என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாவட்டத்தில் சாரல் மழை
    X

    திருச்சி மாவட்டத்தில் சாரல் மழை

    • மாலை நேரம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
    • தொடர் சாரல் மழையின் காரணமாக திருச்சி மாநகர வாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    திருச்சி

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. பின்னர் மாலை நேரம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    இதில் அதிகபட்சமாக மணப்பாறை பகுதியில் 17 மில்லி மீட்டர், துவாக்குடி 6, சமயபுரம்- 4, திருச்சி டவுன் 1.4, பொன்னணியாறு 2.4 மழை பதிவாகியுள்ளது.

    தொடர் சாரல் மழையின் காரணமாக திருச்சி மாநகர வாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இங்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.

    மண் மேடுகளாக காட்சியளிக்கும் சாலைகள் மழையில் குண்டும் குழியுமாக, சேரும் சகதியுமாக மாறி இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. பல இடங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சகதியில் விழுந்து எழுவது வாடிக்கையாக்கி உள்ளது. ஆகவே பணிகள் நிறைவடைந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×