search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "royal tree"

    • அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.
    • இன்று காலை இந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது

    திருச்சி

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதல் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த வண்ணம் இருப்பர். அவ்வாறு வரும் பக்தர்கள், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் நீராடி விட்டு, உடல் தூய்மை பெற்று அரங்கனை தரிசிக்க செல்வர். மேலும் இங்கு வேத விற்பன்னர்கள் எப்போதும் இருப்பதால் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களும் இங்குதான் அதிகளவில் வருவர். இங்கு காவிரியில் நீராடிவிட்டு புரோகிதர்களின் உதவியுடன் தர்ப்பணம் கொடுப்பர். இதன் காரணமாக அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    இந்த அம்மாமண்டபம் படித்துறையில் 70 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று உள்ளது. அம்மா மண்டபத்தின் பெரும்பாலான பகுதிக்கு நிழல் தரும் விருட்சகமாக இது விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக, இன்று காலை இந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது. கிளை முறியும் சத்தம் கேட்டு, தர்ப்பணம் கொடுத்தவர்களும், காவிரியில் குளித்துக்கொண்டிருப்பவர்களும் உஷாராகி ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் மரக்கிளை முறிந்து விழுந்த இடத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் கிளைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சிரமப்பட்டு மீட்டனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து அங்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் உள்ள பழமை வாய்ந்த அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்தது ஏதோ பெரிய அசம்பாவத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

    • அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது.
    • திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக அரசு, வேம்பு மரங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னைகள் நடைபெற்றது.

    பின், அரச மரத்திற்கும் வேட்டியும், வேப்பமரத்திற்கு புடவையும் கட்டி பூஜைகள் செய்யப்பட்டு வேப்பமரத்திற்கு சிவாச்சாரியார் மூலம் தாலி கட்டப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்டால் திருமண தடை உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    முடிவில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மரத்தை உடனடியாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை.
    • மரம் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்த பின்னர் நினைவு சின்னம் வைப்போம்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ராதா நகர் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை ஜி.எஸ்.டி. மெயின் ரோட்டில் இணையும் இடத்தில் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய அரச மரம் இருந்தது.

    சுரங்கப்பாதை பணிக்காக ஜி.எஸ்.டி. சாலையில் இருந்த அரசமரம் நெடுஞ்சாலைத் துறையினரால் வெட்டி அகற்றப்பட்டது. இதுநாள் வரை பல லட்சம் பேருக்கும் நிழலாக இருந்த அரச மரம் வெட்டப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த மரத்தை வெட்டாமல் பணியை தொடர்ந்து இருக்கலாம் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அரச மரம் வெட்டப்பட்டதற்கு சமூகநல ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே அரச மரம் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் அமைப்பு சார்பில் இன்று காலை மரம் இருந்த இடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த மரத்தை உடனடியாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பசுமைத்தாயகம் மாநில துணை பொது செயலாளர் ஐநா கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சுரங்கப்பாதை பணிக்காக அரசமரம் வெட்டி அகற்றப்பட்டது. இதனை வேராடு பிடுங்கி வேறு இடத்தில் நடமுடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வனத்துறையினர் மூலம் மரக்கன்று நடப்படும். இதுவரை சுரங்கப்பாதை பணிகள் 70 சதவீதம் முடிந்து உள்ளது. ரெயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப்பாதையை இணைக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற மே மாதத்தில் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இப்போது இந்த அரச மரத்தை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் மரம் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்த பின்னர் நினைவு சின்னம் வைப்போம் என்றனர்.

    • மரத்தில் வழக்கமாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைத்துவிடும்.
    • 2 மாதங்களாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் விநாயகர் கோவிலில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான அரச மரம் உள்ளது. இந்த மரத்தில் வழக்கமாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைத்துவிடும்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த அரச மரம் பட்டுப் போய் விடுமோ என பொதுமக்கள் கவலையில் உள்ளனர். இது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் அல்லது, விபரம் தெரிந்த விவசாயிகள், இந்த 200 வயது மரத்தை காப்பாற்றி தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 3 மீட்டர் சுற்றளவு பருமனான இந்த அரச மரத்தின் கிளைகள் மெயின்ரோடு உள்பட நாலா புறமும் படர்ந்து சாலைப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் குளிர் நிழலும், இனிய காற்றும் வழங்கி பயனளிக்கிறது.
    • இந்த மரத்திலிருந்து சாலை நோக்கி வளர்ந்த 2 பெரிய கிளைகள் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது.

    திருவையாறு:

    திருவையாறு -கல்லணை மெயின் ரோடில் கூத்தாடி மதகு எனும் இடத்தில் காவிரி பாசன வாய்க்கால் தலைமதகு உள்ளது. இதனருகில் வடகரையில் அரச மரம் உள்ளது. இந்த மரத்தினருகில் முனியாண்டவர் கோவில் உள்ளது. சுமார் 3 மீட்டர் சுற்றளவு பருமனான இந்த அரச மரத்தின் கிளைகள் மெயின்ரோடு உள்பட நாலா புறமும் படர்ந்து சாலைப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் குளிர் நிழலும், இனிய காற்றும் வழங்கி பயனளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று இந்த மரத்திலிருந்து சாலை நோக்கி வளர்ந்த 2 பெரிய கிளைகள் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது சமயபுரத்திலிருந்து திருவையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த கணவன்- மனைவி மீது விழுந்ததில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலையோர மின்இணைப்புகளைத் துண்டித்து கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் திருவையாறு-கல்லணை சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    • மகா கணபதி கன்னிமார் சாமி கோவிலில் வேம்பு அரச மரங்களுக்கு திருமண வைபவம் நடைபெற்றது.
    • வெள்ளகோவில் மற்றும் தீத்தம் பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது தோஷங்கள் நிவர்த்தியாக வழிபட்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் உள்ள மகா கணபதி கன்னிமார் சாமி கோவிலில் வேம்பு அரச மரங்களுக்கு திருமண வைபவம் நடைபெற்றது.

    தோஷங்கள் நிவர்த்தியாக 12 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று நேற்று காலை வேம்பு அரச மரங்களுக்கு திருமண வைபவம் நடைபெற்றது. இதில் வெள்ளகோவில் மற்றும் தீத்தம் பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது தோஷங்கள் நிவர்த்தியாக வழிபட்டு சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தீத்தாம்பாளையம், வெள்ளகோவில் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×