பல்லடம் அருகே ஆடு திருடிய வாலிபர் கைது

யுவராஜ், அவிநாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். ஆடு திருடியவரை கைது செய்து ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆடு திருடியதாக கைது செய்யப்பட்ட அமல்ராஜ்.
ஆடு திருடியதாக கைது செய்யப்பட்ட அமல்ராஜ்.
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உகாயனூர், வடுகபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது ஆடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இதுகுறித்து யுவராஜ், அவிநாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அந்த ஆட்டை விழுப்புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது மகன் அமல்ராஜ் (வயது 35) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஆடு திருடிய அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com