என் மலர்
திருச்சிராப்பள்ளி
- நந்தவனம் பவுண்டேசன் ஆண்டு தோறும் சாதனை மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.
- விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் என்.நல்லுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு பேசினார்
திருச்சி
நந்தவனம் பவுண்டேசன் ஆண்டு தோறும் சாதனை மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா திருச்சியில் நடந்தது. நிகழ்வில் பொறிஞர் ப. நரசிம்மன் எழுதிய நற்சுவைக் கவிதைகள், நம்மை மேம்படுத்தும் நற்பண்புகள் ஆகிய 2 நூல்கள் வெளியிடப்பட்டது.
விழாவுக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 ன் 2024- 25ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸரும் இனிய நந்தவனம் கவுரவ ஆலோசகரமான கே. சீனிவாசன் தலைமை தாங்கினார். நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் என்.நல்லுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு பேசினார். அப்போது, இது போன்ற விருது வழங்கும் விழா எதிர்காலத்தில் மாணவர்கள் இன்னும் நிறைய சாதிக்க உந்து கோலாக இருக்கும் என்றார்.
திருச்சி பாட்சா பிரியாணி உரிமையாளர் அபுபக்கர் சித்திக், ஜெர்மனி தமிழருவி வானொலி நிறுவனர் நைனை விஜயன், சசிகலா விஜயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிஞர் பா.சேதுமாதவன், பேராசிரியர் ஜா.சலேத் இருவரும் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். பல துறைகளில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்கள் வி. ல. ரக்ஷ்தா. (ஈரோடு) வி.ல.நந்தனராஜ் (ஈரோடு) வி.ஜெயச்செல்வன் (திருச்சி) சரக்ஷ்னா (திருச்சி) எஸ். அவினாஷ். (திருச்சி) ஆகியோருக்கு சாதனை மாணவர் விருது 2023 வழங்கப்பட்டது.
முன்னதாக நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா. தனபால் வரவேற்றார். பொறிஞர் ப. நரசிம்மன் ஏற்புரை நிகழ்த்தினார், முடிவில் நித்யா கோபாலன் நன்றி கூறினார்.
- நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுமக்களுக்கு கட்டுரை போட்டியும், வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது.
- போட்டிகளில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். இந்த தகவலை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி
திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜோசப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது நூலகத்துறையின் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுமக்களுக்கு கட்டுரை போட்டியும், வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது.
ஒவ்வொரு நூலகத்திலும் காலை 11 மணிக்கு நடைபெறும் கட்டுரை போட்டியில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பொதுநூலகத்துறையின் கீழ் செயல்படும் நூலகத்துக்கு சென்று கலந்து கொள்ளலாம். அதிகபட்சம் 2 மணி நேரம் வழங்கப்படும்.
கட்டுரைப்போட்டியின் தலைப்பு புத்தக வாசிப்பு என்ன செய்யும்? என்பதாகும். இதேபோல் புத்தக வாசிப்பு பற்றிய வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது. 4 வரிகளுக்கு மிகாமல் வாசகம் எழுதி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 8825790004, 9487317509 ஆகிய வாட்ஸ்-அப் எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்ப வேண்டும்.
போட்டிகளில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். இந்த தகவலை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மற்றும் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் ெதரிவித்துள்ளார்.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மற்றும் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, முத்தையம்பாளையம், கொப்புமாபுரி, ராஜபாளையம், உப்பிலியபுரம், ஈச்சம்பட்டி, வைரிசெட்டிபாளையம், பசலிக்கோம்பை, ஏரிக்காடு, சூக்லாம்பட்டி, கோம்பை, வளையப்பட்டி, கோட்டப்பாளையம், விசுவை வடக்கு, தெற்கு, பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டி, தென்புறநாடு பூதக்கால், செம்பூர், கம்பூர், கருவங்காடு, கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, நச்சிலிப்பட்டிபுதூர், பெரிய சித்தூர், பெரும்பரப்பு, புதூர், சோளமாத்தி, தண்ணீர்பள்ளம், தளுகை, டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி புதூர், டி.பாதர்பேட்டை, டி.வெள்ளாளப்பட்டி, நாகநல்லூர், வெங்கடாசலபுரம், மாராடி, புடலாத்தி ஒ.கிருஷ்ணாபுரம், பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், காஞ்சேரிமலை, ஒடுவம்பட்டிபுதூர், ஓசரப்பள்ளி, புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் ெதரிவித்துள்ளார்.
- வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21-ந்தேதி மின் தடை
- காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துறையூர்
துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21-ந்தேதி செவ்வாய்கிழமை அன்று கொப்பம்பட்டி, து,ரெங்கநாதபுரம் மற்றும் த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர். காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம். மருவத்தூர், செல்லிபாளையம். செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்த நிலையில் சவுந்தரவல்லிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
- சரவணன் கொலைக்கு பழிக்குப்பழியாக ராதாகிருஷ்ணன் கொல்லப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 48) பெயிண்டர்.இவரது மனைவி சவுந்தரவல்லி (45) இவர் திருவெறும்பூர் எழில் நகர் பகுதியில் உள்ள டெக்கரேஷன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
அதே நிறுவனத்தில் லால்குடி பரமசிவபுரம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(53) மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சவுந்தரவல்லிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் சரவணனுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ராதா கிருஷ்ணன் சரவணனுக்கு அதிக அளவில் மது வாங்கி கொடுத்தார். சரவணன் போதையில் மயங்கியதும் அவரை வெட்டி கொலை செய்தார்.
இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் ராதாகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்தார். அதன் பின்னர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி டாஸ்மாக் பாட்டில் மது அருந்தினார். அப்போது தன்னுடன் வேலை பார்த்த திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த பிரவீன், சேதுபதி ஆகியோரும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்தனர்.
பின்னர் ராதாகிருஷ்ணன் தன்னை கீழக்குமரேசபுரத்தில் விடுமாறு கூறியுள்ளார். பின்னர் இருவரும் அவரை ஏற்றிக்கொண்டு திருவெறும்பூர் மன மகிழ் மன்றம் அருகே சென்றனர். அப்போது ராதாகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது.
இதில் காயம் அடைந்த ராதாகிருஷ்ணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுபற்றி போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பிரவீன், சேதுபதி மற்றும் அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த மணி சர்மா ஆகியோர் சேர்ந்து ராதாகிருஷ்ணனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராதாகிருஷ்ணன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரவீன், சேதுபதி, கீர்த்திவாசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சரவணன் கொலைக்கு பழிக்குப்பழியாக ராதாகிருஷ்ணன் கொல்லப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று இரவு மனைவியிடம் குவாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
- அங்கு செந்தில், கிரேன் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளார்.
துறையூர்
பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவருக்கு திருமணமாகி சரஸ்வதி (36) என்கிற மனைவியும், 9 வயதுள்ள ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் செந்தில் துறையூர் அருகே கிழக்குவாடி கிராமத்தில் உள்ள குவாரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு மனைவியிடம் குவாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அங்கு செந்தில், கிரேன் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து துறையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார், இறந்த நிலையில் இருந்த செந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் தற்கொலைக்கான காரணம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி மாவட்டம் துறையூரில் லாட்டரி விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்கு மாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதனையடுத்து வெள்ளையனை பிடித்து தனிப்படை போலீசார் துறையூர் காவல் நிலை யத்தில் ஒப்ப டைத்தனர்.
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் லாட்டரி விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்கு மாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து எஸ்.பி-யின் தனிப்படை போலீசார் துறையூர்-அம்மாபட்டி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தே கத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசார ணை செய்ததில்,அவர் அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் (47) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ப னை செய்து கொண்டி ருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து வெள்ளையனை பிடித்து தனிப்படை போலீசார் துறையூர் காவல் நிலை யத்தில் ஒப்ப டைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் வெள்ளையனை கைது செ ய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்ற பணம் ரூ.180 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- தா.பேட்டையில் வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் சிறுதானிய உணவு வகைகள் குறித்தான ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
- மேலும் கண்காட்சியில் சிறப்பாக சிறுதானிய உணவு வகைகள் வைத்திருந்த மகளிர் குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தா.பேட்டை
தா.பேட்டையில் வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் சிறுதானிய உணவு வகைகள் குறித்தான ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியினை தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சர்மிளா பிரபாகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். வட்டார இயக்க மேலாளர் செல்லப்பாப்பா அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டாரம்) ஸ்ரீதேவி, (ஊராட்சிகள்) குணசேகரன் ஆகியோர் சிறுதானிய உணவு வகைகள் குறித்து சிறப்புரை ஆற்றினர். அப்போது கம்பு, சோளம், கேழ்வரகு, கருப்புகவுனி, கற்றாழை, முடக்கத்தான் கீரை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகள் மகளிர் குழுவினர் தயார் செய்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.
மேலும் கண்காட்சியில் சிறப்பாக சிறுதானிய உணவு வகைகள் வைத்திருந்த மகளிர் குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
- இளம் வாக்கா ளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
தொட்டியம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
கொங்குநாடு பொறியியல் கல்லூரி சேர்மன் பி பெரியசாமி முசிறி கோட்டாட்சியர் ராஜன், மாவட்ட பழங்குடி யினர் நல அலுவலர் கீதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்குநாடு கல்லூரி முதல்வர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். இதில் கலந்துகொண்டு இளம் வாக்கா ளர்களை அதிக அளவில் சேர்த்திடும் வகையில் இளம் வாக்கா ளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் தேர்தல் தனி துணை தாசில்தார் செல்வி, வரி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தொட்டியம் பகுதி கிராம நிர்வாக அலுவ லர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கொங்குநாடு பொறியியல் கல்லூரி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடி வில் தொட்டியம் தாசில்தார் கண்ணாமணி நன்றி கூறினார்.
- ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
- உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.
திருச்சி:
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற கிரிக்கெட் ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
திருச்சியில் ரசிகர்கள் சற்று வித்தியாசமாக 15 அடி பிரம்மாண்டமான கிரிக்கெட் உலகக்கோப்பை மாதிரி செய்து காட்சிக்கு வைத்துள்ளனர். அத்துடன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து 'ஆல் தி பெஸ்ட் இந்தியா' என்ற வாசகத்துடன் கூடிய பேனரும் வைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மேலப்புலிவார்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை நிறுவி உள்ளனர். இந்த உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.
லட்சுமி நரசிம்மன் தலைமையிலான இந்தக் குழுவினர் பிரம்மாண்டமான உலகக் கோப்பை வைத்து வாழ்த்து தெரிவிப்பது இத்துடன் 3 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பை திருச்சி, மேலப்புலிவார்டு ரோடு இப்ராஹிம் பூங்கா எதிர்வரிசையில் ஒரு வணிக வளாகத்தின் முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பலரும் இதை ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
ஏற்கனவே திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கோப்பையையொட்டி 60 ஆண்டு காலம் சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த பழங்கால நாணயங்களை கொண்டு உலகக்கோப்பையை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் கிரிக்கெட் உலக கோப்பையை வாழ்த்தும் வகையில் 1975-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை உள்ள இந்திய நாணயங்களை கொண்டு திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக செயலாளர் பத்ரி நாராயணனால் உருவாக்கப்பட்ட உலக கோப்பை மத்திய நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயங்களில் இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது இந்த நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட உலக கோப்பை அருகே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மருத்துவ மாணவி திடீர் மாயமானார்
- கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி மாவட்டம் மருங்காபுரி காலனி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் விஜய் ஸ்ரீ (வயது 26). இவர் கன்னியாகுமரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஊருக்கு வந்த விஜய்ஸ்ரீ கன்னியாகுமரி செல்வதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். பின்னர் அவர் அங்கு செல்லவில்லை, இதுகுறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்.
- ஸ்ரீரங்கம் பகுதியில் வாலிபர் பிணம் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
- பிணத்தை கைப்பற்றி ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி கும்பகோணத்தான் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணம் தூக்கில் தொங்குவதாக பொது மக்கள் ஸ்ரீரங்கம் போலீசா ருக்கு தகவல் அளித்து உள்ளனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற ஸ்ரீரங்கம் போலீசார் தூக்கில் தொங்கிய அந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலையா? அல்லது அவரை யாராவது அடித்து கொன்று தூக்கில் பிணமாக தொங்க விட்ட னரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர். கும்பகோணத்தான் சாலையில் மரத்தில் வாலிபர் தூக்கு மாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.






