என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும்.
    • இந்த விழா வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    திருச்சி

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைவார்.

    அதன்பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருள்வார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெறும். அப்போது நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    பின்னர், ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் நம்பெருமாள் தினமும் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணிவரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • இன்று காலை வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார்.
    • காய்கறி லோடு ஏற்றி வந்த மினி சரக்கு லாரி இவர் மீது மோதியது.

    ராம்ஜிநகர்

    திருச்சி மாவட்டம் மணி கண்டம் அருகே நாகமங்க லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சங்கர். இவரது மகன் சிவா. இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு ெசன்றார். திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து நாகமங்கலம் பகு திக்கு காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வந்த மினி சரக்கு லாரி இவர் மீது மோதியது.

    இதில் சரக்கு லாரியில் சிக்கிய ேமாட்டார் சைக்கிள் சுமார் 50மீட்டர் தூரம் இழுத்து சென்று, சாலை யோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் சிவா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச் சம்பவம் அறிந்து மணிகண்டம் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறை உதவியுடன் மினி சரக்கு லாரியில் சிக்கி இருந்த சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மதுரையில் இருந்து திருச்சி, திருச்சியில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அம்பேத்கர் நகர் அருகே உள்ள கட் ரோட்டில் திரும்பி செல்கிறது. இதனால் அதிகளவு இங்கு விபத்து ஏற்படுகிறது. விபத்தை தவிர்க்க போக்குவரத்தை கண்காணிக்க 24 மணி நேரமும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.

    • நெல்மூட்டைகளுக்கான வரவுத் தொகையில் இருந்து பணத்தை எடுப்பதற்காக வந்தனர்.
    • சமூக ஆர்வலர்கள் பொதுமக்களிடையே வங்கியின் செயல்பாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    உப்பிலியபுரம்

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு விவசாயிகள் தங்களது சம்பா உழவு நடவுப்பணிகளுக்காக தங்களது கணக்கிலுள்ள அரசு நெல்கொள்முதல் மையங்களில் போடப்பட்ட நெல்மூட்டைகளுக்கான வரவுத் தொகையில் இருந்து பணத்தை எடுப்பதற்காக வந்தனர்.

    அப்பொழுது வங்கியில் பணம் இல்லை என்றும் மறுநாள் வந்து பணம் எடுத்துக்கொள்ளுமாறும் வங்கி ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று வங்கிக்கு விவசாயிகள் சென்றனர். அப்போது வங்கி மேலாளர் வரவில்லை என்றும், வந்த பின் எடுத்துக்கொள்ளுமாறும் ஊழியர்கள் கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசின் விதவை உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை ஆகியவை நிலுவையில் உள்ள கடன்களை கட்டினால் தான் தரப்படும் என வங்கியில் கூறப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

    பேரூராட்சியின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்ட சிறு குறு தொழில் முனைவோர்களுக்கான கடன் தொகையும் நிலுவையில் உள்ள கடனுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மாதாந்திர செலுத்துத் தொகை மட்டும் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சமூக ஆர்வலர்கள் பொதுமக்களிடையே வங்கியின் செயல்பாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    வங்கியில் வடமாநில ஊழியர்களின் ஆதிக்கத்தால் கிராமப்புற பொதுமக்கள் விவசாயிகள் மொழி பிரச்சனையுடன், வங்கி செயல்பாடுகளில் காலதாமதம், பொறுப்பற்ற பேச்சுகள், சேவை குறைபாடுகள் உள்ளன. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் 10 கிமீ தொலைவிலுள்ள சோபனபுரத்திலுள்ள தனியார் வங்கியில் கணக்கை துவக்கி வரவு செலவு வைத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    • உலக அமைதிக்கான மாபெரும் ஓவியப் போட்டி திருச்சி குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

    திருச்சி

    திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக அமைதிக்கான மாபெரும் ஓவியப் போட்டி திருச்சி குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சாசன தலைவர் லயன் முகமது ஷபி தலைமை தாங்கினார்.

    பள்ளி மாணவ மாணவிகளுக்கு தகுதி என்ற தலைப்பில் தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்தை ஆத்மா மருத்துவமனை மனநல ஆலோசகர் கரன்லூயிஸ் நடத்தினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் பிரசன்ன வெங்கடேஷன், பொருளாளர் ரெங்கராஜன், இயக்குனர் பாஸ்கரன்,இயக்குனர் குமார், சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், உறுப்பினர் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன், சாசன உறுப்பினர் ராஜூ ஜோசப் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பித்தனர்.

    இறுதியில் செயலாளர் பிரசன்ன வெங்கடேஷன் நன்றியுரை கூறினார்.

    • அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.
    • இன்று காலை இந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது

    திருச்சி

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதல் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த வண்ணம் இருப்பர். அவ்வாறு வரும் பக்தர்கள், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் நீராடி விட்டு, உடல் தூய்மை பெற்று அரங்கனை தரிசிக்க செல்வர். மேலும் இங்கு வேத விற்பன்னர்கள் எப்போதும் இருப்பதால் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களும் இங்குதான் அதிகளவில் வருவர். இங்கு காவிரியில் நீராடிவிட்டு புரோகிதர்களின் உதவியுடன் தர்ப்பணம் கொடுப்பர். இதன் காரணமாக அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    இந்த அம்மாமண்டபம் படித்துறையில் 70 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று உள்ளது. அம்மா மண்டபத்தின் பெரும்பாலான பகுதிக்கு நிழல் தரும் விருட்சகமாக இது விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக, இன்று காலை இந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது. கிளை முறியும் சத்தம் கேட்டு, தர்ப்பணம் கொடுத்தவர்களும், காவிரியில் குளித்துக்கொண்டிருப்பவர்களும் உஷாராகி ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் மரக்கிளை முறிந்து விழுந்த இடத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் கிளைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சிரமப்பட்டு மீட்டனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து அங்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் உள்ள பழமை வாய்ந்த அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்தது ஏதோ பெரிய அசம்பாவத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

    • வரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 500 பணத்தை திருடிக் கொண்டு ஓட முயன்றார்.
    • உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    திருச்சி

    கரூர் மாவட்டம் குளித்தலை சத்திரம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு (வயது 33). இவர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வெளி நோயாளிகள் வார்டு பகுதியில் அவர் சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 500 பணத்தை திருடிக் கொண்டு ஓட முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைன தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் கைதானவர் திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் ( 58 ) என்பது தெரியவந்தது

    • கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • கோடீஸ்வரனுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது.

    திருவெறும்பூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள வேப்பூரை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி லதா (35) .

    இந்த தம்பதியருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின்னர் கோடீஸ்வரன் மனைவி குழந்தைகளைப் பிரிந்து கடலூருக்கு சென்று விட்டார். பின்னர் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரை கடந்த 8 மாதத்திற்கு முன்பு கோடீஸ்வரன் 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அவரோடு 4 நாட்கள் மட்டுமே வாழ்ந்து விட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோடீஸ்வரன் மீண்டும் சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பினார்.

    கோடீஸ்வரனுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த 28-ந்தேதி திருவெறும்பூர் அருகே கணேசபுரத்தில் உள்ள சாந்தி வீட்டிற்கு கோடீஸ்வரன் வந்தார்.

    அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட 2-வது மனைவி அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கோடீஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தகவல் அறிந்த லதா திருச்சி விரைந்தார். பின்னர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கணவரின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி மனு அளித்தார். ஆனால் இதற்கு சாந்தி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் அளித்துள்ள இன்னொரு மனுவில் கோடீஸ்வரன் கடந்த 8 வருடத்திற்கு முன்பே லதாவை விவாகரத்து செய்துள்ளார். எனவே உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சாந்தி தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து கோடீஸ்வரன் உடலை பிரேத பரிசோதனை கிடங்கில் வைத்து விட்டு போலீசார் ஆலோசித்தனர். ஆனால் எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.

    இதைத்தொடர்ந்து இன்று ( செவ்வாய்க்கிழமை) துவாக்குடி அரசு மருத்துவமனையில் திருவெறும்பூர் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

    அப்போது முதல் மனைவி லதாவை விவகாரத்து செய்ததால் அவரிடம் உடலை ஒப்படைக்க முடியாது, அதே போல் 2-வதாக சாந்தியை திருமணம் செய்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

    எனவே இறந்தவரின் வாரிசு என்ற அடிப்படையில் முதல் மனைவின் மகன், மகளிடம் கோடிஸ்வரனின் உடலை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

    • பணத்தை எண்ணி தனது பேக்கில் வைத்துக் கொண்டு பஸ்ஸில் இரவு படுத்து தூங்கினார்.
    • அருகாமையில் வைத்திருந்த பணப்பையை காணாமல் திடுக்கிட்டார்.

    திருச்சி

    வேலூரில் இருந்து பய ணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் திருச்சி நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சில் ராணிப்பேட்டை களத்தூர் பஜனை கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (வயது 43) என்பவர் கண்டக்டராக பணியாற்றி னார்.

    இந்த பஸ் நள்ளிரவு 3 மணி அளவில் திருச்சி மத் திய பஸ்நிலையம் வந்தது. பின்னர் பயணிகள் அனை வரும் இறங்கிய பின்னர் கண்டக்டர் கணக்கு வழக்கு களை சரி பார்த்துக் கொண்டு பணத்தை எண்ணி தனது பேக்கில் வைத்துக் கொண்டு பஸ்ஸில் இரவு படுத்து தூங்கினார்.

    பின்னர் காலை 6 மணிக்கு எழுந்து பார்த்த போது அருகாமையில் வைத்திருந்த பணப்பையை காணாமல் திடுக்கிட்டார். அந்த பணப்பையில் ரூ. 15 ஆயிரத்து 799 பணம் மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 688 மதிப்புள்ள பஸ் டிக்கெட்டுகள், டிக்கெட் வழங்கும் எந்திரம், சார்ஜர் ஆகியவை இருந்தது.

    இதுகுறித்து சுந்தரம் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரசோலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாலை நேரம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
    • தொடர் சாரல் மழையின் காரணமாக திருச்சி மாநகர வாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    திருச்சி

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. பின்னர் மாலை நேரம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    இதில் அதிகபட்சமாக மணப்பாறை பகுதியில் 17 மில்லி மீட்டர், துவாக்குடி 6, சமயபுரம்- 4, திருச்சி டவுன் 1.4, பொன்னணியாறு 2.4 மழை பதிவாகியுள்ளது.

    தொடர் சாரல் மழையின் காரணமாக திருச்சி மாநகர வாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இங்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.

    மண் மேடுகளாக காட்சியளிக்கும் சாலைகள் மழையில் குண்டும் குழியுமாக, சேரும் சகதியுமாக மாறி இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. பல இடங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சகதியில் விழுந்து எழுவது வாடிக்கையாக்கி உள்ளது. ஆகவே பணிகள் நிறைவடைந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
    • தங்கநகை மற்றும் வெள்ளி சாமான்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    திருவெறும்பூர்

    திருவெறும்பூர் அருகே உள்ள பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் துரைராஜ் (வயது 37) .இவர் பெல் நிறுவனத்தில் கெமிக்கல் டிபார்ட்மெண்டில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் அவரது வீட்டை உடைத்து வீட்டில் பீரோவில் இருந்த தங்கநகை மற்றும் வெள்ளி சாமான்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து துரைராஜ் பெல் காவல் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி புகார் செய்தார்.

    இதன் பேரில் பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் வாழவந்தான் கோட்டையை சேர்ந்த சார்லஸ் (36) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது துரைராஜ் வீட்டில் கொள்ளை அடித்ததை ஒத்துக் கொண்டார். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 5 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை பெல் போலீசார் பறிமுதல் செய்தனர். சார்லசை திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • இதே போல் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளும் அரிய வகை உயிரினங்கள் கடத்தி செல்கின்றனர்.
    • அப்போது 14 பயணிகள் உரிய அனுமதியின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    கே.கே.நகர

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உள்பட பல பொருட்களை கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

    இதே போல் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளும் அரிய வகை உயிரினங்கள் கடத்தி செல்கின்றனர்.

    அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்வ தற்காக நேற்று காலை ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 14 பயணிகள் உரிய அனுமதியின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க வில்லை.

    இதே போல் இன்றும் 17 பயணிகள் சிக்கினர். அவர்களிடம் சுங்கதுறை அதிகாரிகள் உடமைகளை தவிர்த்து செல்ல விரும்பி னால் பயணம் செய்யலாம் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 5 பயணிகள் மட்டும் விமா னத்தில் பயணம் செய்தனர். மீதமுள்ள 12 பயணிகளும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    நேற்று 14 பயணிகளும் இன்று காலை 12 பயணிகளும் என மொத்தம் 26 பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50).

    இவர் தீவட்டிப்பட்டி அடுத்த நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் காடையாம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் டியூஷன் நடத்தி வருகிறார்.

    இவரிடம் காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவிகள் டியூஷன் பயின்று வருகின்றனர். இதில் 2 மாணவிகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர் ராஜமாணிக்கம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர். 

    ×