர் உயிர்கலப்பு தவம் மற்றும் மலர் கனி பரிமாற்றம் செய்து வைத்தார்.
அதில் 106 தம்பதிகள் கலந்து கொண்டு மாலை மாற்றி,மலர் மற்றும் கனி பரிமாறிக்கொண்டனர்.அதைத் தொடர்ந்து பேராசிரியர் நீலகண்டன் மனவளக்கலையின் மாண்பு குறித்து பேசினார்.இதில் அரிமா சிவக்குமார் மற்றும் அரிமா சங்க அறக்கட்டளை நிர்வாகிகள், தாராபுரம் அறிவுத்திருக்கோவில் நிர்வாகிகள், தம்பதிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தாராபுரம் நகர அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- 276 பயனாளிகளுக்கு ரூ.15,50,000 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
- துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 361 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் திருப்பூர் மாவட்ட முஸ்ஸிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, உயர்கல்வி உதவித்தொகை என 276 பயனாளிகளுக்கு ரூ.15,50,000 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கண்காணிப்பாளர்கள் ஈஸ்வரி, விஜயகார்த்திக், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இக்கிராமங்களில் பிரதான பயிரான தென்னையில், ஊடுபயிராக ஜாதிக்காய், திசுவாழை வழங்கப்பட உள்ளது.
- நிலப்போர்வைக்கு நான்கு ஹெக்ேடரும் பெறப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.
உடுமலை:
ஆனைமலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்பாண்டில் தமிழக பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் பேஸ் 4 செயல்படுத்தப்பட உள்ளது. தோட்டக்கலைத்துறை வாயிலாக நீர் பாசனத்தில் புதிய திட்ட உத்திகளை செலுத்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்கி உதவும் புதிய பயிர்கள் மற்றும் ரகங்கள் அறிமுகம் செய்து வேளாண்மையை நவீனப்படுத்தி கொண்டுள்ளது.
இத்திட்டத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு கிராமங்களான மார்ச்சநாயக்கன்பாளையம், பெரியபோது, ஒடையகுளம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம், கோட்டூர், சோமந்துறை மற்றும் தென்சங்கம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இக்கிராமங்களில் பிரதான பயிரான தென்னையில், ஊடுபயிராக ஜாதிக்காய், திசுவாழை வழங்கப்பட உள்ளது.
நுண்ணீர் பாசன திட்டம், நிலப்போர்வை போன்ற உயர் தொழில் நுட்பத்தின் வாயிலாக நீர் மேலாண்மை, களை மேலாண்மை மற்றும் கூலி மேலாண்மை கட்டுக்குள் கொண்டு வரப்பெற்று விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்க செய்கின்றது.
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் பேஸ் 4 ஆனைமலை வட்டாரத்தில் செயல்படுத்த, 57.41 லட்சம் ெஹக்டேர் இலக்கு பெறப்பட்டு விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளது. திசு வாழை 72 ெஹக்ேடர், ஜாதிக்காய் 65 ெஹக்டரும் நுண்நீர் பாசன திட்டம் 24 ெஹக்ேடரிலும் செயல்படுத்தப்பட உள்ளது. நிலப்போர்வைக்கு நான்கு ஹெக்ேடரும் பெறப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி, தோட்டக்கலைத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில், பயன்பெற உள்ள விவசாயிகள், சிட்டா அடங்கல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல் மற்றும் உரிமைச்சான்றுடன் தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் உழவன் செயலி வாயிலாக, முன்பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் 98659 05505, உதவி தோட்டக்கலை அலுவலர் ராம் பிரசாத், 70106 81662, உதவி தோட்டக்கலை அலுவலர் பிரித்தா, 73958 55683 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
- திருப்பூரில் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
- கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர்.
திருப்பூர்:
திருப்பூரில் வெளி மாவட்ட, மாநில மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர், உறவினர்களுக்கு துணி, பொருட்கள் உள்ளிட்டவை வாங்கி செல்வர். பண்டிகை காலங்களில் பழைய, புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் சில நாட்களாக திருப்பூர் குமரன் ரோடு, பழைய பஸ் நிலையம் , காதர் பேட்டை உட்பட மாநகரின் பிரதான ரோடு, முக்கிய சந்திப்பு பகுதிகளில் மாலை நேரங்களில் தற்காலிக துணிக்கடைகள், பலகார கடைகள், பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர். இதை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். குமரன் ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்ல இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தவும் உள்ளனர்.தற்போது இருந்தே மக்கள் கூடும் இடங்கள், பஸ்களில் வழிப்பறி திருடர்கள், பிக்பாக்கெட் ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் மப்டியில் ரோந்து சென்று வருகின்றனர்.
- கல்லாபுரம் சுற்றுப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடைப்பணிகள் தீவிரமடைந்துள்ளது.
- தமிழக அரசு முன்பு கால்நடைத்துறை வாயிலாக உலர் தீவன கிடங்கு திட்டத்தை செயல்படுத்தி வந்தது.
உடுமலை:
உடுமலை அமராவதிபழைய ஆயக்கட்டு பகுதிகளில் இரு சீசன்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.குறிப்பாக உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்குட்பட்ட கல்லாபுரம் பகுதியில் மட்டும் சராசரியாக 450 ெஹக்டேர் வரை ஒவ்வொரு சீசனிலும் நெல் சாகுபடியாகிறது. அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு, பருவமழை உள்ளிட்ட காரணங்களால் மாறுபட்ட சீசன்களில் நெல் நடவு செய்யப்படுகிறது.இப்பகுதியில் 90 நாட்கள் வயதுடைய சன்ன மற்றும் குண்டு ரக நெல் அதிக அளவு நடவு செய்யப்படுகிறது.
இந்தாண்டு மழைப்பொழிவு குறைவு, அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் பயிரின் வளர்ச்சித்தருணத்தில், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. மேலும் சாகுபடி செலவும் கூடுதலானது.தற்போது கல்லாபுரம் சுற்றுப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடைப்பணிகள் தீவிரமடைந்துள்ளது. தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக அறுவடை பணிகள் முழுவதும் எந்திரங்கள் வாயிலாகவே மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் அறுவடை சீசனில் இடைத்தரகர்களால், விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டத்தை தவிர்க்க அரசு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என கல்லாபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் அமராவதி விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு கொள்முதல் மையம் அமைக்காவிட்டால், விவசாயிகள் பல கி.மீ.,தூரம் அதிக போக்குவரத்து செலவை ஏற்று, நெல்லை விற்பனைக்காக பிற பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.இருப்பினும் போதிய விலை கிடைக்காததால் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
அமராவதி ஆயக்கட்டு, அறுவடை சீசன்களில், நுகர்பொருள் வாணிபக்கழகம் வாயிலாக கல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கொள்முதல் மையம் துவக்க வேண்டும்.
சிறு, குறு விவசாயிகள், நெல்லை விற்பனைக்காக, பிற பகுதிகளுக்கு எடுத்துச்செல்வதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. அரசு கொள்முதல் மையங்களில் நெல்லின் ஈரப்பதம், பரிசோதித்த பிறகே கொள்முதல் செய்கின்றனர். ஆனால் அறுவடைக்குப்பிறகு நெல்லை காய வைக்க கல்லாபுரம் பகுதியில் உலர்கள வசதியில்லை. இதனால் குறைவான விலை கிடைத்தாலும் பரவாயில்லை என இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்கிறோம்.நீண்ட காலமாக உலர்களம் மற்றும் தற்காலிக கொள்முதல் மையம் அமைக்கும் கோரிக்கையை தெரிவித்து வருகிறோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.
நெல் சாகுபடியாளர்களுக்கு வைக்கோல் விற்பனையிலும் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசு முன்பு கால்நடைத்துறை வாயிலாக உலர் தீவன கிடங்கு திட்டத்தை செயல்படுத்தி வந்தது.நெல் சாகுபடி அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வைக்கோலை கொள்முதல் செய்து கால்நடை வளர்ப்பு அதிகமுள்ள பகுதிகளில் மானிய விலையில் விற்பனை செய்தனர்.
இத்திட்டத்துக்கு கால்நடை வளர்ப்போரிடையே அதிக வரவேற்பும் இருந்தது. தற்போது இத்திட்டத்தின் கீழ் கல்லாபுரம் பகுதியில் வைக்கோல் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- நடப்பாண்டு பருவமழைகள் ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் குறைந்த நீர் இருப்பு மட்டுமே உள்ளது
- அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பொழிவு இல்லாததால் நீர் வரத்தும், நீர்மட்டமும் பெருமளவு சரிந்துள்ளது.
உடுமலை:
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையிலிருந்து ஜூன் 1-ந்தேதி முதல் பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு பருவமழைகள் ஏமாற்றியதால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் குறைந்த நீர் இருப்பு மட்டுமே உள்ளது. இதனால் அலங்கியம் முதல் கரூர் வரையிலான வலது கரை பழைய ஆயக்கட்டு பாசனம் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
அணை நீர் இருப்பை பொருத்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில் நிலைப்பயிர்களாக உள்ள தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்றவும், கால்நடைகள் மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர்த்தேவையை கருத்தில் கொண்டு உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 12ந்தேதி முதல் 15 நாட்களுக்கு திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள பழைய ஆயக்கட்டு பாசனம், அலங்கியம் முதல் கரூர் வரை 10 கால்வாய்களில் 21,867 ஏக்கர் நிலங்களுக்கு ஆற்று மதகு வழியாக 1,503.36 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள 25,250 ஏக்கர் நிலங்களுக்கு 15 நாட்களுக்கு பிரதான கால்வாய் வழியாக 570.24 மில்லின் கனஅடி நீர் என மொத்தம் 2,073.60 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் அமராவதி அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது. உயிர்த்தண்ணீர் திறக்கும் காலம் நிறைவு பெற்றதால் அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பொழிவு இல்லாததால் நீர் வரத்தும், நீர்மட்டமும் பெருமளவு சரிந்துள்ளது.
அணை நீர் இருப்பை பொருத்து, மீண்டும் வலது கரை மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், பழைய ஆயக்கட்டு, ராஜ வாய்க்கால் பாசன நிலங்களுக்கு சம்பா பருவ நெல் சாகுபடிக்கும் நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பொழிவு மற்றும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என்றனர்.
- பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.
- நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர்.
உடுமலை:
உடுமலை பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உட்பட பள்ளிகள் அமைந்துள்ளது.பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.
அப்போது ரோட்டில் வேகமாக வரும் வாகனங்களால் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக பள்ளி மாணவ, மாணவிகள் ரோட்டை கடக்கும் இடத்தில் டிவைடர்கள் வைக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி சில ஆண்டுகளுக்கு முன், சோமவாரப்பட்டியில், மாநில நெடுஞ்சாலையில் டிவைடர் வைக்கப்பட்டது. சில மாதங்களில் அங்கிருந்து அகற்றப்பட்ட டிவைடர் மீண்டும் வைக்கப்படவில்லை.
இதே போல் கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பொட்டையம்பாளையம், லிங்கம்மாவூர், புதூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வருகின்றனர்.நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே குடிமங்கலம் போலீசார், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக மாநில நெடுஞ்சாலையில் டிவைடர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஆதார பூர்வ புகாரை பி.ஏ.பி., விவசாயிகள் சங்கத்தினர் உடுமலை டி.எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்தனர்.
- நீர் திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திருப்பூர்:
பி.ஏ.பி., விவசாயிகள் நலச்சங்கம், உப்பாறு அணை விவசாயிகள் சங்கம் மற்றும் பூசரநாயக்கன்பாளையம் ஏரி விவசாயிகள் சங்கத்தினர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பி.ஏ.பி., தண்ணீரை ஒரு குறிப்பிட்ட கிணறு வாயிலாக, 35 நாட்களாக தினமும் 22 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் திருடப்பட்டு 100 டேங்கர் லாரி அளவுக்கு விற்கப்பட்டுள்ளது. ஆதார பூர்வ புகாரை பி.ஏ.பி., விவசாயிகள் சங்கத்தினர் உடுமலை டி.எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நீர் திருட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டது.குறிப்பிட்ட நீர் திருட்டு வாயிலாக மட்டும், பி.ஏ.பி., தண்ணீர் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்று பல்வேறு இடங்களில் நீர் திருட்டு நடந்து வருவதால் 2 சுற்றுகள் வினியோகம் செய்யப்பட வேண்டிய தண்ணீர் ஒரே சுற்று அளவுக்கு நான்காம் மண்டல ஆயக்கட்டுதாரர்களுக்கு அரை, குறையாக வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க செயலாளர் வேலுசாமி கூறுகையில், பி.ஏ.பி., கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர் பல இடங்களில் திருடப்படுகிறது என தொடர்ந்து கூறி வருகிறோம்.இதனால் 2 சுற்றுகளுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டிய, 2,500 மில்லியன் கன அடி தண்ணீரை ஒரே சுற்றில் முடித்து விட்டனர். நீர் திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






