என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayanaswamy Temple"

    • இதையொட்டி மாலையில் அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயண சுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனித் திருவிழா 1-ம் திருநாளான கடந்த 23-ந்தேதி (வெள்ளிக் கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை விழா நடந்தது. இதையொட்டி மாலையில் அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடை களும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவாரங்கள் புடை சூழ ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி மேளதாளங்கள் முழங்க பரிவேட்டையாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கலாநிதி, யோகராஜன் மற்றும் தர்மகர்த்தா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×