அதிகமான மாத்திரைகள் சாப்பிட்ட பெண் சாவு

துறையூர் அருகே அதிகமான மாத்திரைகள் சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார் தலை சுற்றல் நோய் காரணமாக பரிதாப முடிவு
அதிகமான மாத்திரைகள் சாப்பிட்ட பெண் சாவு
Published on

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராசு (46). இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி (36) என்கிற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் புவனேஸ்வரிக்கு தலை சுற்றல் நோய் இருந்ததாகவும், இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்ததா கவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று தலை சுற்றல் அதிகமாக இருந்ததால் விரக்தி அடைந்த புவனேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளார். இதனால் அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து அவரது உறவினர்கள் புவனேஸ்வரியை மீட்டு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக துரைராசு கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் அருகே தலை சுற்றல் நோய் காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com