துறையூர் அருகே - டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

சம்பவத்தன்று இரவு மனைவியிடம் குவாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.அங்கு செந்தில், கிரேன் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளார்.
துறையூர் அருகே - டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
Published on

துறையூர்

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவருக்கு திருமணமாகி சரஸ்வதி (36) என்கிற மனைவியும், 9 வயதுள்ள ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் செந்தில் துறையூர் அருகே கிழக்குவாடி கிராமத்தில் உள்ள குவாரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு மனைவியிடம் குவாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அங்கு செந்தில், கிரேன் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து துறையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார், இறந்த நிலையில் இருந்த செந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் தற்கொலைக்கான காரணம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com