தூக்கில் வாலிபர் பிணம்

ஸ்ரீரங்கம் பகுதியில் வாலிபர் பிணம் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டதுபிணத்தை கைப்பற்றி ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தூக்கில் வாலிபர் பிணம்
Published on

திருச்சி,

திருச்சி கும்பகோணத்தான் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணம் தூக்கில் தொங்குவதாக பொது மக்கள் ஸ்ரீரங்கம் போலீசா ருக்கு தகவல் அளித்து உள்ளனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற ஸ்ரீரங்கம் போலீசார் தூக்கில் தொங்கிய அந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலையா? அல்லது அவரை யாராவது அடித்து கொன்று தூக்கில் பிணமாக தொங்க விட்ட னரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர். கும்பகோணத்தான் சாலையில் மரத்தில் வாலிபர் தூக்கு மாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com