search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை
    X

    திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை

    • திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது
    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த விமான சேவையை தொடங்கி உள்ளது

    கே.கே. நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், சென்னை, பெங்களூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இதை தவிர வெளிநாட்டு விமான சேவைகளாக துபாய் மலேசியா சிங்கப்பூர் மஸ்கட் ஓமன் இலங்கை போன்ற நாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு விமான சேவைகள் நிறுவனத்தின் சார்பில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் துவங்கி இருக்கிறது. இந்த விமானம் ஆனது பெங்களூரில் நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்பட்டு இரவு 1.28 மணிக்கு திருச்சி விமான விமான நிலையத்திற்கு வந்தடைந்தது இந்த விமானத்தில் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு 30 பயணிகள் பயணம் செய்தனர் மீண்டும் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு காலை 4.40 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தது இந்த விமானத்தில் 78 பயணிகள் திருச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்தனர்.

    Next Story
    ×