search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MDMK Signature Movement"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை எல்லாம் அப்போது மாறி மக்களுக்கான ஆட்சி நடைபெறும் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

    நெல்லை:

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற இந்திய குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ம.தி.மு.க. தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாங்குநேரி மேற்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் வக்கீல் பேச்சிமுத்து தலைமையில் நாங்குநேரியில் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பின்னர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ம.தி.மு.க. தலைவர் வைகோ தமிழ்நாடு முழுவதும் முன்னெடுத்து செல்லும் இந்த நிகழ்ச்சியை நான் மனதார பாராட்டுகிறேன். தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதில் தமிழ்நாடு மிகச்சிறந்த வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் ஆர்.என்.ரவியோ பா.ஜ.க.வை தமிழ்நாட்டில் கால் ஊன்ற வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். அவரின் இந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க. மதவாத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியலை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்.

    வருகிற 2024-ல் ராகுல் காந்தி பாரத பிரதமராக நிச்சயமாக வருவார். இப்போது இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை எல்லாம் அப்போது மாறி மக்களுக்கான ஆட்சி நடைபெறும்.

    மேலும் யாரையும் கலந்தாலோசிக்காமல் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் அறிக்கை வெளியிட்டார். அடுத்த 4 மணி நேரத்தில் அறிக்கையை நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்கிறார். இவ்வாறு ஒரு தெளிவான சிந்தனை இல்லாமல் மாற்றி மாற்றி பேசி குழப்பத்தை உண்டு பண்ணுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. இப்படிப்பட்ட ஆளுநரை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க. சார்பில் நடைபெறுகிற கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்து போட்டு ஆரம்பித்து வைப்பதில் பெருமைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுடலைக்கண்ணு, ம.தி.மு.க. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர உவரி ரைமண்ட், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், நாங்குநேரி மேற்கு வட்டார காங்கிரஸ் வட்டார தலைவர் வாகைதுரை, நாங்குநேரி மத்திய வட்டார காங்கிரஸ் தலைவர் ராமஜெயம், ம.தி.மு.க. மாநில நிர்வாகிகள் எழுத்தாளர் மதுரா துரை அழகன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அலெக்ஸ் (களக்காடு தெற்கு), கணேசன் (பாளை மேற்கு), நளன் (பாளை தெற்கு), சங்கரபாண்டி (பாளை கிழக்கு), ம.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, ராமையா, மணி கண்டன் , குமார் சிறுவளஞ்சி மணி, நாங்குநேரி நகர செயலாளர்கள் தி.மு.க. வானமாமலை, ம.தி.மு.க. முத்துராமலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் உறுப்பினர் வசந்தா, மூலைக்கரைப்பட்டி ம.தி.மு.க. செயலாளர் துரை, காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடையார், பாலம்மாள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    ×