search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் - மேயர்
    X

    டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் - மேயர்

    • திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று மேயர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
    • கொசு ஒழிப்பு ஆலோசனை கூட்டத்தில் பேச்சு

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப் படுத்துவது தொடர்பாக மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டல தலைவர்கள் துர்கா தேவி, ஜெயா நிர்மலா மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்திதில் மேயர் அன்பழகன் பேசியதாவது:-

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 65 வார்டுகளிலும் தலா 50 போ் வீதம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேவையற்ற இடங்களில் சேகரமாகியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா்.

    கொசுப் புழுக்களை அழிக்கும் எண்ணெய் பந்துகளையும் கழிவுநீா் செல்லும் ஓடைகளில் வீசி தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். சுகாதாரப் பணியாளா்களுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த இடத்திலும் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×