என் மலர்
திருச்சிராப்பள்ளி
- திருச்சியில் கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவர், மைத்துனருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
- கள்ளக்காதலன் வெறிச்செயல்
திருச்சி,
திருச்சி கிராப்பட்டி மதுரை ரோடு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 34). இவர் அப்பகுதியில் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரீத்தா வுக்கும் எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த வெங்கட் (33) என்பவருக்கிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு அவரது மைத்துனரான, மற்றொரு திருநாவுக்கரசு (வயது 29)ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கட் வீட்டுக்கு சென்று அவரிடம் சத்தம் போட்டு உள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த வெங்கட் திடீரென்று அரிவாளை எடுத்து 2 பேரையும் வெட்டினார். இந்த சம்பவத்தில் காயம டைந்த 2 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருநா வுக்கரசு எடமலைப்பட்டிப் புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
- 3 பயணிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
கே.கே.நகர்,
மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு, ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணிகள்3 பேரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் மலேசியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இந்த நிலையில் அவர்களை சோதனை செய்தபோது அந்த 3 பயணிகளும் தனது உடலில் மறைத்து, பேஸ்ட் வடிவிலான தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. ரூ.1.85 கோடி மதிப்பிலான 3.01 கிலோ கடத்தல் தங்கத்தை அவர்களிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்த 3 பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- துறையூர் அருகே அதிகமான மாத்திரைகள் சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
- தலை சுற்றல் நோய் காரணமாக பரிதாப முடிவு
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராசு (46). இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி (36) என்கிற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் புவனேஸ்வரிக்கு தலை சுற்றல் நோய் இருந்ததாகவும், இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்ததா கவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று தலை சுற்றல் அதிகமாக இருந்ததால் விரக்தி அடைந்த புவனேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளார். இதனால் அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அவரது உறவினர்கள் புவனேஸ்வரியை மீட்டு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக துரைராசு கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் அருகே தலை சுற்றல் நோய் காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- காவல்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.
- திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் இந்த மாவட்டத்தில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை.
மண்ணச்சநல்லூர்:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் பாதயாத்திரை நடத்தி வருகிறார்.
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் லால்குடி அருகே உள்ள ஆங்கரை பிள்ளையார்கோவில் அருகில் தனது பாதயாத்திரை தொடங்கினார்.
பின்னர் மலையப்பபுரம், சந்தைப்பேட்டை வழியாக லால்குடி ரவுண்டானா பகுதியில் அந்த யாத்திரை நிறைவு பெற்றது.
பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது;-
லால்குடி தொகுதியில் இளைஞர்கள் அதிக அளவில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறினார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை.
காவல்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் இன்று வரை அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என தங்களை பலப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் இந்த மாவட்டத்தில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை.
டாஸ்மாக் மதுவினால் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நான்கில் மூன்று பங்கு டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அதிகம் பாதிப்பு இல்லாத கள்ளுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது,
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை எடுத்து இந்து சமய அறநிலைத்துறை பெருந்திட்டவளாகம் கட்டுகிறேன் என்ற பெயரில் ரூ. 422 கோடியை எடுத்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஸ்வரூப தரிசனம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடக்கிறது. குறைந்த பட்சம் ரூ. 1000 இருந்தால் தான் கோவில் பக்கம் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலைத்துறை என்ற ஒரு துறையே இருக்காது. குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
முன்னதாக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் வரவேற்று பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பார்வையாளர் யோகிதாசன், முன்னாள் மாவட்ட தலைவர் சேது அரவிந்த், மாநில பேச்சாளர் பாடகர் வி.என். தனசேகரன், மாவட்ட நிர்வாகிகள் ரவீந்திரன், குமார், சண்முகம், சூரியகாந்த், ஒன்றிய தலைவர்கள் கணேசன், கண்ணன், பாலகிருஷ்ணன், கார்த்தி, முருகேசன், மற்றும் கோவிந்தராஜ், இலக்கியா, சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலத் தலைவருமான சங்கரய்யா காலமானார்.
- பலர் கலந்துக் கொண்டு சங்கராய்யா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொட்டியம்
விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலத் தலைவருமான சங்கரய்யா காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொட்டியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் தலைமையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி , தி.மு.க. நகர செயலாளர் விஜய்ஆனந்த், தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் காடுவெட்டி அகதீஸ்வரன், முன்னாள் காங்கிரஸ் நகர தலைவர்கள்
மோகன் , அய்யாசாமி, ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர் ,கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஏலூர்பட்டி முருகன், முருகானந்தம், கட்டுமான சங்க தோளூர்பட்டி தேவராஜ், திருநாராயணபுரம் தர்மலிங்கம், சமூக ஆர்வலர் நீலமேகம், சந்தப்பேட்டை அஸ்ரப் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சங்கராய்யா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
- திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரச லூர் ஊராட்சி ஒன்றிய தொ டக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
- தொட்டியம் பசுமை மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தை களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள், பேனா, புத்தகங்கள் வழங்கி கொண்டாடினர்.
தொட்டியம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரச லூர் ஊராட்சி ஒன்றிய தொ டக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
தொட்டியம் அருகேயுள்ள திருநாராயணபுரம் மற்றும் அரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குழந்தை கள் தின விழாவை முன்னிட்டு தொட்டியம் பசுமை மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தை களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள், பேனா, புத்தகங்கள் வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தொட்டியம் பசுமை மக்கள் இயக்கத்தினர் செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பள்ளி குழந்தை கள் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள், அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
மேலும் கொடுக்கப்பட்ட மரக்கன்றுகளை நல்ல முறையில் வளர்த்து வரும் குழந்தைகளை கண்டறிந்து வரும் ஆண்டில் நடைபெற உள்ள குழந்தைகள் தின விழாவில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் மற்றும் தொட்டி யம் பசுமை மக்கள் இயக்கத்தினர் தெரிவித்த னர்.
- கார்த்திகை முதல்நாளில், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கினார்கள் ஏராளமான பக்தர்கள்.
- கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.
திருச்சி
கார்த்திகை முதல்நாளில், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கினார்கள் ஏராளமான பக்தர்கள்.
கார்த்திகை மாதம் முதல் தேதி வந்துவிட்டாலே, அற்புதமான கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் விரதம் மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். கார்த்திகைப் பிறப்பில் விரதம் மேற்கொண்டு, தை மகர ஜோதியில் தரிசிக்கும் பக்தர்களும் உண்டு. ஒரு சிலர், கார்த்திகை மாதத்தில் விரதம் மேற்கொண்டு, மார்கழி தொடங்குகிற தருணத்தில், மார்கழிக்கு முன்னதாக என்றெல்லாம் அய்யப்ப சுவாமியைத் தரிசிக்கக் கிளம்புவார்கள்.
அய்யப்ப சுவாமிக்கு விரதம் மேற்கொள்பவர்கள், குருசாமி துணையுடன் மலைக்கு இருமுடி அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கார்த்திகை தொடங்கியது முதலே கடும் விரதம் மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள் பக்தர்கள்.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.
அதில் முக்கியமாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று அய்யப்பனுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.
அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று (16-ம் தேதி) திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
இதையொட்டி திருச்சி முதலான பல ஊர்களிலும், காலையிலேயே கோவில்களில் பக்தர்கள் குவியத் தொடங்கினார்கள்.
இதையொட்டி, திருச்சி கண்டோன்மெண்ட் அய்யப்பன் கோவில், மலைக்கோட்டை, சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட ஏராளமான கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து சரண கோஷங்கள் முழங்க மாலையணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.
மேலும், கரூர், பெரம்பலூர்,அரியலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில் மற்றும் பல கோயில்களிலும் மாலையணிந்து கொண்டு விரதத்தைத் பக்தர்கள் தொடங்கினார்கள்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில், சமீபத்தில் மழை வெளுத்து வாங்கியதால், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை கார்த்திகை முதல் நாளில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழையை பொருட்படுத்தாமல், காலையிலேயே விரதம் இருக்கத் தொடங்கி விட்டார்கள் அய்யப்ப பக்தர்கள்.
- திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டியில் நூலக வாசகர் வட்டத்தில் 56- வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டியில் நூலக வாசகர் வட்டத்தில் 56- வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ராமராஜ் மற்றும் புரவலர் செல்லமுத்து முன்னிலை வகித்தனர். கீரம்பூர் நூலகர் நூர்அஹமது வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற துறையூர் ரோட்டரி சங்க தலைவரும் புள்ளியியல் துறை துணை இயக்குனராக பணி நிறைவு பெற்ற தில்லைநாயகம் சிறப்புரையாற்றினார். முடிவில் செங்காட்டுப்பட்டி நூலகர் கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார்.
- பஸ்சின் குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் இருந்த 2 பேரும் இறங்கி பஸ்சில் ஏறினர்.
- வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
சிங்கை:
பாபநாசத்தில் இருந்து அம்பை, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை வழியாக நெல்லைக்கு நேற்று மாலையில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது.
பஸ்சை குமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்த ரெஜி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். தென்காசி மாவட்டம் இடைகாலை சேர்ந்த கண்ணன் (35) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையம் அருகே பஸ் சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் பஸ்சின் குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னால் இருந்த 2 பேரும் இறங்கி பஸ்சில் ஏறினர்.
இதனை தொடர்ந்து பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது டிரைவர் மற்றும் கண்டக்டர் அந்த 2 பேரையும் கண்டித்ததாகவும், அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த நபர்கள் 2 பேரும் தங்களை பஸ்சில் ஏற்றிவிட்ட மற்றொரு நபரை வரவழைத்தனர். அங்கு அரிவாளுடன் வந்த அந்த நபர் வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் பஸ் நிற்கவும், அதில் புகுந்து டிரைவரை சரமாரி வெட்டினார். அப்போது அவர்களை தடுக்க வந்த கண்டக்டருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த 3 பேரும் தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த 2 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே டிரைவர்-கண்டக்டர் வெட்டப்பட்டதை கண்டித்து இன்று அதிகாலை பாபநாசம் போக்குவரத்து கழக பணிமனையில் மற்ற டிரைவர்கள்-கண்டக்டர்கள் பஸ்களை இயக்காமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், அரிவாள் வெட்டில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும், படுகாயம் அடைந்த டிரைவர் உடல்நலம் குணமாகும் வரையிலும் அவரது பெயரை விடுப்பு எடுத்தவர்கள் பட்டியலில் சேர்க்க கூடாது என்று கூறினர். அவர்கள் அதிகாலை 3.30 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் அவதிபட்டனர்.
திருச்சி,
திருச்சி மண்ணச்ச நல்லூர் அருகே உள்ள மேல காவல் கார தெருவை சேர்ந்தவர் மணிமேகலை என்கிற மணிகண்டன் (வயது 30) திருநங்கையான இவர் திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகே நேற்று இரவு நடந்து சென்றார்.
பின்னர் திடீரென மாயமான அவர் இரவு 9 மணி அளவில் அங்குள்ள முட்புதரில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சக தோழி இறந்த தகவல் அறிந்த திருநங்கைகள் நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கடந்த கத்தி மற்றும் ஆணுறைகளை கைப்பற்றினர்.
கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மணிமேகலை கடந்த 4 ஆண்டுகளாக இரவு நேரங்களில் அதே பகுதியில் நடமாடி வந்துள்ளார்.
ஆகவே அவரை புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் பின்னர் ஏற்பட்ட தகராறில் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த நபர் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நபராக இருக்கலாம் என கருதுகிறார்கள். ஆகவே மணிமேகலையின் தோழிகள் மூலமாக கொலையாளியை துப்பு துலக்கி வருகின்றனர்.
பொதுவாக மணிமேகலை மட்டுமல்லாமல் வேறு திருநங்கைகளும் அந்த ஆற்றுப் பாலத்தில் இருப்பார்கள். ஆகவே மணிமேகலைக்கு நெருக்கமான நபர்கள் யார்? யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விமானத்தின் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து புதுடெல்லி, புனே, மும்பை நகரங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.
- விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து பயணிகள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சேவைகளாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று உள்நாட்டு சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து மேற்கண்ட விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து வேறு விமானங்கள் மூலமோ அல்லது தொடர் விமானங்கள் மூலமோ பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இன்று காலை 74 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது விமானத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் ஏற்றப்பட்ட பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து விமானம் புறப்படும் நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இருந்து வந்தது. ஏற்கனவே இந்த விமானத்தின் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து புதுடெல்லி, புனே, மும்பை நகரங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்ட றியப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் எப்போது புறப்படும்? என்றும், தற்போது சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன செய்ய இருக்கிறார்கள்? என்பது குறித்தும் இதுவரை பயணிகளுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ள கவுரி, ராஜேந்திரன் மற்றும் ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் குறிப்பாக பல்வேறு புதிய முறைகளில் தங்கத்தை கடத்தி வரும் பயணிகளிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதில் திருச்சி சுங்கத்துறையில் பணியாற்றி வரும் டிரைவர் ஒருவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றி வரும் 3 சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி விமான நிலைய சுங்கத்துறையில் பணியாற்றி வந்த துணை கமிஷனர்கள் இளமதி மற்றும் ராம்குமார், உதவி கமிஷனர் ஆக பணியாற்றி வந்த சிவகுமார் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ள கவுரி, ராஜேந்திரன் மற்றும் ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் தங்க கடத்தலை தடுக்கும் வகையில் மேலும் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்படும் நிலை உள்ளதாக தெரிய வருகிறது.






