search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் தற்காலிக ஓட்டுநர்கள் வைத்து பஸ் இயக்கப்பட்டது
    X

    திருச்சியில் தற்காலிக ஓட்டுநர்கள் வைத்து பஸ் இயக்கப்பட்டது

    • திருச்சி மாவட்டத்தில் 358 டவுன் பஸ்கள், 306 புறநகர் பஸ்கள் நாளொன்றுக்கு இயக்கப்படும்.
    • இனாம்குளத்தூர் பகுதிக்கு ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.

    திருச்சி:

    அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். பணியின் போது உயிரிழந்தவரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று (புதன்கிழமை) 3-வது நாளாக போராட்டம் நீடித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 358 டவுன் பஸ்கள், 306 புறநகர் பஸ்கள் நாளொன்றுக்கு இயக்கப்படும்.

    இதில் நேற்று குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் காலை 8 மணி நிலவரப்படி அரசு புறநகர் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அதே நேரம் டவுன் பஸ்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

    ஏற்கனவே திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஏராளமான தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆகவே அதிகாரிகள் புறநகர் பஸ்கள் இயக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க தற்காலிக டிரைவர் கண்டக்டர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகிறது. தொ.மு.ச. மற்றும் தமிழக அரசின் ஆதரவு தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் தொடர்ச்சியாக பணியில் 2,3 ஷிப்ட் வேலை செய்கின்றனர்.


    இதற்கிடையே தற்காலிக டிரைவர் கண்டக்டர்களுக்கு ரூட் தெரியாத காரணத்தினால் பயணிகளே அவர்களை வழிநடத்தும் சுவாரசியம் நடந்தது.

    இன்று காலை திருச்சியில் இருந்து இனாம்குளத்தூர் பகுதிக்கு ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.

    இந்த பஸ்ஸின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவருமே தற்காலிக பணியாளர்கள். இவர்களுக்கு ரூட் தெரியாத காரணத்தினால் பயணிகளே பஸ் நிறுத்தத்தை அடையாளம் காட்டினர்.

    அந்த தற்காலிக கண்டக்டர் சீருடை அணியவில்லை. வழக்கமாக கண்டக்டர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தோள்பை வழங்கப்படும். ஆனால் இந்த தற்காலிக டிரைவருக்கு கலெக்சன் தொகையை வைப்பதற்கு மஞ்சபை மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஒரு கையில் டிக்கெட்டை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் மஞ்ச பை வைத்து அதில் கலெக்சன் தொகையை போட்டுக் கொண்டிருந்தார். மஞ்சப்பை கண்டக்டரை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    Next Story
    ×