என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் வெற்றி விழா கொண்டாட்டஆர். விஜயாலயன் தலைமையில் நடந்தது
    • 23 ஆயிரம் பேர் பல்வேறு அரசு துறைகளில் இன்றைக்கு பணியாற்றி வருகிறார்கள்

    திருச்சி 

    திருச்சி ராம்ஜி நகர் கே கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் இன்று 43 -வது வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அகாடமி இயக்குனர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவி அகானா பேசும்போது,

    விஜயாலயன் சார் மாதிரி வரலாறு மற்றும் பொருளாதார பாட வகுப்புகள் யாராலும் எடுக்க இயலாது. எப்போதும் வகுப்பில் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்.

    அதே போன்று படித்ததை திரும்ப திரும்ப படிக்க சொல்லுவார். அவரது வழிகாட்டுதல் எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது என்றார்.

    அவரது மாமா நாகராஜன் பேசும்போது,

    இந்த அகாடமியில் படித்த 23 ஆயிரம் பேர் பல்வேறு அரசு துறைகளில் இன்றைக்கு பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். புதியவற்றை கற்றுக் கொண்டே மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதால் மிகுந்த உபயோகமாக இருக்கிறது. எங்களைப் போன்று நீங்களும் தேர்தல் வெற்றி பெற்று உங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் அவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பணியாற்றும் இடங்களில் கையூட்டு பெற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • மண்ணச்சநல்லூர் அருகே இடத்தகராறில்முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
    • பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு

    மண்ணச்சநல்லூர்,  

    மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிழக்கு தெருவை சேர்ந்த சுந்தரம் (வயது53). இவருக்கு கடந்த 35 வருடங்களுக்கு முன் திருமணமாகி மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்த வர் அழகுமுத்து. இவரது மனைவி ஜோதி (60), மகன்கள் பாரதிராஜா (25), ராஜேஷ்(28) மற்றும் தர்மர் (30) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    சுந்தரத்தின் வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு இடம் சம்பந்தமாக அழகு முத்து மகன்களுக்கும் சுந்த ரம் குடும்பத்திற்கும் கடந்த நான்கு மாதமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இது சம்பந்தமாக சிறு கனூர் காவல் நிலையத்தில் சுந்தரம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை செய்தனர்.

    அப்போது சுந்தரத்திடம் இனி எந்த தகராறும் செய்ய மாட்டோம் என அழகுமுத்து மகன்கள் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.

    இந்நிலையில் சுந்தரம் வீட்டில் இருந்தபோது அழகு முத்து மகன்கள் பாரதிராஜா, ராஜேஷ், தர்மர் மற்றும் அழகுமுத்துவின் மனைவி ஜோதி ஆகியோர் சுந்தரம் வீட்டுக்கு வந்து உன் வீட்டி ற்க்கு அருகில் உள்ள இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என்று சொன்னால் நீ கேட்க மாட்டியா என தகராறு செய்து தகாத வார்த்தை களால் திட்டி உள்ளனர்.

    அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாரதிராஜா தான் கையில் வைத்திருந்த அறிவாளால் சுந்தரத்தின் இடது முன்கை, இடது பக்க விலா,வலது முழங்காலில் வெட்டியு ள்ளார்.

    இதில் வலி தாங்காமல் சுந்தரம் அலறி அடித்து சத்தம் போடவே அருகில் இருந்தார்கள் வருவதை பார்த்ததும் பாரதிராஜா அருவாளை காட்டி என்னைக்கி இருந்தாலும் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் ஜோதி மற்றும் பாரதிராஜா, ராஜேஷ், தர்மர் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். புறம்போக்கு இடப்பிரச்சனையில் முதியவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    • கற்பகிரக கதவை மட்டும் பூட்டிவிட்டு அருகில் தேனீர் அருந்துவதற்காக சென்று உள்ளார்.
    • சுமார் 1/2 பவுன் மதிப்புள்ள தாலியை திருடிச் சென்று விட்டனர்

    ராம்ஜி நகர்  

    திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள கள்ளிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் பூசாரியாக மாரிமுத்து என்பவர் இருந்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று மாலை கோவிலை திறந்து பூஜைகள் நடத்தி விட்டு இரவு 7 மணி அளவில் கோவிலின் கற்பகிரக கதவை மட்டும் பூட்டிவிட்டு அருகில் தேனீர் அருந்துவதற்காக சென்று உள்ளார். அச்சமயத்தில் மர்ம நபர் யாரோ? அம்மன் கழுத்தில் இருந்த சுமார் 1/2 பவுன் மதிப்புள்ள தாலியை திருடிச் சென்று விட்டனர். கோயிலின் வெளி கதவை பூட்டிவிட்டு செல்வதற்காக வந்த பூசாரி கர்ப்பகிரக கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் கோவிலில் உள்ள பொருட்களை பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தாலி மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது இது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்துவிட்டு பின்னர் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்கள். 

    • துறையூர் அருகே கோஷ்டி மோதல் வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து கொலை
    • கொலை ெசய்யப்பட்ட தர்மேந்தர் சர்மா மற்றும் கொலையாளிகள் இருவரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள்

    துறையூர்,  

    திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது57).

    இவர் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இவரது வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதற்காக நாமக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை அணுகி உள்ளார்.

    அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர் சர்மா (31), சோட்டு (28), சச்சின் (28) ஆகிய 3 பணியாளர்களை கண்ணையன் வீட்டிற்கு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த மூன்று ேபரும் கண்ணையன் வீட்டின் கீழ் புறத்தில் ஒரு அறையில் தங்கி பணி செய்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சோட்டு, சச்சின் ஆத்திரமடைந்து தர்மேந்தர் சர்மாவை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    இதனை பார்த்த கண்ணையன் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு உள்ளார்.

    இதையடுத்து சோட்டு, சச்சின் கண்ணையனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பின்னர் மயக்க நிலையில் இருந்த தர்மேந்திர ஷர்மாவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக கண்ணையன் அளித்த புகாரின் பேரில் சோட்டு, சச்சின் ஆகிய இருவர் மீதும் துறையூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திர ஷர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்த துறையூர் போலீசார், தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கொலை ெசய்யப்பட்ட தர்மேந்தர் சர்மா மற்றும் கொலையாளிகள் இருவரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆகவே கொலையாளிகள் அந்த மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

    துறையூரில் வடமாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மண்ணச்சநல்லூரில்பள்ளி மாணவன்கால் விரல்கள் துண்டானது
    • மெட்ரிக் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மண்ணச்சநல்லூர்  

    மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள திருநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் நிசாந்த்(வயது15). இவர் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி திருச்சி துறையூர் நெடுஞ்சாலை உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் பள்ளி முடிந்தவுடன் நிசாந்த் வீட்டிற்க்கு செல்வதற்க்காக அரசுப் பேருந்தில் ஏறி உள்ளார்.

    இந்த பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எதுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் பேருந்தின் ஓட்டுநராக முசிறி தாலுக்கா புலிவலம் காலனி தெருவை சேர்ந்த பெரியசாமி (50), நடத்துனராக சமயபுரம் இந்திரா நகர் பாரதியார் தெருவை சேர்ந்த கமல் (42 பணியில் இருந்துள்ளனர்.

    மேலும் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் நிசாந்த் படியில் நின்று செய்துள்ளார்.

    இந்நிலையில் பஸ் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மாணவன் நிசாந்த் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் மாணவனின் இடது காலில் 4 விரல்கள் துண்டானது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலாசார் வழக்கு பதிவு செய்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றனர்.
    • வழக்குப்பதிவு செய்து செந்தில் முருகன், செந்தில் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தார்.

    திருச்சி,  

    திருச்சி எடமலைபட்டிபுதூர் அன்பிலார் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் எம்ஜிஆர் மன்றம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் இவரை வழிமறித்து கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து எடமலைபட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து செந்தில் முருகன், செந்தில் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தார். அவர்களிடமிருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    • மற்றொரு சம்பவத்தில் ரூ.5 லட்சத்தை இழந்த பெண்
    • மோசடி செய்த ஜீவராஜ் ,சுகந்தி, செந்தில்குமார், பிரபா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி, 

    திருச்சி காந்திநகர் எம்.ஜி.ஆர்.தெருவை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 47 ). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 35 பேரும், திருச்சி காந்திநகர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் பேகம், நிலோபர், திருச்சி உடை யான் பட்டி மெயின் ரோடு ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த பாபர் அலி ஆகியோ ரின் சீட்டு நிறுவனத்தில் சீட்டு பணம் கட்டி வந்தனர்.

    அந்த வகையில் அவர்க ளுக்கு ரூ. 36 லட்சம் முதல் தொகை கொடுக்க வேண்டி வந்தது. ஆனால் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த நிலையில் பாபர் அலி தனது வீட்டை காலி செய்யும் தகவல் கிடைத்தது உடனே பாதிக்கப்பட்ட மக்கள் விஜயலட்சுமி தலைமையில் சென்று அவரிடம் சீட்டு பணத்தை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுங்கள் என கேட்டு தகராறு செய்த னர்.

    இருந்தபோதிலும் சீட்டு பணத்தை சம்பந்தப்பட்டவ ர்கள் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து பாதிக்க ப்பட்ட விஜயலட்சுமி மாந கர குற்றப்பிரிவு போலீ சில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பட்டதாரி பெண்ணிடம் மோசடி

    திருச்சி கே.கே.நகர் ரங்கா நகர் 3-வது கிராஸ் பகுதி யைச் சேர்ந்தவர் மணிக ண்டன். இவர் வெளிநாட்டில் (சிங்கப்பூர்) வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிதா (வயது 38). இளங் கலை பட்டதாரி.

    இவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி அப்பகுதி யை சேர்ந்த ஜீவராஜ் என்ப வர் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் வேலையும் வாங்கி கொடுக்க வில்லை. பணமும் கொடுக்க வில்லை.

    இதுகுறித்து கேட்டபோது ஜீவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சுகந்தி, செந்தி ல்குமார், பிரபா ஆகியோர் அவரை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜிதா கே.கே.நகர் குற்றப்பி ரிவு போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா மோசடி செய்த ஜீவராஜ் ,சுகந்தி, செந்தில்குமார், பிரபா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருச்சி பொன்மலையில்போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து ரெயில்வே வேலையில் சேர முயற்சி
    • 4 பேர் மீது வழக்குபதிவு- போலீசார் நடவடிக்கை

    திருச்சி,  

    திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்ல துரை. இவர் ரெயில்வே ஊழியர். கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிடுகிறார்.

    இவர் உயிருடன் இருக்கும் போதே முதல் மனைவி பழனியம்மாள் மற்றும் பிள்ளைகள் ராஜா, ராதா , சதீஷ்குமார் ஆகியோர் செல்லத்துரையை விட்டு பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.

    இதனால் செல்லத்துரை சரோஜா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண் டார். சரோஜாவுக்கு கதிர் வேல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரெயில்வேயில் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்காக முதல் மனைவி பழனிய ம்மாள் அவரது பிள்ளைகள் ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகியோர் 2-ம் தாரத்து மகன் கதிர்வேலை சட்ட வாரிசாக காட்டாமல் மறைத்து மோசடி செய்து வாரிசு சான்றிதழ் பெற்று ள்ளனர்.

    மேலும் அந்த வாரிசு சான்றிதழை கொடுத்து ரெயில்வே வேலை பெறு வதற்கு முயற்சி செய்து ள்ளனர்.

    இதனை அறிந்த கதிர் வேல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காவல்துறையி னரிடம் புகார் அளித்தார்.அதன் மீது நடவடிக்கை இல்லை என்பதால் திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 5-ல் வழக்கு பதிவு செய்ய கூறி புகார் செய்தனர்.

    புகார் மனுவை விசாரித்த நீதிமன்றம் பழனியம்மாள், ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த பொன்மலை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டதன் பேரில் பொன்மலை போலீசார் பழனியம்மாள், ராஜா, ராதா, சதீஷ்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லூரி மாணவன் மாயம்

     திருச்சி

     திருச்சி மாவட்டம் மணப்பாறை உசிலம்பட்டி தவிட்டுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஜீவானந்தம் (வயது 21) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி., ஐ.டி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர.

    நண்பர்களிடமும் விசாரித்தனர்.ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து சண்முகம் மணப்பாறை போலீசில் புகார் செய்தார்.அதில் மாயமான தனது மகனை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோபி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தீராத வயிற்று வலியால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
    • நோயின் பிடியிலிருந்து பூரணமாக குணமடைய இயலவில்லை.

    திருச்சி,  

    திருச்சி தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல் நாயக்கன்பட்டி திருச்சி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி (வயது 40). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதிலும் நோயின் பிடியிலிருந்து பூரணமாக குணமடைய இயலவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார்.

    பின்னர் கணவர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சாந்தி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் இருந்து மாலை நேரத்தில் தேஜஸ் ரெயில் திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.
    • ஒவ்வொரு நாளும் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    திருச்சி:

    திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும், பகல் நேரத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

    ஒரு ரெயிலில் முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் 1660 பேர் பயணிக்க இயலும். ஆனால் ஒரு ரெயில் இயக்கப்படாத பட்சத்தில் அந்த பயணிகளை சென்னைக்கு அழைத்து செல்ல ஒரு தனி விமானமும், 84 கார்களும், 50 பேருந்துகளும் தேவைப்படுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் கால விரையமும் ஏற்படுகிறது.

    கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் திருச்சி-சென்னை இடையிலான பல்லவன் விரைவு ரெயில் பகல்நேர பயணத்தை தொடங்கியது.

    அது கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து பயண தூரத்தை நீட்டித்து காரைக்குடி-சென்னை இடையே திருச்சி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது இந்த நீட்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதனை மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கோரிக்கை விடுத்து வருகிறார். இதற்கிடையே ரெயில் பயணிகளின் வசதிக்காக கடந்த 2015-16-ம் ஆண்டு சென்னை-திருச்சி இடையிலான ரெயில் தடம் இருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது.

    அதன் பின்னரும் கூட பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து எந்தவித புதிய ரெயில்களும் இயக்கப்படவில்லை. திருச்சியில் இருந்து நேரடியாக காலை 11 மணிக்கு சோழன் விரைவு ரெயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    மதுரையில் இருந்து மாலை நேரத்தில் தேஜஸ் ரெயில் திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. அதிலும் 50 விழுக்காடு பயணிகள் திருச்சியில் இருந்து தான் சென்னைக்கு பயணிக்கின்றனர்.

    22 பெட்டிகள் கொண்ட பல்லவன் விரைவு ரெயிலில் மொத்தமாக 1660 பயணிகள் பயணிக்கும் வசதி உள்ளது.

    இதில் 2022-23 ஆம் ஆண்டு கணக்கின்படி காரைக்குடியில் இருந்து 92 ஆயிரத்து 298 பயணிகள்,

    புதுக்கோட்டையில் இருந்து 57ஆயிரத்து 584 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக புள்ளி விரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால் திருச்சி ஜங்சனில் இருந்து 2 லட்சத்து 32ஆயிரத்து 528 பயணிகளும், ஸ்ரீரங்கத்தில் இருந்து 9ஆயிரத்து 421 பயணிகளும், லால்குடியில் இருந்து 36ஆயிரத்து 52 பயணிகளும் சென்னைக்கு பயணித்துள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    அதற்கு ஏற்ப கூடுதல் ரெயில்கள் இதுவரை இயக்கப்படுவதில்லை. ரெயிலில் பயணிக்க இடம் கிடைக்காதவர்கள், விமானங்களையும், கார்களையும், பொது பேருந்துகளையும் பயன்படுத்தி சென்னை நோக்கி பயணிக்கின்றனர்.

    பகல் நேரத்தில் சென்னைக்கு செல்லும் பயணிகள், அங்கு பணிகளை முடித்துக்கொண்டு இரவு திருச்சிக்கு திரும்பும் வகையில் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். இதனால் பயணிகளுக்கு பொருள் செலவும் கணிசமாக குறையும்.

    பகல் நேரத்தில், திருச்சில் இருந்து சென்னைக்கு எப்போது கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்? என்ற கேள்வியை தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

    திருச்சி-சென்னை இடையே குறைவான தூரம் என்பதால் புதிய ரெயில்களை இயக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை.

    திருச்சியிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் செல்லும் அதிவிரைவு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 5.40 மணிக்கு திருச்சியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை செவ்வாய்க்கிழமைகளிலும் இயக்க பரிந்துரை செய்துள்ளோம்.

    அதுபோல திருச்சியில் இருந்து சென்னை வழியாக சூரத் நகரத்திற்கு வாரம் ஒரு முறை அதிவிரைவு ரெயிலை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய ரெயில்களை இயக்குவது குறித்து ரெயிவே வாரியம் தான் முடிவு செய்யும் என்றார்.

    இதுகுறித்து சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பாலாஜி கூறும்போது, திருச்சியில் ஆன்மீக தளங்கள் அதிகமாக உள்ளது. அதற்கு சென்று உடனடியாக வீடு திரும்புவதற்கு கூடுதல் ரெயில்கள் பகலில் இயக்கினால் வசதியாக இருக்கும் என்றார். திருச்சி வியாபாரி சுலைமான் கூறும்போது கடைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சென்னைக்கு செல்லும்போது விடுதிகளில் தங்கி நேரத்தை விரயமாக்காமல் இருக்க பகல் நேரத்தில் கூடுதல் ரெயில் இயக்குவது அவசியம் என்றார்.

    • ஸ்ரீரங்கத்தில் இளம்பெண் கடத்தல்
    • இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை

     திருச்சி  

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் கோகுலம் தெருபகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகள் ராதா வயது 26 இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை இதற்கிடையே ராதாவை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் காதலித்து வந்த தகவல் கிடைத்தது ஆகவே அவர் ராதாவை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..

    இதுகுறித்து காந்தி ஸ்ரீரங்கம் போலீஸ் புகார் செய்தார போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×