என் மலர்
திருச்சிராப்பள்ளி
- பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
- ஜல்லிக்கட்டு போட்டியில் டி.எஸ்.பி. தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
திருவெறும்பூர்:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
போட்டி காலை 7 மணிக்கு தொடங்கியது இந்த ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது இந்த போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

முன்னதாக கால்நடை இணை இயக்குனர் மும்மூர்த்தியை தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா என்பதை மருத்துவ ஆய்வு செய்தனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.
அதேபோல் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை பரிசோதனையும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைபவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சையும் அளிக்கின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருவெறும்பூர் டி.எஸ்.பி. தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலியை அருகில் வாகனங்களை பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளது.
- திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1199 கிராம்.
கே.கே. நகர்:
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏற்றப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பேட்டிக் ஏர் மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் பயணம் செய்த பயணிகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி விமான நிலைய மத்தியவான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகள் 3 பேர் தங்கள் கொண்டு வந்த லக்கேஜ் அட்டைப்பெட்டியில் தலா 40 கிராம் எடையுள்ள 30 தங்க நாணயங்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து தங்க நாணயங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1199 கிராம்.
அதன் இந்திய ரூபாயின் மதிப்பு 76 லட்சம் என தெரிய வருகிறது.
- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.
- 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி இன்று உற்சவம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். இதனையடுத்து காலை 7.28 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,வெள்ளி சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
10-ம் நாளான 25-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வடக்காவேரிக்கு சென்று அடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது .
இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 26-ந் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்று காலை முதல் இரவு வரை அம்மன் வழிநடை உபயம் கண்டருளுகிறார். பின்னர் இரவு பாஸான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.
அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் கொடி மரம் முன்பு எழுந்தருளி கொடி இறக்கப்படுகிறது. தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.
- விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
- மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவிலான 1025.12 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 64.51 லட்சம் ஆகும்.
இதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருச்சி மாவட்டத்தில் 358 டவுன் பஸ்கள், 306 புறநகர் பஸ்கள் நாளொன்றுக்கு இயக்கப்படும்.
- இனாம்குளத்தூர் பகுதிக்கு ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.
திருச்சி:
அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். பணியின் போது உயிரிழந்தவரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (புதன்கிழமை) 3-வது நாளாக போராட்டம் நீடித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 358 டவுன் பஸ்கள், 306 புறநகர் பஸ்கள் நாளொன்றுக்கு இயக்கப்படும்.
இதில் நேற்று குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் காலை 8 மணி நிலவரப்படி அரசு புறநகர் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அதே நேரம் டவுன் பஸ்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
ஏற்கனவே திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஏராளமான தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆகவே அதிகாரிகள் புறநகர் பஸ்கள் இயக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க தற்காலிக டிரைவர் கண்டக்டர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகிறது. தொ.மு.ச. மற்றும் தமிழக அரசின் ஆதரவு தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் தொடர்ச்சியாக பணியில் 2,3 ஷிப்ட் வேலை செய்கின்றனர்.

இதற்கிடையே தற்காலிக டிரைவர் கண்டக்டர்களுக்கு ரூட் தெரியாத காரணத்தினால் பயணிகளே அவர்களை வழிநடத்தும் சுவாரசியம் நடந்தது.
இன்று காலை திருச்சியில் இருந்து இனாம்குளத்தூர் பகுதிக்கு ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.
இந்த பஸ்ஸின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவருமே தற்காலிக பணியாளர்கள். இவர்களுக்கு ரூட் தெரியாத காரணத்தினால் பயணிகளே பஸ் நிறுத்தத்தை அடையாளம் காட்டினர்.
அந்த தற்காலிக கண்டக்டர் சீருடை அணியவில்லை. வழக்கமாக கண்டக்டர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தோள்பை வழங்கப்படும். ஆனால் இந்த தற்காலிக டிரைவருக்கு கலெக்சன் தொகையை வைப்பதற்கு மஞ்சபை மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஒரு கையில் டிக்கெட்டை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் மஞ்ச பை வைத்து அதில் கலெக்சன் தொகையை போட்டுக் கொண்டிருந்தார். மஞ்சப்பை கண்டக்டரை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
- பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
- திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் (பொறுப்பு) லெ.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் கூறியதாவது:-
பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றிய 10 ஆண்டு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
உலக நாடுகள் நம் இந்தியாவின் முன்னேற்றத்தை கண்டு பிரம்மித்து இருக்கிறது.
பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் உள்ளது.
ஈபிஎஸ் குறித்த ரகசியத்தை தற்போது வெளியே சொல்ல இயலாது தெரிய வேண்டிய நேரத்தில் வெளியே வரும்.
கொடநாடு சம்பவம் நடைபெற்ற போது, நாங்கள் ஈபிஎஸ் உடன் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- உலக சினிமாவில் மட்டும் அவர் கேப்டன் அல்ல. அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தார்.
- சினிமா மூலம் மக்களின் இதங்களை வென்றார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி வந்தார். திருச்சி வந்த அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார். அதன்பின் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது பிரதமர் மோடி, விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
அப்போது பிரதமர் மோடி கூறும்போது "கடந் வாரம் நாம் விஜயகாந்தை இழந்துள்ளோம். உலக சினிமாவில் மட்டும் அவர் கேப்டன் அல்ல. அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தார். சினிமா மூலம் மக்களின் இதங்களை வென்றார். அரசியல்வாதியாக எல்லாவற்றையும் விட தேசிய நலனில் அக்கறை கொண்டிருந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
- மாநிலங்களின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி வழங்கி வருகிறது.
- வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது.
திருச்சி:
திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கைகள் அரசியல் முழக்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகள் என பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நிகழ்ச்சி மேடையிலே பிரதமர் மோடி கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மாநிலங்களின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கு 10 ஆண்டுகளில் ரூ.120 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது என்று கூறினார்.
- உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.
- மேக் இன் இந்தியா திட்டத்தின் அடையாளமாக தமிழகம் திகழ்கிறது.
திருச்சி :
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் பின்னர் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி,
* இந்தியாவின் வளம் மற்றும் கலாச்சாரத்திற்கு தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது.
* திருவள்ளுவர் தொடங்கி பாரதியார் வரை பல்வேறு இலக்கியங்களை நமக்கு கொடுத்துள்ளனர்.
* தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் நான் புதிய சக்தியை பெறுகிறேன்.
* உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.
* திருச்சியில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்களின் வரலாற்று சுவடுகள் உள்ளன.
* புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.
* எந்த நாட்டுக்கு சென்றாலும், தமிழின் பெருமையை பேசாமல் நான் வருவதில்லை.
* காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன.
* 40 மத்திய அமைச்சர்கள் 400 முறைக்கு மேல் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
* பெரிய பெரிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர்.
* புதிய விமான முனையத்தால், திருச்சியை சுற்றி வளர்ச்சி, வணிகம் பெருகும்.
* மேக் இன் இந்தியா திட்டத்தின் அடையாளமாக தமிழகம் திகழ்கிறது.
* கட்டுமானம், சமூக சட்டமைப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளோம்.
* சாலை கட்டமைப்பு வசதிகளால், வணிகம், சுற்றுலா தமிழகத்தில் பெருகும்.
* புதிய சாலை திட்டங்களால் ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் பயன்பெறும்.
* துறைமுக கட்டமைப்புகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
* மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
* மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
* சாகர் மாலா திட்டத்தால் துறைமுகங்களை சிறந்த சாலைகள் மூலம் இணைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
- தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், காரைக்குடி- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நடைபாதையுடன் கூடிய 2 வழிப்பாதை, எண்ணூர், திருவள்ளூர், நாகை, மதுரை, தூத்துக்குடி, இயற்கை எரிவாயு குழாய் திட்டம் உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுதொடர்பான காணொலியும் திரையிடப்பட்டது.
இதன்பின்னர் வணக்கம் என தமிழில் சொல்லி உரையை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
* எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
* 2024-ல் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி தமிழகத்தில் தான்.
* ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும்.
* தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்.
* கடந்த மாதம் வெள்ள பாதிப்பால் தமிழக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
* வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்.
* தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
* சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான். அனைத்தையும் விட தேசத்தை அதிகம் நேசித்தவர் விஜயகாந்த்.
* விஜயகாந்த் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.
- ஆன்மிகம், கலாச்சாரம் என பல்வேறு பெருமைகளை கொண்டது திருச்சி மாநகர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.
பின்னர், விழாவில் முதலில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை தமிழகத்திற்கு பிரதமர் மோடி கொடுத்துள்ளார். திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி என கூறினார்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:- இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமின்றி கலாச்சாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும். ஆன்மிகம், கலாச்சாரம் என பல்வேறு பெருமைகளை கொண்டது திருச்சி மாநகர். புண்ணிய தலமான திருச்சிக்கு பிரதமர் மோடியை வரவேற்கிறோம். தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக திருச்சி விளங்குகிறது. திருச்சியின் வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம். சாதாரண குடிமகன் கூட விமானத்தில் பயணிக்கும் நிலையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். 2032-க்குள் 42 கோடி மக்கள் விமான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
- மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
- சென்னை- பினாங்கு, சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* திருச்சியில் புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி.
* தொட்ட துறைகள் அனைத்திலும், தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
* திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை.
* மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
* சென்னை- பினாங்கு, சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும்.
* சென்னை மெட்ரோ திட்ட பணிகளை வேகப்படுத்த, மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும்.
* தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.
* சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்.
* தமிழக அரசின் கோரிக்கைகள் அரசியல் முழக்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.






