search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வந்தே பாரத் ரெயில் சேவையை அதிகளவு பயன்படுத்திய திருச்சி கோட்ட பயணிகள்
    X

    வந்தே பாரத் ரெயில் சேவையை அதிகளவு பயன்படுத்திய திருச்சி கோட்ட பயணிகள்

    • நாடு முழுவதும் தற்போது 25 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • 2018 பயணிகளில் 22 சதவீதம் பேர் திருச்சி கோட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    வந்தே பாரத் ரெயில் சேவையானது கடந்த 2019 பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை தொடங்கியது. அதன் பின்னர் நாடு முழுவதும் தற்போது 25 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி சென்னை-நெல்லை இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை செப்டம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கியது. அது முதல் கடந்த 16-ந் தேதி வரை வந்தே பாரத் ரெயிலில் சென்னையில் இருந்து நெல்லைக்கு 28 ஆயிரத்து 480 பயணிகளும், நெல்லையில் இருந்து சென்னைக்கு 27 ஆயிரத்து 790 பயணிகளும் பயணித்து உள்ளனர். இந்த ரெயில் சேவையை திருச்சி கோட்ட ரெயில் பயணிகள் அதிகளவு பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வந்தே பாரத் ரெயில் சேவையை பயன்படுத்தி கொண்ட 56 ஆயிரத்து 270 பயணிகளில் 46 சதவீதம் பேர் திருச்சி ரெயில்வே கோட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக தீபாவளி விடுமுறை நாட்களில் பயணித்த 2018 பயணிகளில் 22 சதவீதம் பேர் திருச்சி கோட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×