திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக அமைதிக்கான ஓவியப்போட்டி

உலக அமைதிக்கான மாபெரும் ஓவியப் போட்டி திருச்சி குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக அமைதிக்கான ஓவியப்போட்டி
Published on

திருச்சி

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக அமைதிக்கான மாபெரும் ஓவியப் போட்டி திருச்சி குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சாசன தலைவர் லயன் முகமது ஷபி தலைமை தாங்கினார்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தகுதி என்ற தலைப்பில் தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்தை ஆத்மா மருத்துவமனை மனநல ஆலோசகர் கரன்லூயிஸ் நடத்தினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் பிரசன்ன வெங்கடேஷன், பொருளாளர் ரெங்கராஜன், இயக்குனர் பாஸ்கரன்,இயக்குனர் குமார், சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், உறுப்பினர் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன், சாசன உறுப்பினர் ராஜூ ஜோசப் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பித்தனர்.

இறுதியில் செயலாளர் பிரசன்ன வெங்கடேஷன் நன்றியுரை கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com