என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • மேட்டூர் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பொய்த்து போன நிலையில் அந்த பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்.
    • சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    திருச்சி:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக அரசை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேட்டூர் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பொய்த்து போன நிலையில் அந்த பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்.

    நடைபெற இருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தல் கூட்டணி குறித்து சரியான வியூகத்தை அமைக்கும். சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். மக்களுக்கு தேவையான மசோதாக்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும். அரசு பஸ்ஸில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து தனது கால்களை இழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. எனவே அனைத்து அரசு பஸ்களிலும் கதவு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது. .
    • இங்கு திருக்காமேஸ்வரர் உடனுறை சிவகாமசுந்தரி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

    முசிறி

    முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது. இங்கு திருக்காமேஸ்வரர் உடனுறை சிவகாமசுந்தரி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை நடைபெற்றது.

    அப்போது சிவாச்சாரியார்கள் கோயில் வளாகத்தில் உள்ள யாக வேள்வி மண்டபத்தில் 108 சங்குகள் வைத்து அதில் புனித நீர் ஊற்றி சிறப்பு யாக வேள்வி நடத்தினர். விவசாயம் செழிக்கவும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்யவும் காவிரியில் வற்றாது நீர் வரவும், மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், உலக மக்கள் அமைதியாகவும் நோய் தாக்குதல்கள் இல்லாமலும் வாழ்ந்திட பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புனித நீர் நிரப்பிய சங்குகளில் இருந்த நீர் மூலம் திருக்காமேஸ்வரர் மற்றும் சிவகாமசுந்தரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பிரகார தெய்வங்களுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்தனர்.

    • முசிறி முழு நேர கிளை நூலகத்தில் திருச்சி புத்தகத் திருவிழா, தேசிய நூலக வார விழா முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது.
    • முசிறி நூலக வாசகர்கள் உள்ளிட்ட 130 மாணவ மாணவியர்கள் மற்றும் வாசகர்கள் 13 பேர்கலந்து கொண்டனர்.

    முசிறி

    முசிறி முழு நேர கிளை நூலகத்தில் திருச்சி புத்தகத் திருவிழா, தேசிய நூலக வார விழா முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது.

    போட்டியில்முசிறியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஏவூர், முசிறி எம் .ஐ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முசிறி சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சந்தப்பாளையம், மற்றும் முசிறி நூலக வாசகர்கள் உள்ளிட்ட 130 மாணவ மாணவியர்கள் மற்றும் வாசகர்கள் 13 பேர்கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் 3ம் நிலை நூலகர் தனலட்சுமி, 2ம் நிலை நூலகர் ஆனந்த கணேசன், உதவியாளர் வீரமணி மற்றும் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக அம்மன் சிவகுமார், சித்ரா பாலச்சந்தர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    • திருச்சியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
    • இந்த சோதனையின் காரணமாக கடத்தல் தங்கம் வாங்கும் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    திருச்சி

    தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் வரி ஏய்ப்பு செய்வதாகவும், சட்டத்துக்கு புறம்பாக கள்ள சந்தையில் தங்கம் மற்றும் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் அமலாக்கத் துறையினருக்கு புகார்கள் சென்றன. அந்த வகையில் சென்னையில் 6 நகை கடைகளில் அமலாக்கத் துறையினர் 2 தினங்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக திருச்சியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

    நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    திருச்சி ஜாபர் ஷா வீதியில் உள்ள 3 ஜுவல்லர்களிலும், பெரிய கடைவீதியில் உள்ள ஒரு ஜூவல்லரிலும் மற்றும் அதன் 3 உரிமையாளர்கள் வீடுகளிலும் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    இதில் 2 கடைகளில் நடத்தப்பட்ட சோதனை நேற்று மதியம் 12 மணியளவில் நிறைவு பெற்றது. மற்ற கடைகளில் நடந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.

    சென்னையில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நகைக்கடைகளில் இருந்து திருச்சியில் உள்ள இந்த நகைக்கடைகள் தங்க கட்டிகளை வாங்கி பட்டறைகளுக்கு கொடுத்து நகைகளாக விற்பனை செய்து வந்ததாக கூறப்பட்டது.

    இதில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் 2 நாட்கள் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள்,ரொக்க பணம் கைப்பற்றப்பட்டு

    ள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் தங்கக் கட்டிகளை வாங்கி அதை நகைகளாக மாற்றி விற்பனை செய்த வகையில் சங்கேத மொழிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் கட்டு கட்டாக சிக்கி உள்ளதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட தங்கத்துக்கும் இருப்பில் இருந்த மற்றும் விற்பனை செய்யப்பட்ட தங்கத்துக்கும் தொடர்பு இல்லாமல் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த சோதனையின் காரணமாக கடத்தல் தங்கம் வாங்கும் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    • மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவா ரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடை பெற்றது.
    • அர்ச்சகர்கள் கணபதி ஹோ மம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர்.

    மண்ணச்சநல்லூர்

    மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவா ரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடை பெற்றது.

    முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்ட பத்தில் 108 வலம்புரி சங்கு கள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது. அதன் மை யத்தில் வலம்புரி சங்கு வைக்கப்ப ட்டு அனைத்து சங்குகளிலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுத்து வ ரப்பட்ட புனிதநீர் நிரப்ப ப்பட்டு பின்னர் அந்த சங்கு களில் மாவிலைகள் மற்றும் பூக்கள் வைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கணபதி ஹோ மம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். இதில் ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சங்கில் உள்ள புனித நீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்ம னுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதே போல் மீதமுள்ள சங்கில் உள்ள புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு மாற்று ரைவரதீஸ்வரருக்கு சங்கா பிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடை பெற்றது. பின் அர்த்த ஜாம பூஜை நடைபெற்றது.

    • இவர் மீது துறையூர் உள்ளிட்ட பல்வேறு போ லீஸ் நிலையங்களில் அடி தடி,கொலை,கஞ்சா கடத்து தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவை யில் உள்ளது.
    • திருச்சி கலெக்டர் பிரதீப்கு மார் வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்

    துறையூர்

    திருச்சி மாவட்டம் துறை யூர் அருகே உள்ள அடிவாரப் பகுதியை சேர்ந்தவர் வினோத் (45).

    இவர் மீது துறையூர் உள்ளிட்ட பல்வேறு போ லீஸ் நிலையங்களில் அடி தடி,கொலை,கஞ்சா கடத்து தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவை யில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு வினோத்தும் அவரது கூட்டாளிகளான நந்தகு மார் (25), வெங்க டேசன் (27), சிவா (31), ராசாத்தி (42) ஆகிய 5 பேரும் சேர்ந்து, அடிவார பகுதியை சேர்ந்த விஜய் (20) என்கிற வாலிபரை கொலை செய்து, உடலை பச்சை மலையில் உள்ள தோட்டம் ஒன்றில் புதைத்து வைத்த னர்.

    இந்த வழக்கில் 5 பேரை யும் கைது செய்த துறையூர் போலீசார் அவர்களை சிறையில் அடைத்து இருந்த னர். இந்நிலையில் வினோ த்தை குண்டர் தடுப்பு ச ட்டத்தில் கைது செய்ய து றையூர் போலீஸ் ஆய்வாளர் செந்தில்குமார், முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் ஆகியோர் மாவட்ட எஸ்.பி. வ ருண்குமாருக்கு பரிந்து ரைத்தனர்.

    எஸ்.பி வருண் குமாரின் பரிந்துரையின் பேரில், திருச்சி கலெக்டர் பிரதீப்கு மார் வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இத னைத் தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்த ரவு நகலை, சிறைத்துறை போலீசார் மூலம் வினோ த்திடம் துறையூர் போலீசார் அளித்தனர்.

    • நாடு முழுவதும் தற்போது 25 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • 2018 பயணிகளில் 22 சதவீதம் பேர் திருச்சி கோட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    வந்தே பாரத் ரெயில் சேவையானது கடந்த 2019 பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை தொடங்கியது. அதன் பின்னர் நாடு முழுவதும் தற்போது 25 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி சென்னை-நெல்லை இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை செப்டம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கியது. அது முதல் கடந்த 16-ந் தேதி வரை வந்தே பாரத் ரெயிலில் சென்னையில் இருந்து நெல்லைக்கு 28 ஆயிரத்து 480 பயணிகளும், நெல்லையில் இருந்து சென்னைக்கு 27 ஆயிரத்து 790 பயணிகளும் பயணித்து உள்ளனர். இந்த ரெயில் சேவையை திருச்சி கோட்ட ரெயில் பயணிகள் அதிகளவு பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வந்தே பாரத் ரெயில் சேவையை பயன்படுத்தி கொண்ட 56 ஆயிரத்து 270 பயணிகளில் 46 சதவீதம் பேர் திருச்சி ரெயில்வே கோட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக தீபாவளி விடுமுறை நாட்களில் பயணித்த 2018 பயணிகளில் 22 சதவீதம் பேர் திருச்சி கோட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி எஸ்.ஆர்.எம்.யூ உறுப்பினர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது
    • எஸ்.ஆர்.எம்.யூ. மாநில துணைச் செயலாளர் வீரசேகரன் பார்வையிட்டார்

    திருச்சி,

    பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா வேண்டாமா என்பது குறித்து எஸ்.ஆர்.எம்.யூ உறுப்பினர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் 3 நாட்கள் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ் ஆர் எம் யூ ரெயில்வே தொழிற்சங்கத்தினர் வாக்களித்து வருகின்றனர். எஸ் ஆர் எம் யூ மாநில துணைச் செயலாளர் வீரசேகரன் பார்வையிட்டார்.

    • திருச்சி கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    • செயற்பொறியாளர் அறிவிப்பு

    திருச்சி,

    திருச்சி மன்னார்புரம் பெருநகர் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(22-ந்தேதி)புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒருபகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ்ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • சிறந்த கிளை நூலகமாக துறையூர் கிளை நூலகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டி கேடயம் வழங்கினார்

    துறையூர்,

    தமிழக அரசின் பொது நூலக துறையின் கீழ் செயல்பட்டு வரும் நூலகங்க ளுக்கு ஒவ்வொரு வருடமும் சிறந்த நூலகங்களுக்கான கேடயம் வழங்குவது வழக்கம்.இந்த கேடயம் வழங்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட நூலகத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பி னர்களை சேர்த்தல், அதிகமான புரவலர்களை சேர்த்தல், நூலகத்தின் செயல்பாடு, நூலகத்திற்கு அதிக நன்கொடை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அலகாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2022 - 2023 வருடத்திற்கான அதிக நன்கொடை பெற்ற நூலகமாக துறையூர் கிளை நூலகம் தேர்வு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மயிலாடுது றையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறையூர் கிளை நூலக அலுவலர் பாலசந்தருக்கு அதற்கான கேடயத்தை வழங்கி னார். இந்நிகழ்வில் பொது நூலக இயக்குனர் இளம்பகவத், பொது நூலகத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.துறையூர் நூலகம் ஆனது 3 தளத்துடன் கூடிய கட்டிடத்தில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் 16,700 உறுப்பினர்களுடன் கிராமப்புற மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துதல், போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்களுடன் சிறந்த முறையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்
    • திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக திருட்டு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது

    திருச்சி,

    திருச்சி விமான நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பகத்தில் கடந்த ஒரு மாதமாக மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதனை எடுக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த வாகன பாதுகாவலர் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாகன பாதுகாப்பகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளுக்கு எந்த வித ஆவணமும் இல்லை. ேமலும் விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிள் வேறு மாவட்டத்தில் இருந்து திருடப்பட்டு இங்கு வந்து நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அந்த 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக திருட்டு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருச்சி கம்பரசம் பேட்டையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கப்படுகிறது.
    • காவிரியில் வெள்ளம் வந்தால் இந்த பகுதி பாதிக்கப்படாமல் இருக்க உரிய அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திருச்சி கம்பரசம் பேட்டையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 13 கோடியே 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது திருச்சி - கரூர் நெடுஞ்சாலையை ஒட்டி, காவிரி கரையோரத்தில், 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகளை இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இதில் பறவைகள் தங்குமிடம் 60 ஆயிரம் சதுர அடியில் அதன் நல்வாழ்வை உறுதிசெய்ய காற்றோட்டம் மற்றும் இயற்கை விளக்குகளை எளிதாக்கும் வெளிப்படையான கண்ணிகளுடன் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இதில் தீக்கோழிகள் மற்றும் அரிய வகை பறவைகள் உட்பட பலதரப்பட்ட கவர்ச்சியான பறவை இனங்களை பாதுகாக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட உள்ளது. இதுவும் தஞ்சாவூரில் உள்ள ராஜாலியின் பறவை பூங்காவைப் போன்று பெரிய அளவில் அமைய உள்ளது.

    இந்த பறவைகள் பூங்கா உள்ளூர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உருவாகிறது. காவிரியில் வெள்ளம் வந்தால் இந்த பகுதி பாதிக்கப்படாமல் இருக்க உரிய அம்சங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

    இந்த பூங்காவின் பறவைக் கூடத்திற்குள், மரங்கள் மற்றும் செயற்கை குளங்களுக்கு மத்தியில் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுவது புதிய அனுபவமாக இருக்கும்.

    மேலும் இங்கு 50 பேர் அமரும் திறன் கொண்ட ஒரு மினி தியேட்டர் அமைய உள்ளது. இதில் அறிவியல் ஆவணப்படங்கள் திரையிடுவதற்கும், பறவையியல் குறித்த குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர சிற்றுண்டிச்சாலை, சிமெண்ட் அணுகு சாலை மற்றும் சுமார் 60 கார்கள் மற்றும் 100 பைக்குகளுக்கான பார்க்கிங் வசதிகளும் செய்யப்படுகிறது. இந்த கட்டுமான பணிகளை ஒரு வருட காலத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    இந்த பூங்கா அமைவதால் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட வழித்தடத்தின் வடிவமைப்பை மாற்றியமைத்து நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    ×