என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி நல வேட்பு விழா"

    • விழாவில் தாராபுரம் அறிவுத்திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார்.
    • முடிவில் தாராபுரம் நகர அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    தாராபுரம்:

    தாராபுரம் அறிவு திருக்கோவிலின் 29-வது ஆண்டு விழா, அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் 113 -வது ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாள் 109-வது பிறந்தநாள் மற்றும் மனைவி நல வேட்பு விழா ஆகிய முப்பெரும் விழா தாராபுரம் அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவில் தாராபுரம் அறிவுத்திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார்.துணைத்தலைவர் மருத்துவர் தங்கராசு வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஆயிமுத்துரத்தினம் , பொருளாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அருட்செல்வி தம்பதியினர் உயிர்கலப்பு தவம் மற்றும் மலர் கனி பரிமாற்றம் செய்து வைத்தார்.

    அதில் 106 தம்பதிகள் கலந்து கொண்டு மாலை மாற்றி,மலர் மற்றும் கனி பரிமாறிக்கொண்டனர்.அதைத் தொடர்ந்து பேராசிரியர் நீலகண்டன் மனவளக்கலையின் மாண்பு குறித்து பேசினார்.இதில் அரிமா சிவக்குமார் மற்றும் அரிமா சங்க அறக்கட்டளை நிர்வாகிகள், தாராபுரம் அறிவுத்திருக்கோவில் நிர்வாகிகள், தம்பதிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தாராபுரம் நகர அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×