என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • தொடர் குற்றங்களின் அடிப்படையில் 4 பேர் மீது மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பானு மீதும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது சிறுமிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து அங்கே வீடு வாடகைக்கு எடுத்து சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பாலக்கரை துரைசாமி புரத்தை சேர்ந்த பானு (வயது 38 ) மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் தொடர் குற்றங்களின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அசோக், அபி நிஷா, பானுப்பிரியா ஆகிய 4 பேர் மீது மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பானு மீதும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தொடர் விசாரணையில் அவர் சிறுமிகளை வற்புறுத்தி பாலியல் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுத்தி வந்தவர் என கோட்டை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பானு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். பின்னர் அந்த ஆணையை சிறையில் இருக்கும் பானுவிடம் ஒப்படைத்தனர்.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேதம டைந்த கிழக்கு வாசல் கோபுரத்தை சரிசெய்யும் பணி கடந்த 6 மாத காலமாக நிறைவடையவில்லை.
    • கோவில் நிர்வாகத்தை கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் தமுக்கடித்து நூதன போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    திருச்சி

    இந்து சமய அறநி லைத்துறை நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேதம டைந்த கிழக்கு வாசல் கோபுரத்தை சரிசெய்யும் பணி கடந்த 6 மாத காலமாக நிறைவடையவில்லை.

    அதனால் பள்ளி குழந்தை கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த பாதை யை பயன்படுத்த மு டியாத வகையில் பாதிக்க ப்பட்டுள்ளனர். அதேபோல கோவி லுக்கு பல இடங்க ளில் நிறைய சொத்துக்கள் இருக்கும் நிலையில் தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் பெருமாளை தரிசிக்க வந்து செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு, வாகனங்களை நிறுத்து வதற்கு உரிய இடத்தை கோவில் நிர்வாகம் இதுவ ரை ஒதுக்கவில்லை.

    இது போன்ற குறைகளை சரி செய்யாத கோவில் நிர்வாகத்தை கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் தமுக்கடித்து நூதன போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    இந்தப் போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதி செயலாளர் சந்துரு தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட செய லாளர் சேதுபதி ,மாவட்ட பொருளாளர் நவநீத கிருஷ்ணன், பகுதி தலைவர் லோகநாதன், பகுதி துணைத்தலைவர் ஜெயக்கு மார் ,பகுதி பொருளாளர் ரங்கராஜ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீரங்கம்காவிரி ஆற்றுப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • சென்று அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அருண்குமாரை கைது செ ய்து அவரிடமிருந்து க ஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    திருச்சி

    திருச்சி திருவா னைக்காவல் வடக்கு தெரு தெற்கு உத்தர விதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21).

    இவர் ஸ்ரீரங்கம்காவிரி ஆற்றுப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைய டுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அருண்குமாரை கைது செ ய்து அவரிடமிருந்து க ஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று அதே பகுதியில் கஞ்சா விற்றுக்கொ ண்டிருந்த மேல கொ ண்டையம்பேட்டை சேர்ந்த அரவிந்தன் ( 22) என்பவரை யும் கைது செய்து அவரிட மிருந்து 10 கிராம் கஞ்சா கைப்பற்றினர்.

    • இவர் பாரதியார் சாலையில் உள்ள உடுப்பி ஓட்டல் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.
    • கத்தி முனையில் சேகரை மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 2 ஆயிரத்து 100 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

    திருச்சி

    திருச்சி கருமண்டபம் செல்வநகர் 1-வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 48).

    இவர் பாரதியார் சாலையில் உள்ள உடுப்பி ஓட்டல் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.அப்போது கருமண்டபம் ஜெ.ஆர்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி முத்தமிழ் குமரன்( 33) என்பவர் அங்கு வந்தார்.

    பின்னர் அவர் பஸ் நிறுத்த நிழற்குடையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு கத்தி முனையில் சேகரை மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 2 ஆயிரத்து 100 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து ரவுடி முத்தமிழ் குமரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • இதற்காக நிலத்தின் ஆவணங்களை முசிறி சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்தார்.
    • ு. மேலும், ஞானசேகர் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

    முசிறி

    திருச்சி மாவட்டம் முசிறி-சேலம் புறவழி சாலை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 54). இவர் தனது காலி மனையை ஜெயராம் என்பவருக்கு கிரயம் செய்ய முடிவு செய்தார். இதற்காக நிலத்தின் ஆவணங்களை முசிறி சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது அந்த நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அந்த இடத்தின் உரிமையாளர் தற்போது மலேசியாவில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், ஞானசேகர் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து, முசிறி சார்பதிவாளர் கோகிலா அளித்த புகாரின் பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகர்(54), பத்திர எழுத்தர் பாலசுப்ரமணி (57), மேலும் இந்த ஆவண தயாரிப்பில் உடந்தையாக இருந்த அசோக்குமார்(47) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • எனது மகன் கடந்த 2 ஆண்டுகளாக எந்த தவறும் செய்யாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி வந்தான்.
    • அவன் தவறே செய்திருந்தாலும் அவனுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று கொடுத்திருக்க வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி சர்க்கார் பாளையம் பனைய குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் (வயது 30). ரவுடியான இவர் மீது திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்பட 53 வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொம்பனை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் சமயபுரம் அருகே சனமங்கலம் காட்டுப்பகுதிகள் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீசார் பிடிக்க முயன்றனர்.

    அப்போது போலீஸ் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கொம்பனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கொம்பன் ஜெகன் பலியானார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொம்பன் ஜெகனின் தாய், தந்தை, மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் விசாரணை நடத்தினர். பின்னர் கொம்பன் ஜெகனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இரவு 9:45 மணி அளவில் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு திருச்சி சர்க்கார் பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. அங்கு உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் போலீசாரின் பலத்த பாதுகாப்போடு உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இதற்கிடையே ஜெகனின் தாயார் சரஸ்வதி கூறும்போது, எனது மகன் கடந்த 2 ஆண்டுகளாக எந்த தவறும் செய்யாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி வந்தான். இருப்பினும் போலீசார் அடிக்கடி தொந்தரவு கொடுத்தனர். அவனை ரவுடியாக்கியது போலீசார் தான். அவன் தவறே செய்திருந்தாலும் அவனுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று கொடுத்திருக்க வேண்டும்.

    போலி என்கவுண்டர் மூலம் சுட்டு கொன்றுவிட்டனர். இதற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். அதேபோன்று கொம்பனின் மனைவி ஆர்த்திகா மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார். கள்ளர் முன்னேற்ற சங்கமும் நீதி விசாரணை கோரி உள்ளது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • முஸ்தமி 672 கிராம் தங்கமும், அசாருதீன் 681 கிராம் தங்கமும் உடலில் உருளை வடிவில் பேஸ்ட் ஆக மறைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கே.கே.நகர்:

    வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த சுங்கத்துறை டிரைவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தங்கம் கடத்தல் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புருனே நாட்டில் பணியாற்றி வந்த மீமிசல் பகுதியைச் சேர்ந்த முஸ்தமி (வயது22), அதே பகுதியைச் அசாருதீன்( 24) ஆகிய 2 பேர் மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்தனர்.

    அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தார்கள்.

    அப்போது முஸ்தமி 672 கிராம் தங்கமும், அசாருதீன் 681 கிராம் தங்கமும் தனது உடலில் உருளை வடிவில் பேஸ்ட் ஆக மறைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.84.02 லட்சம் ஆகும்.

    • ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணத்திற்கு கட்டாய படுத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்
    • திருவெறும்பூர் மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

    திருச்சி,

    திருச்சி, காட்டுரை சேர்ந்த தம்பதியரின் 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகேயுள்ள திருமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் ரா.பாலமுருகன்(வயது 37).சிறுமியின் உறவினரான இவருக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தையும் உள்ளது.இந்த நிலையில் தனக்குத் திருமணம் ஆகவில்லை எனக் கூறி அந்த சிறுமியிடம் பழகியுள்ளார். மேலும் அவரிடம் ஆசை வார்த்தை கூறி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப் படுத்தியுள்ளார்.இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருவெறும்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின பேரில் போலீசார் விரைந்து சென்று பாலமுருகனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது
    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த விமான சேவையை தொடங்கி உள்ளது

    கே.கே. நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், சென்னை, பெங்களூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இதை தவிர வெளிநாட்டு விமான சேவைகளாக துபாய் மலேசியா சிங்கப்பூர் மஸ்கட் ஓமன் இலங்கை போன்ற நாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு விமான சேவைகள் நிறுவனத்தின் சார்பில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் துவங்கி இருக்கிறது. இந்த விமானம் ஆனது பெங்களூரில் நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்பட்டு இரவு 1.28 மணிக்கு திருச்சி விமான விமான நிலையத்திற்கு வந்தடைந்தது இந்த விமானத்தில் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு 30 பயணிகள் பயணம் செய்தனர் மீண்டும் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு காலை 4.40 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தது இந்த விமானத்தில் 78 பயணிகள் திருச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்தனர்.

    • திருச்சி தா.பேட்டையில் 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • ௩ மாவட்டங்களில் பல இடங்களில் கைவரிசை காட்டியவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

    திருச்சி,

    திருச்சி மாவட்டம், தா.பேட்டை அடுத்த சக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது70). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சரோஜாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் வேலாயுதம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு துறையூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மனைவியை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 31 பவுன் தங்க நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகையை பதிவு செய்தனர். மேலும் தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பீரோவில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகையை பழைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் கைரேகையோடும் ஒப்பிட்டு பார்த்தும் தீவிரமாக போலீசார் விசாரணை செய்தனர். அப்போது ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, ஓடக்கரை தோட்டம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்கிற கணேசன் (41), சசிகுமார் (28) ஆகியோரது கைரேகை இந்த திருட்டு சம்பவத்தில் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கொடுமுடி சென்று சண்முகம் என்கிற கணேசன், சசிகுமார் ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் சக்கம்பட்டி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் வேலாயுதம் என்பவரின் பூட்டி இருந்த வீட்டை திறந்து பீரோவை உடைத்து நகைகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடமிருந்து 24 பவுன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சேர்ந்து பகலில் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பணம், நகைகளை திருடி செல்வதும், திருச்சி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் மரத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது
    • அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேர் இழுத்தனர்

    திருச்சி, 

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரூ.8 லட்ச ரூபாய் மதிப்பிலான, தேக்கு மரத்திலான தேரினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி கோட்ட தலைவரும், தி.மு.க. மாநகரச் செயலாளருமான மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு அதன் புறப்பாட்டினை உற்சவர் மண்டபத்தில் தொடங்கி வைத்து,  தேரினை மாணிக்க விநாயகர் சன்னதியை சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலைநிறுத்தினர். முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர்கள் முன்னிலையில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலின் பெண் ஓதுவார் ரூபாவதி மாணிக்க விநாயகர் பாடலை பாடினார். உற்சவ காலங்களில் பக்தர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இத்தேரினை இழுக்கலாம் என கோவிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மண்ணச்சநல்லூரில் கலெக்டர் காரை பொதுமக்கள் வழி மறித்தனர்
    • செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூரில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரதீப்குமார் வருகை தந்தார்.அப்போது அப்பகுதி மக்கள் அவரின் காரை வழிமறித்து மனு கொடுத்தனர்.அந்த மனுவில், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், காந்தி நகர், பி எஸ் ஏ நகர் பகுதியில் நீண்டகாலமாக சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பாரதிநகரில் தனி நபர் ஒருவரின் காலி மனையில் மிகப்பெரிய தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் பொக்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.இந்த டவர் அமைக்கப்பட்டால் இப்பகுதி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் டவர் அமைக்கும் இடம் அருகே குழந்தைகளின் விளையாட்டு மைதானம் உள்ளது.எனவே செல்போன் டவர் இப்பகுதியில் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    ×