search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் படிகட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து கால் விரல்கள் துண்டானது
    X

    பஸ் படிகட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து கால் விரல்கள் துண்டானது

    • மண்ணச்சநல்லூரில்பள்ளி மாணவன்கால் விரல்கள் துண்டானது
    • மெட்ரிக் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மண்ணச்சநல்லூர்

    மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள திருநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் நிசாந்த்(வயது15). இவர் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி திருச்சி துறையூர் நெடுஞ்சாலை உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் பள்ளி முடிந்தவுடன் நிசாந்த் வீட்டிற்க்கு செல்வதற்க்காக அரசுப் பேருந்தில் ஏறி உள்ளார்.

    இந்த பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எதுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் பேருந்தின் ஓட்டுநராக முசிறி தாலுக்கா புலிவலம் காலனி தெருவை சேர்ந்த பெரியசாமி (50), நடத்துனராக சமயபுரம் இந்திரா நகர் பாரதியார் தெருவை சேர்ந்த கமல் (42 பணியில் இருந்துள்ளனர்.

    மேலும் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் நிசாந்த் படியில் நின்று செய்துள்ளார்.

    இந்நிலையில் பஸ் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மாணவன் நிசாந்த் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் மாணவனின் இடது காலில் 4 விரல்கள் துண்டானது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலாசார் வழக்கு பதிவு செய்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×