என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இறந்த கணவருக்கு சொந்தம் கொண்டாடிய 2 மனைவிகள்: மகன், மகளிடம் உடலை ஒப்படைக்க முடிவு
    X

    இறந்த கணவருக்கு சொந்தம் கொண்டாடிய 2 மனைவிகள்: மகன், மகளிடம் உடலை ஒப்படைக்க முடிவு

    • கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • கோடீஸ்வரனுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது.

    திருவெறும்பூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள வேப்பூரை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி லதா (35) .

    இந்த தம்பதியருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின்னர் கோடீஸ்வரன் மனைவி குழந்தைகளைப் பிரிந்து கடலூருக்கு சென்று விட்டார். பின்னர் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரை கடந்த 8 மாதத்திற்கு முன்பு கோடீஸ்வரன் 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அவரோடு 4 நாட்கள் மட்டுமே வாழ்ந்து விட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோடீஸ்வரன் மீண்டும் சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பினார்.

    கோடீஸ்வரனுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த 28-ந்தேதி திருவெறும்பூர் அருகே கணேசபுரத்தில் உள்ள சாந்தி வீட்டிற்கு கோடீஸ்வரன் வந்தார்.

    அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட 2-வது மனைவி அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கோடீஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தகவல் அறிந்த லதா திருச்சி விரைந்தார். பின்னர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கணவரின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி மனு அளித்தார். ஆனால் இதற்கு சாந்தி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் அளித்துள்ள இன்னொரு மனுவில் கோடீஸ்வரன் கடந்த 8 வருடத்திற்கு முன்பே லதாவை விவாகரத்து செய்துள்ளார். எனவே உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சாந்தி தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து கோடீஸ்வரன் உடலை பிரேத பரிசோதனை கிடங்கில் வைத்து விட்டு போலீசார் ஆலோசித்தனர். ஆனால் எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.

    இதைத்தொடர்ந்து இன்று ( செவ்வாய்க்கிழமை) துவாக்குடி அரசு மருத்துவமனையில் திருவெறும்பூர் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

    அப்போது முதல் மனைவி லதாவை விவகாரத்து செய்ததால் அவரிடம் உடலை ஒப்படைக்க முடியாது, அதே போல் 2-வதாக சாந்தியை திருமணம் செய்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

    எனவே இறந்தவரின் வாரிசு என்ற அடிப்படையில் முதல் மனைவின் மகன், மகளிடம் கோடிஸ்வரனின் உடலை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×