என் மலர்
திருநெல்வேலி
- ஒவ்வொரு மன்றத்திற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
- மன்றத்தின் நோக்கம் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்களை வகுப்பு வாரியாக 6 குழுக்களாக பிரித்து இலக்கிய மன்றம், இயற்கை மன்றம், சேவை மன்றம், கணித மன்றம், கலை மற்றும் கைவினை மன்றம், நுண்கலைகள் மன்றம் என பிரித்தனர். ஒவ்வொரு மன்றத்திற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்க ப்பட்டனர். ஒவ்வொரு மன்றத்திலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவ்வுறுப்பினர்களுக்கு ஒரு தலைவர் மற்றும் துணைத்தலைவர் என தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுக விழா நடைபெற்றது.
விழாவில் ஒவ்வொரு மன்ற உறுப்பினர்களும் தலைவர்- துணைத் தலைவர் எனத் தங்களை அறிமுகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மன்ற உறுப்பினர்களும் தங்கள் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்திறன் குறித்து ஆடல் -பாடல் நாடகத்துடன் கூடிய செய்முறை விளக்கம் அளித்தனர். முடிவில் பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவர்களுக்கு இம்மன்றங்களின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்து மாதந்தோறும் இம்மன்றத்தின் மூலம் மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகப் போட்டிகள் பல நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று கூறினார்.
- மதுரை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
- திருச்சி அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
நெல்லை:
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந் தேதி தொடங்கி யது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
கோவை, திண்டுக்கல், சேலம் ஆகிய இடங்களில் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன. நேற்று முதல் டி.என். பி.எல் போட்டிகள் நெல்லையில் தொடங்கியது. நேற்றைய ஆட்டங்களில் சேலம் ஸ்பார்டன்ஸ் 8 ரன்னில் திருப்பூர் தமிழன்சையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சையயும் தோற்கடித்தன.
இதுவரை 23 போட்டிகள் முடிவடைந்துள்ளன. கோவை கிக்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றைய போட்டிகள் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இன்னும் ஒரு அணி தகுதி பெற வேண்டும். இதற்கான போட்டியில் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.
திருச்சி அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்று வெளியேறின.
இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
மதுரை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி கோவையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
கோவை அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. மதுரையை வீழ்த்தி 12 புள்ளியுடன் தொடர்ந்து முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது.
இரவு 7.15 மணிக்கு நடை பெறும் 2-வது ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும். திருச்சி அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
- 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார்.
- விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும்.
நெல்லையப்பர் கோவில் பல்வேறு காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன. பல்வேறு சிறப்புகள் அமையப்பெற்ற சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை-மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று நடை பெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இன்று காலை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து கோவிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக இன்று அதிகாலை 1.15 மணியளவில் விநாயகர் தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு சுவாமி சன்னதி முன்பு நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு முருகர் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் சுவாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேரோட்டம் தொடங்கியது. பின்னர் 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார். அப்போது விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் வடக்கு ரதவீதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடா்ந்து அம்பாள் தேரும், நிறைவாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், சந்திரசேகர், கிட்டு, உலகநாதன், 25-வது வார்டு வட்ட செயலாளர் டவுன் பாஸ்கர், சுற்றுச்சூழல் அணி அமிதாப், நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. தற்காலிக கழிப்பிடங்கள், மாநகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடங்கள், வாகன நிறுத்தங்கள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். ரதவீதிகள் முழுமையும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையா் கவிதா பிரியதர்ஷினி, கோவில் செயல் அலுவலா் அய்யர் சிவமணி மற்றும் நிா்வாக அதிகாாிகள் செய்திருந்தனா்.
தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தாகம் தீர்க்கவும், பசியாற்றவும் தன்னார்வலர்கள், பல்வேறு கட்சியினர் சார்பில் ரதவீதிகளில் அன்னதானம், தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி 4 ரதவீதிகளிலும் சிவனடியார்கள் சங்கொலி எழுப்பி சென்றனர். ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதினர். பாராயணங்களும் பாடினர். சிறுவர்கள் கூட்டமாக கூடி இசை வாத்தியங்கள் வாசித்தனர்.
சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும். இதன் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, அலங்கார தட்டுகளை சேர்த்து உயரம் சுமார் 70 அடியாக கொண்டுள்ளது. திருவாரூர் ஆழித்தேர் உயரத்தில் அதிகம் என்றாலும் முழுக்க முழுக்க மூங்கில் மரங்கள் பயன்படுத்தப்பட்டு ஹிட்டாச்சி எந்திரங்களும், ஹைட்ராலிக் பிரேக் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டு இழுக்கப்படுகிறது. உயரத்தில் 2-வது பெரிய தேரான திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருத்தேர் மூங்கில் பிரம்புகள் மற்றும் மரங்கள் பயன்படுத்தப்பட்டு ராட்சச எந்திரங்கள் மூலம் இழுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நெல்லையப்பர் தேர் முழுக்க முழுக்க மனித சக்திகளால் மட்டுமே இழுக்கப்படுகிறது. தேர் இழுக்க 300 அடி நீளத்தில் 4 வடம் பயன்படுத்தப்படுவதுடன், தேர் திரும்பவும், தேரை நிறுத்தவும் சறுக்கு கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
- முதலில் ஆடிய நெல்லை 159 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்து வென்றது.
7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நடந்து வருகிறது.
நெல்லையில் டிஎன்பிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அருண் கார்த்திக் 39 ரன் எடுத்தார். ஹரீஷ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடியது. விமல் குமார், ஷிவம் சிங் இருவரும் அரை சதமடித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்த நிலையில் ஷிவம் சிங் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 62 ரன் எடுத்த நிலையில் விமல் குமார் ரன் அவுட்டானார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது திண்டுக்கல் அணி பெறும் 5-வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளது.
- டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.
7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது.
இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இதில், சேலம் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், 23வது லீக் ஆட்டம் இன்று மாலை 7.15 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால், நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அருண் கார்த்திக், ஸ்ரீரெஞ்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில், ஸ்ரீ நெரஞ்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, ராஜகோபால் 13 ரன்கள், அஜிதேஷ் குருசாமி 17 ரன்கள், ரித்தக் ஈஸ்வரன் 18 ரன்கள், அருண் கார்த்திக் 39 ரன்கள், தோனு யாதவ் 2 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில் நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இதனால், 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடி வருகிறது.
- பவர் பிளேவில் வேகமெடுத்த திருப்பூர் தமிழன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை குவித்தது.
- சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க அதன்பின் திருப்பூர் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது.
இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்த போட்டியில் முதலாவதாக அரவிந்த் மற்றும் கவுஷிக் காந்தி பேட்டிங் செய்தனர். இதில், கவுஷிக் முதல் பந்துலேயே ஆட்டமிழந்தார். இதேபோல், அரவிந்த் ஒரு ரன்னில் அவுட்டானார்.
இவர்களை தொடர்ந்து ஆர்.கவின் 19 ரன்களும், மோகித் ஹரிஹரன் 3 ரன்களும், அபிஷேக் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, சன்னி சந்து அரை சதம் அடித்து 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். முகமது அத்னான் கான் 15 ரன்களும், அபிஷேக் தன்வர் 17 ரன்களும் ஆகாஷ் சும்ரா 7 ரன்களு் எடுத்தனர். இறுதியாக ஜகநாத் ஸ்ரீநிவாஸ் 11 ரன்களுடன் அவுட்டானார்.
செல்வா குமரன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியின் முடிவில் சேலம் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. இதைதொடர்ந்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என் இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.
இதில், பவர் பிளேவில் வேகமெடுத்த திருப்பூர் தமிழன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை குவித்தது. இதனால் எளிதில் வெற்றி இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டை சாய் கிஷோர் (26), விஜய் சங்கர் (12), பால்சந்தர் அனிருத் (22) இழக்க அதன்பின் திருப்பூர் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், கடைசி ஓவரில் 6 பந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. இதில், சன்னி சந்து வீசிய கடைசி ஓவரில் திருப்பூர் அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதில் திருப்பூர் தமிழன்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
- ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் சேலம் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.
- சன்னி சந்து அரை சதம் அடித்து 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது.
இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்த போட்டியில் முதலாவதாக அரவிந்த் மற்றும் கவுஷிக் காந்தி பேட்டிங் செய்தனர். இதில், கவுஷிக் முதல் பந்துலேயே ஆட்டமிழந்தார். இதேபோல், அரவிந்த் ஒரு ரன்னில் அவுட்டானார்.
இவர்களை தொடர்ந்து ஆர்.கவின் 19 ரன்களும், மோகித் ஹரிஹரன் 3 ரன்களும், அபிஷேக் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து, சன்னி சந்து அரை சதம் அடித்து 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். முகமது அத்னான் கான் 15 ரன்களும், அபிஷேக் தன்வர் 17 ரன்களும் ஆகாஷ் சும்ரா 7 ரன்களு் எடுத்தனர்.
இறுதியாக ஜகநாத் ஸ்ரீநிவாஸ் 11 ரன்களுடன் அவுட்டானார். செல்வா குமரன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியின் முடிவில் சேலம் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.
இதைதொடர்ந்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என் இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்க உள்ளது.
+2
- விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
- இன்று மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் திருவீதி உலா வருதலும் நடக்கிறது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும்.
ஆனி பெருந்திருவிழா
அதில் முக்கியமாக ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஆனி பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் சுவாமி-அம்பாள் ரதவீதிகளில் வெள்ளி வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7-ம் திருநாளான நேற்று காந்திமதி அம்பாள் தவழ்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
8-ம் நாள் திருவிழாவான இன்று காலை சுவாமி நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி உள்பிரகாரம் வருதல் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8 மணிக்கு சுவாமி நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இன்று மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் திருவீதி உலா வருதலும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம், வீதி உலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்தலும் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து இரவு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணி முதல் 10.30 மணிக்குள் நாட்டிய நாடகம் நடக்கிறது.
ஆனித்திருவிழாவின் முக்கிய சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள்ளாக சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளல் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்ளாக பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
தேரோட்டத்தை யொட்டி சுவாமி, அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர் உள்ளிட்ட 5 தேர்களையும் தயார்படுத்தும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. ரதவீதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த தேர்கள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு தொடர்ந்து சாரம் கட்டும் பணிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தேரில் பிரம்மா குதிரைகளை செலுத்துவது போன்ற பொம்மைகள் பொருத்தப்பட்டது.
தேர் சட்டங்கள் அமைத்து அலங்கார பதாகைகள் அமைக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் பிடித்து இழுக்க தேரில் 2 வடங்கள் கட்டப்பட்டது. துவார பாலகர்கள் தேரின் 4 பகுதிகளிலும் யாழிகள் அமைக்கும் பணியும் முடிவ டைந்தது. தேரோட்டத்தின்போது மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியா வசிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரதவீதிகள் முற்றிலுமாக மாநகராட்சி தூய்மை பணி யாளர்களால் தூய்மைப் படுத்தப்பட்டு உள்ளது.
- தேசிய அளவிலான இறகு பந்தாட்ட போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது
- நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ரேஷிகா கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
நெல்லை:
தேசிய அளவிலான இறகு பந்தாட்ட போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோ வில் நடைபெற்றது. இதில இந்தியா முழுவதும் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ரேஷிகா கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் சென்னையில் நடைபெற்ற தமிழக வாட்டர் போலோ அணிகளுக்கான தகுதி போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் கவின் சாய் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர்.திருமாறன், முதல்வர் முருகவேள், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன் குமார் மாறும் பூச்சியம்மாள் மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை எல்லாம் அப்போது மாறி மக்களுக்கான ஆட்சி நடைபெறும் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
நெல்லை:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற இந்திய குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ம.தி.மு.க. தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாங்குநேரி மேற்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் வக்கீல் பேச்சிமுத்து தலைமையில் நாங்குநேரியில் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பின்னர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ம.தி.மு.க. தலைவர் வைகோ தமிழ்நாடு முழுவதும் முன்னெடுத்து செல்லும் இந்த நிகழ்ச்சியை நான் மனதார பாராட்டுகிறேன். தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதில் தமிழ்நாடு மிகச்சிறந்த வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் ஆர்.என்.ரவியோ பா.ஜ.க.வை தமிழ்நாட்டில் கால் ஊன்ற வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். அவரின் இந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க. மதவாத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியலை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்.
வருகிற 2024-ல் ராகுல் காந்தி பாரத பிரதமராக நிச்சயமாக வருவார். இப்போது இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை எல்லாம் அப்போது மாறி மக்களுக்கான ஆட்சி நடைபெறும்.
மேலும் யாரையும் கலந்தாலோசிக்காமல் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் அறிக்கை வெளியிட்டார். அடுத்த 4 மணி நேரத்தில் அறிக்கையை நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்கிறார். இவ்வாறு ஒரு தெளிவான சிந்தனை இல்லாமல் மாற்றி மாற்றி பேசி குழப்பத்தை உண்டு பண்ணுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. இப்படிப்பட்ட ஆளுநரை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க. சார்பில் நடைபெறுகிற கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்து போட்டு ஆரம்பித்து வைப்பதில் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுடலைக்கண்ணு, ம.தி.மு.க. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர உவரி ரைமண்ட், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், நாங்குநேரி மேற்கு வட்டார காங்கிரஸ் வட்டார தலைவர் வாகைதுரை, நாங்குநேரி மத்திய வட்டார காங்கிரஸ் தலைவர் ராமஜெயம், ம.தி.மு.க. மாநில நிர்வாகிகள் எழுத்தாளர் மதுரா துரை அழகன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அலெக்ஸ் (களக்காடு தெற்கு), கணேசன் (பாளை மேற்கு), நளன் (பாளை தெற்கு), சங்கரபாண்டி (பாளை கிழக்கு), ம.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, ராமையா, மணி கண்டன் , குமார் சிறுவளஞ்சி மணி, நாங்குநேரி நகர செயலாளர்கள் தி.மு.க. வானமாமலை, ம.தி.மு.க. முத்துராமலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் உறுப்பினர் வசந்தா, மூலைக்கரைப்பட்டி ம.தி.மு.க. செயலாளர் துரை, காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடையார், பாலம்மாள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
- வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நெல்லை மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து அவர்கள் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்தவர் வக்கீல் அசோக்ராஜ் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
இந்நிலையில் இந்த கொலையை கண்டித்தும், வக்கீல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெறுவ தாகவும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நெல்லை மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் இன்று சாலை மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடை பெற்ற போராட் டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார்.
கலந்து கொண்டவர்கள்
மறியலில் துணைத் தலைவர் சீதா, வக்கீல்கள் மணிகண்டன், லெட்சு மணன் ரமேஷ், அருள்ராஜா, விஜயன், சுரேஷ், பால சுப்பிரமணியன், சிதம்பரம், மகேஷ், இசக்கிபாண்டி, அருள்பிரவின், சுதர்சன், மகாராஜன், முத்துராஜ், பிரசன்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பி னர். போராட்டத்தால் பாளை- திருச்செந்தூர் சாலையில் சிறிது நேரம் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- இதையொட்டி மாலையில் அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயண சுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனித் திருவிழா 1-ம் திருநாளான கடந்த 23-ந்தேதி (வெள்ளிக் கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை விழா நடந்தது. இதையொட்டி மாலையில் அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடை களும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவாரங்கள் புடை சூழ ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி மேளதாளங்கள் முழங்க பரிவேட்டையாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கலாநிதி, யோகராஜன் மற்றும் தர்மகர்த்தா குழுவினர் செய்து வருகின்றனர்.






