முசிறி கிளை நூலகத்தில் - தேசிய நூலக வார விழா

முசிறி முழு நேர கிளை நூலகத்தில் திருச்சி புத்தகத் திருவிழா, தேசிய நூலக வார விழா முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது.முசிறி நூலக வாசகர்கள் உள்ளிட்ட 130 மாணவ மாணவியர்கள் மற்றும் வாசகர்கள் 13 பேர்கலந்து கொண்டனர்.
முசிறி கிளை நூலகத்தில் - தேசிய நூலக வார விழா
Published on

முசிறி

முசிறி முழு நேர கிளை நூலகத்தில் திருச்சி புத்தகத் திருவிழா, தேசிய நூலக வார விழா முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது.

போட்டியில்முசிறியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஏவூர், முசிறி எம் .ஐ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முசிறி சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சந்தப்பாளையம், மற்றும் முசிறி நூலக வாசகர்கள் உள்ளிட்ட 130 மாணவ மாணவியர்கள் மற்றும் வாசகர்கள் 13 பேர்கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 3ம் நிலை நூலகர் தனலட்சுமி, 2ம் நிலை நூலகர் ஆனந்த கணேசன், உதவியாளர் வீரமணி மற்றும் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக அம்மன் சிவகுமார், சித்ரா பாலச்சந்தர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com