என் மலர்
தஞ்சாவூர்
- 130 பேர் தங்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பணம் வரவில்லை.
- அரசூர் மெயின் ரோட்டில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவையாறு:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த அரசூர் உள்ளிட்ட பலபகுதிகளில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலையில் அரசூர் கிராம மக்கள் 80 பெண்கள் உள்பட 130 பேர் தங்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தில் பணம் ஏறவில்லை என்று கூறி திருவையாறு மணக்கரம்பை சுப்பிரமணியன் கோவில் அருகே அரசூர் மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் (பொறுப்பு) நெஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தஞ்சை நீதிமன்ற சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை மேலவீதி, தெற்குவீதி, பெரியகோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மானம்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர்நகர், சோழன்நகர், ஜி.ஏ.கெனால்ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிந கர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன்நகர், பர்மாபஜார், ஆட்டுமந்தை தெரு.
கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான்நகர், அரிசிக் காரத்தெரு, கொள்ளுப்பேட்டைதெரு, வாடிவாசல் கடைதெரு, பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம், வ.உ.சி.நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது
இதேபோல் தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம்பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்கடசலாப திநகர், பி.ஆர்.நகர், ஜெபமாலை புரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி.டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
- பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாலையில் செல்பவர்கள் செல்போன்களை தவற விட்டு சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடு க்கப்பட்ட செல்போனை கும்பகோணம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசார், தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட செல்போன் குறிப்புகளோடு ஒத்துப்பார்த்ததில் 15 பேருக்கு சொந்தமான செல்போன் பற்றிய விவரங்கள் ஒத்துப்போனது. பின்னர், புகார்தாரர்கள் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 15 செல்போன்களை உரியவ ர்களிடம் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் ஒப்படைத்தார்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் நிருபர்களிடம் கூறுகையில்:-
செல்போன் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கும்பகோணம் சரக பகுதியில் செல்போன் மட்டுமல்லாது திருட்டு போன அனைத்து பொருட்களையும் விரைவில் மீட்கப்படும் என்றார்.
- தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- ‘குண்டான் சட்டி’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.
கும்பகோணம் அடுத்த கொரநாட்டுகருப்பூரில் உள்ள கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் அகஸ்தி (வயது 12) என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் மாற்றுத்திறனாளி மாண வனின் குறும்புத்தனம், கேலி செய்யும் விதம், அவர்களின் தனி திறமையை பிரதிபலிக்கும் வகையில் 'குண்டான் சட்டி' என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.இந்த படமானது மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கும் சிறந்த படமா கவும், மாணவர்களின் தனித்துவம் மேன்மை அடையும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்த படத்தை பாராட்டி தனியார் பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி கழகம் ஆனது சிறந்த இயக்குனருக்கான விருதை மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், மாணவி அகஸ்திக்கு வழங்கினார்.
விருதை பெற்று க்கொண்ட மாணவி இது எனக்கு சிறந்த ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. இது மேலும், பல்வேறு விருதுகளை பெற ஊக்கமளிப்பதாக தெரிவித்தார்.
- நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்தாக கூறப்படுகிறது.
- ஆத்திரத்தில் கைலாசத்தை பிடித்து ஜெயராமன் கீழே தள்ளியுள்ளார்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குளமங்கலம் ஐவுளித்தெருவை சேர்ந்தவர் கைலாசம் (வயது 75). இவருக்கு இந்திரா என்ற மனைவியும், கோமதி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று கைலாசம், அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மாடுகளை மேய்த்துக்கொண் டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெயராமன் (45), என்பவரது நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்தாக கூறப்படுகிறது. இதனால் கைசாலத்திற்கும், ஜெயராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் கைலாசத்தை பிடித்து ஜெயராமன் கீழே தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் வயலில் விழுந்த கைலாசம் மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் கைலாசத்தை மீட்டு, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கைலாசத்தை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினார்.
இச்சம்பவம் குறித்து கைலாசத்தின் மகள் கோமதி ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜெயராமனை போலீசார் தேடி வந்தார். இந்நிலையில் இன்று காலையில் ஜெயராமனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- மேட்டூர் அணையில் நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 அடி உயர்ந்தது.
- கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
பூதலூர்:
காவிரி பாசன பகுதி விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜீன் 12ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 120 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 10ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பாசனப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வந்தது இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் கடந்த ஆறு நாட்களில் 12 அடி உயர்ந்தது. அதே சமயத்தில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8893 கன அடியாக இருந்தது.
அணையின் நீர்மட்டம் 42.44 அடியாக உள்ளது.கடந்த ஆண்டு இந்த நாளில் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விட ப்படவில்லை
- இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது.
- மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளோம்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த தளவாய்பாளையத்தில் இன்று கத்திரி நத்தம் ஊராட்சி மன்ற அலுவலக விரிவாக்க கட்டிடம் மற்றும் கூட்ட அறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 31 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பின்பற்றி இந்த மாதத்தில் தெலுங்கானா மாநிலத்திலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பள்ளிகளில் பழுதடைந்த சுவர்கள், விரிசல் ஏற்பட்ட கட்டிடம் , பழுது அடைந்த கட்டிடங்களை அகற்றும் பணி ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கப்பட உள்ளதால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அந்தப் பணிகள் நடந்து வருகிறது. மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளோம்.
ஒரு திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று ஒரு திட்டத்தை கூறினால் அது கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தான். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியாது. தகுதி வாய்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை விடுபடாமல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 384 குடியிருப்புகள் ரூ. 31.60 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.
- அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அய்யனார் கோவில் பகுதி வல்லத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 384 குடியிருப்புகள் ரூ. 31.60 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.
இதனை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இரண்டாவது திட்டம் பகுதியில் 969 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 149.32 கோடி மதிப்பில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை தரமானதாகவும் குறித்த காலத்திற்குள்ளும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார்.
இந்த ஆய்வின்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் இளம்பரிதி, உதவி செயற்பொறியாளர்கள் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பதி சென்று வழிபட்ட பலன்களை இங்கு பெறலாம்.
- இன்று காலை 7 மணிக்கு உலக நன்மைக்காக ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி பெருமாளே இங்கு கலியுக வெங்கடேச பெருமா ளாகவும் சதுர்புஜ வரதராஜ பெருமாளாகவும் காட்சி தருகிறார்.
திருப்பதி சென்று வழிபட்ட பலன்களை இங்கு பெறலாம். திருப்பதி வேண்டுதல்களை இங்கு நிறைவேற்றி கொள்ளலாம்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக நன்மைக்காக ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும் வழக்கம். அதன்படி இன்று காலை 7 மணிக்கு உலக நன்மைக்காக ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. இதில் பதினைந்து பட்டாச்சார்யார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள்
ஏகதின இலட்ச்சா ர்சனைக்கு துளசிகள் , தாமரை, மல்லிகை, மருக்கொழுந்து, சம்பங்கி உதிரிப்பூக்கள் வாங்கி தந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்தது.
- மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை 23-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன்பே தற்போது மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்தது.
இந்த சூழ்நிலையில் தஞ்சையில் நேற்று மாலை லேசான அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தது. இடி -மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடின.
கனமழையால் தஞ்சாவூர் மூலை அனுமார் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தன. நேற்று மகளாய அமாவாசை என்பதால் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் தரிசனம் செய்துவிட்டு சூழ்ந்திருந்த தண்ணீரை கடந்து சென்றனர். இதேபோல் வல்லம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, பாபநாசம் ,பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தன. தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தற்போது மழை பெய்ய தொடங்கி இருப்பதால் சம்பா சாகுபடி பணிகளை தொடங்க வசதியாக இருக்கும் என்று விவசாயிகள் கூறினர்.
மாவட்டத்தில் ஒரே நாளில் 214.50 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 45 மி.மீ. மழை கொட்டின.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-
தஞ்சாவூர் -45, வல்லம் -32, அய்யம்பேட்டை -24, கல்லணை -22.80, பூதலூர் -20.20, திருவையாறு -16, பட்டுக்கோட்டை -15.50, பாபநாசம் -13.
- மாநில அளவிலான வீல்சேர் கிரிக்கெட் போட்டி 17-ந் முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- போட்டிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதிஉதவி செய்யும்படி கோரிக்கை.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் வேலூரில் மாநில அளவிலான வீல் சேர் கிரிக்கெட் போட்டி 17-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் தஞ்சையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வீல் சேர் கிரிக்கெட் வீரர் அருண்குமார் என்பவர் கலந்து கொண்டு விளையாடுகிறார்.
அவருக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி உதவி செய்யும்படி அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக மாநிலத் தலைவர் சாலமன், மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாற்றுத்திறனாளியான அருண்குமாருக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.
அப்போது மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம், மாவட்ட செயலாளர் விஷ்ணு தேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது.
- பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே பண்டாரவாடை வர்ணதைக்கால் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ஹவ்ரா பீவி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது.
சம்பவதன்று குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஹவ்ராபீவி சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஹவ்ரா பீவி தம்பி முகமது காசிம் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குபதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹவ்ராபீவிக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆவதால் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரனை நடத்தி வருகின்றனர்.






