search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல்- திண்டுக்கல் அணிக்கு 160 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது நெல்லை ராயல் கிங்ஸ்
    X

    டிஎன்பிஎல்- திண்டுக்கல் அணிக்கு 160 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது நெல்லை ராயல் கிங்ஸ்

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது.

    இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இதில், சேலம் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    இந்நிலையில், 23வது லீக் ஆட்டம் இன்று மாலை 7.15 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனால், நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அருண் கார்த்திக், ஸ்ரீரெஞ்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில், ஸ்ரீ நெரஞ்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ராஜகோபால் 13 ரன்கள், அஜிதேஷ் குருசாமி 17 ரன்கள், ரித்தக் ஈஸ்வரன் 18 ரன்கள், அருண் கார்த்திக் 39 ரன்கள், தோனு யாதவ் 2 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில் நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இதனால், 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடி வருகிறது.

    Next Story
    ×