என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை விற்க முயற்சி - முசிறியில் கைதான பத்திர எழுத்தர் உள்பட 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை
- இதற்காக நிலத்தின் ஆவணங்களை முசிறி சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்தார்.
- ு. மேலும், ஞானசேகர் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
முசிறி
திருச்சி மாவட்டம் முசிறி-சேலம் புறவழி சாலை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 54). இவர் தனது காலி மனையை ஜெயராம் என்பவருக்கு கிரயம் செய்ய முடிவு செய்தார். இதற்காக நிலத்தின் ஆவணங்களை முசிறி சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்தார்.
இதையடுத்து அந்த ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது அந்த நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அந்த இடத்தின் உரிமையாளர் தற்போது மலேசியாவில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், ஞானசேகர் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, முசிறி சார்பதிவாளர் கோகிலா அளித்த புகாரின் பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகர்(54), பத்திர எழுத்தர் பாலசுப்ரமணி (57), மேலும் இந்த ஆவண தயாரிப்பில் உடந்தையாக இருந்த அசோக்குமார்(47) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






