என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் வெற்றி விழா கொண்டாட்டம்
    X

    திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் வெற்றி விழா கொண்டாட்டம்

    • என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் வெற்றி விழா கொண்டாட்டஆர். விஜயாலயன் தலைமையில் நடந்தது
    • 23 ஆயிரம் பேர் பல்வேறு அரசு துறைகளில் இன்றைக்கு பணியாற்றி வருகிறார்கள்

    திருச்சி

    திருச்சி ராம்ஜி நகர் கே கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் இன்று 43 -வது வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அகாடமி இயக்குனர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவி அகானா பேசும்போது,

    விஜயாலயன் சார் மாதிரி வரலாறு மற்றும் பொருளாதார பாட வகுப்புகள் யாராலும் எடுக்க இயலாது. எப்போதும் வகுப்பில் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்.

    அதே போன்று படித்ததை திரும்ப திரும்ப படிக்க சொல்லுவார். அவரது வழிகாட்டுதல் எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது என்றார்.

    அவரது மாமா நாகராஜன் பேசும்போது,

    இந்த அகாடமியில் படித்த 23 ஆயிரம் பேர் பல்வேறு அரசு துறைகளில் இன்றைக்கு பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். புதியவற்றை கற்றுக் கொண்டே மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதால் மிகுந்த உபயோகமாக இருக்கிறது. எங்களைப் போன்று நீங்களும் தேர்தல் வெற்றி பெற்று உங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் அவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பணியாற்றும் இடங்களில் கையூட்டு பெற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    Next Story
    ×