என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • பஞ்சபூதங்களில் திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில் ஒன்று
    • மிகவும் அழகுற, தத்ரூப மாக வடிவமைக்கப்பட் டுள்ள இந்த சிலையை பக்தர்கள் வருகிற 5-ந் தேதி வரை பார்வையிடலாம்.

    திருச்சி

    பஞ்சபூதங்களில் திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில். சைவத் திருத்தலங்களில் மிக முக்கி யமான தலமாக விளங்கும் இக்கோவிலில் எப்போதும் பக்தர்கள் வருகை நிறைந்து இருக்கும். சிவனை வழிபடப் பூலோகம் வந்த அம்பிகை காவேரியில் நீர் எடுத்து லிங்கம் வடித்து வழிபட்டார் என்றும், நீரால் ஆனதால் அந்த லிங்கம் ஜம்புகேஸ்வரர் எனப்பெயர் பெற்றது என்கி றது புராணம்.

    சக்திவாய்ந்த நீர் தலமாக விளங்கும் இங்கு ஜம்பு கேஸ்வரர், அகிலாண் டேஸ்வரி அம்மன் ஆகியோர் பிரதான தெய்வங்களாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்ற னர்.

    இங்குள்ள அகிலர்டேஸ் வரி அம்மன் சந்நிதி வளாகத் தில் புதிதாக 7 அடி உயரத் தில் பைபரால் ஆன அகிலாண்டேஸ்வரி அம் மன் சிலை ஒன்று வைக்கப் பட்டுள்ளது. பந்தல் அமைத்து, வண்ண விளக்கு களால் அலங்காரம் செய்யப் பட்டுள்ளது. இதை பக்தர் கள் வியப்புடன் பார்வை யிட்டு வணங்கி செல்கின்ற னர்.

    மிகவும் அழகுற, தத்ரூப மாக வடிவமைக்கப்பட் டுள்ள இந்த சிலையை பக்தர்கள் வருகிற 5-ந் தேதி வரை பார்வையிடலாம். அதன் பின்னர் பாதுகாப்பு டன் எடுத்து வைக்கப்பட்டு ஆண்டுதோறும் ேகாவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் காட்சிப்படுத்தப் படுத்தப்பட உள்ளது.

    சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அண்மையில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் போது அமைக்கப் பட்டிருந்த கொலுக் காட்சி யில், மாங்காடு காமாட்சி யம்மன், மதுரை மீனாட்சி யம்மன், பட்டீஸ்வரம் துர் கையம்மன், திருவானைக்கா வல் அகிலாண்டேஸ்வரி அம்மன் உள்ளிட்ட தமிழ கத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சக்தி தலங்களில் உள்ள 9 அம்மன் சிலை களின் மாதிரிகள் பைபரால் செய்யப்பட்டு, காட்சிப்படுத் தப்பட்டன.

    நவராத்திரி திருவிழா நிறைவு பெற்ற பின்னர், அந்த சிலைகள் தொடர்பு டைய கோவில்களுக்கு அனுப்பப்பட்டன. அதன் படி எடுத்துவரப்பட்ட திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் சிலையைதான் இந்த சிலை.

    • துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது

    திருச்சி

    துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசுக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரபட்டி, வெங்கட்நாயகன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுபட்டி, கல்லுபட்டி, ஏ.பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளகாம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி, பழையபாளையம் ஆகிய இடங்களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று மணப்பாறை செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

    முசிறி துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் முசிறி, சிங்காரச்சோலை, பார்வதிபுரம், பஸ் நிலையம், கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, ஹவுசிங் யூனிட், தண்டலைப்புத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பளாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சி பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, கருப்பனாம்பட்டி, அலகரை, கோடியம்பாளையம்,

    • இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • உள்ளே சென்று பார்த்த பொழுது கிருத்திகா ஏற்கனவே இறந்துபோனது தெரிய வந்தது.

    திருச்சி

    திருச்சி அரியமங்கலம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கிருத்திகா (வயது 19).

    இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்கு செல்லவில்லை என்றும் இந்த நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    மதியம் சேகர் வீட்டிற்கு வந்து மகள் கிருத்திகாவை அழைத்துள்ளார். ஆனால் கதவு திறக்காததை தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்த பொழுது அங்கு உள்ள சீலிங் பேனில் துப்பட்டாவால் கிருத்திகா தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக சேகர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது கிருத்திகா ஏற்கனவே இறந்துபோனது தெரிய வந்தது. சேகர் இது குறித்து அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இதில் 20 வயது முதல் 45 வயதுடையவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

    திருச்சி

    திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்போது 51 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 56 ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஊர்க்காவல் படையில் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 20 வயது முதல் 45 வயதுடையவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தகுதியுடையவர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கக்கூடாது. மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

    விருப்பம் உடையவர்கள் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் 'காவல் சார்பு ஆய்வாளர் ஊர்க்காவல் படை அலுவலகம் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகம், திருச்சி' என்ற முகவரிக்கு வருகிற 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 8-ந் தேதி காலை 7 மணிக்கு திருச்சி சுப்பிரமணியபுரம், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளார்.

    • தற்போது திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது.
    • இந்த விமானத்தில் வியட்நாமில் இருந்து 50 பயணிகள் வந்தனர்.

    கே.கே. நகர்

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதனை தொடர்ந்து தற்போது திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவையானது வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் இருந்தும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வியட்நாமில் இருந்தும் விமான சேவைகள் இயக்கப்படுகிறது.

    விமான சேவை தொடங்கியதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11.27 மணிக்கு வியடாமில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் வந்தது. இந்த விமானத்தில் வியட்நாமில் இருந்து 50 பயணிகள் வந்தனர்.

    பின்னர் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்பட்டது. வியட்நாமுக்கு முன்பதிவு செய்து இருந்த 100 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக விமான சேவை துவக்க நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை பொது மேலாளர் ஜலால் மற்றும் விமான நிறுவன பொறுப்பாளர் ஹேமசேகர், அதிகாரி இளவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மே லும் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை விமான நிறுவனத்தின் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

    விழாவில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி குத்து விளக்கு ஏற்றி விமான சேவையை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    • விபத்துக்குள்ளான பஸ்களின் டிரைவர்கள் இறங்கி நின்று ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • ஒன்றன்பின் ஒன்றாக வந்த 5 பஸ்களும், ஒரு லாரியும் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு உண்டானது.

    திருச்சி:

    சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி ஓட்டினார். பஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூர் அடுத்த செட்டியாபட்டி, கோரையாற்று பாலம் அருகே வந்தது.

    அப்போது பின்னால் ஒரு டாரஸ் லாரி வந்தது. பஸ்சும், லாரியும் ஒன்றுக்கொன்று முந்தி செல்ல முயன்றன. இதில் தனியார் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து செட்டியாபட்டி, கோரையாற்று பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    அப்போது அந்த பஸ்சை பின் தொடர்ந்து வந்த 2 தனியார் பஸ்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதின. இதனால் பஸ்களில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

    இதையடுத்து விபத்துக்குள்ளான பஸ்களின் டிரைவர்கள் இறங்கி நின்று ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற இன்னொரு லாரி விபத்துக்குள்ளாகி நின்ற மூன்றாவது பஸ்சின் பின்பக்கம் மோதியது. அதன் தொடர்ச்சியாக இந்த விபத்துக்கள் குறித்து அறியாத மேலும் இரண்டு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மோதின. 

    பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது.

    பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது.

    ஒன்றன்பின் ஒன்றாக வந்த 5 பஸ்களும், ஒரு லாரியும் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு உண்டானது. இந்த விபத்தில் 2 டிரைவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் என 7 பேருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பயணிகள் 30-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை வேளையில் போக்குவரத்து அதிகமாக இருந்ததால் வாகனங்கள் அனைத்து நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

    இதுபற்றி எடமலைப்பட்டி புதூர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விமானத்தில் வியட்நாமில் இருந்து 50 பயணிகள் வந்தனர்.
    • வியட்நாமுக்கு முன்பதிவு செய்து இருந்த 100 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதனை தொடர்ந்து தற்போது திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவையானது வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் இருந்தும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வியட்நாமில் இருந்தும் விமான சேவைகள் இயக்கப்படுகிறது.

    விமான சேவை தொடங்கியதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11.27 மணிக்கு வியடாமில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் வந்தது. இந்த விமானத்தில் வியட்நாமில் இருந்து 50 பயணிகள் வந்தனர்.

    பின்னர் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்பட்டது. வியட்நாமுக்கு முன்பதிவு செய்து இருந்த 100 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக விமான சேவை துவக்க நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை பொது மேலாளர் ஜலால் மற்றும் விமான நிறுவன பொறுப்பாளர் ஹேமசேகர், அதிகாரி இளவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை விமான நிறுவனத்தின் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

    • புதிய அரசு குவாரிகளை இயக்க கோரி திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது
    • மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது

    திருச்சி,

    தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி சுப்பிரம ணியபுரத்தில் பொதுப்ப ணித்துறை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தொடர் காத்திருப்பு முற் றுகை போராட்டம் மாநில தலைவர் செல்ல.ராஜாமணி தலைமையில் நடந்தது.

    செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி உள்பட 200-க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், மணல் லாரி டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதில் ஐம்பதாயிரத் துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்க ணக்கான லாரி ஓட்டுனர்க ளின் வாழ்வா தாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழகம் முழு வதும் அதிக எண்ணிக் கையில் புதிய மணல் குவாரி களை இயக்கிட வேண்டும்,

    ஒவ்வொரு மணல் குவா ரியிலும் உள்ள விற்பனை கிடங்குகளில் குறைந்தபட்சம் 200 லாரிகளுக்கு லோடு செய்ய அனுமதிக்க வேண் டும்,

    மணல் லாரிகளுக்கு வாகன சோதனையின் போது ஆன்லைன் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண் டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோரிக்கை களை நிறைவேற்றாவிட் டால் தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுக்க நகர் முழுவதும் 186 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன
    • போலீஸ் கமிசனர் காமினி தகவல்

    திருச்சி,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி தெப்பக்குளம் பகுதியில் மாநகர காவல் துறை சார்பில் காவல் உதவி மையத்தினை, மாநகர போலீஸ் கமிசனர் காமினி இன்று திறந்துவைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி மாநகர பகுதிகளில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் சரக்குகள் ஏற்றுவது மற்றும் இறக்குவதை தவிர்த்து, இரவு 11 மணிக்கு மேல் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு உள்ளது. தற்காலிக சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து முறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர்கள் தங்களது உடைமைகளையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும், அது சம்மந்தமாக புகார் கொடுக்கவும், என்.எஸ்.பி. ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆளினர்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்றச் சம்பவம் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    என்.எஸ்.பி.ரோடு பெரியகடைவீதி சந்திப்பு, மலைகோட்டை வாசல், மெயின்கார்டு கேட் நந்திகோவில் தெரு சந்திப்பு, சிங்காரதோப்பு பூம்புகார் ஜங்சன் அருகில், பெரியகடைவீதி கரீம்

    ஸ்டோர் அருகில், பெரியகடை வீதி ஆகிய 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தெப்பக்குளம் என்.எஸ்.பி. ரோடு புறக்ககாவல் நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் அதிநவீன சுழலும் டோன் கேமராக்கள் இரண்டும், காந்திமார்க்கெட் ஆர்ச், பெரியகடை வீதி, சூப்பர் பஜார், ஜாபர்ஷா தெரு, மதுரை ரோடு, நந்திகோயில் தெரு, மேலப்புலி வார்டுரோடு, என்.எஸ்.பி. ரோடு, சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் என மொத்தம் 186 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுஉள்ளது .

    இவற்றை என்.எஸ்.பி. ரோடு ரகுநாத் சந்திப்பில் மானிட்டர்கள் அமைக்கப்பட்டு அதை இயக்குவதற்கு தனித்தனியே காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாவண்ணம் திருச்சி மாநகரில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாக நாள் முழுவதும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று மேயர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
    • கொசு ஒழிப்பு ஆலோசனை கூட்டத்தில் பேச்சு

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப் படுத்துவது தொடர்பாக மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டல தலைவர்கள் துர்கா தேவி, ஜெயா நிர்மலா மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்திதில் மேயர் அன்பழகன் பேசியதாவது:-

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 65 வார்டுகளிலும் தலா 50 போ் வீதம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேவையற்ற இடங்களில் சேகரமாகியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா்.

    கொசுப் புழுக்களை அழிக்கும் எண்ணெய் பந்துகளையும் கழிவுநீா் செல்லும் ஓடைகளில் வீசி தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். சுகாதாரப் பணியாளா்களுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த இடத்திலும் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருச்சியில் கல்லறை திருநாளை முன்னிட்டு கல்லறைகளில் மலர் தூவி, படையலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
    • அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது

    திருச்சி,

    இறந்தவர்களை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கின்றனர்.

    கல்லறை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை மேலப்புதூர் ஆரோக்கிய அன்னை பேராலயம், பாலக்கரை சகாயமாதா தேவாலயம், எடத்தெரு பழைய கோவில், மெயின்கார்டுகேட் லூர்து அன்னை ஆலயம், புத்தூர் பாத்திமா மாதா சர்ச், பொன்மலை ஜோசப் ஆலயம், கிராப்பட்டி புனித தெரசா ஆலயம், காட்டூர் அந்தோணியார் கோவில், குழந்தை யேசு கோவில், ஸ்ரீரங்கம் அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ கோவில்களில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் முன்னோர்களின் ஆன்ம நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    திருப்பலியில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் அதற்கு பின்னர், மேலப்புதூர் உத்திரிக்க மாதா, மார்சிங்பேட்டை ஆங்கிலோ இந்தியன், கோர்ட் ரவுண்டானா அருகில் மற்றும் அரிஸ்டோ ரவுண்டான அருகில் உள்ள சி.எஸ்.ஐ., காட்டூர், மணல்வாரித்துறை, ஆண்டாள் வீதி, ஜி கார்னர், ெபான்மலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்றனர்.

    அங்கு கல்லறைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, பூக்களை தூவி, இறந்தவர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை படையல் வைத்தனர். பின்னர் மெழுகுதிரி ஏந்தி, உடலால் எங்களை விட்டுப் பிரிந்தாலும் உள்ளத்தில் எப்போதும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைவு கூர்ந்து, முன்னோர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    அதன் பின்னர் முன்னோர்கள் நினைவாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு, ஆடைகள் உள்ளிட்ட அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை செய்தனர்.

    கல்லறை திருநாள் நடைபெறுவதை முன்னிட்டு மேலப்புதூர், மார்சிங்பேட்டை, கோர்ட் ரவுண்டானா, அரிஸ்டோ ரவுண்டானா, ஜி கார்னர் உள்ளிட்ட கல்லறை தோட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • திருச்சி மாவட்டத்தில் 349 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர்.
    • 11 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் இருப்பிடங்கள் மற்றும் ரவுடிகளின் கூட்டாளிகளின் இருப்பிடங்களை சோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 166 ரவுடிகளின் வீடுகள் மற்றும் 3 ரவுடிகளின் கூட்டாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த ரவுடி விக்னேஷ், தீன தயாளன், அவரது கூட்டாளி மணிகண்டன் என்கிற மன்னாரு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, திருச்சி மாவட்டத்தில் 349 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர். அதில் பல்வேறு வழக்குகளில் 32 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் 11 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். 152 பேருக்கு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும், 60 பேருக்கு நன்னடத்தை பிணைய பத்திரம் பெற உதவி கலெக்டருக்கு வேண்டுகோள் கடிதம் கொடுக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்க மீதமுள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம் என்றனர்.

    ×