என் மலர்
சிவகங்கை
சத்துணவு பணியாளர் காலியிட பணிக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்ததால் மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் பட்டதாரி முதல் பொறியாளர் வரை ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் முழுவதும் 184 சத்துணவு அமைப்பாளர் பணிக்கும், 442 உதவியாளர் பணிக்கும் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த பணிக்கான விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும். மானாமதுரை ஒன்றிய பகுதியில் மொத்தம் 49 சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வந்து விண்ணப்பித்துள்ளனர். சத்துணவு அமைப்பாளர் பணிக்கு கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல் சத்துணவு உதவியாளர் பணிக்கு 5-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து மானாமதுரை யூனியன் அலுவலகத்திற்கு கொடுக்க நேற்று கடைசி நாளாக இருந்ததால் ஏராளமானோர் குவிந்தனர். இதில் பெரும்பாலும் பெண்கள் அதிகளவில் வந்து குவிந்தனர். மேலும் இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் முதல் பொறியியல் படித்த பெண்கள் வரை அதிகம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து நீண்ட வரிசையில் நின்று இவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.
இதுகுறித்து விண்ணப்பித்தவர்கள் தரப்பில் கூறியதாவது:- தற்போது ஏராளமானோர் படித்து முடித்து விட்டு வேலைவாய்ப்பின்றி வீடுகளில் இருந்து வருகின்றனர். அரசு வேலை என்றதும் அதற்கான கல்வித்தகுதியை மட்டும் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சாதாரண பணிகளுக்கு அரசு அறிவித்த கல்வித்தகுதியை விட பட்டம் படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள் ஏராளமானோர் வந்து விண்ணப்பித்துள்ளதால் இதில் உண்மையான தகுதி உள்ள நபர்களுக்கு அந்த வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் நிலை உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் கல்வித்தகுதிக்கு ஏற்ற நபர்களிடம் மட்டும் தான் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற படிப்புகளுக்கு அந்தந்த பணிகளுக்கு தகுந்த வகையில் பணியில் விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 85 லட்சத்திற்கு கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி வரவேற்று பேசினார்.
விழாவில் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்தை கலெக்டர் திறந்து வைத்து சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.85 லட்சத்திற்கு கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கதர் ஆடை வாங்கி அணிவதனால் பல அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நடைபெறுகிறது. தமிழக அரசு கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பளிக்கிறது. எனவே கதர் ஆடைகளை வாங்கி ஏழை நெசவாளர்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், தியாகி சண்முக காந்தி, ஆர்.டி.ஓ. முத்துக்கழுவன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கேசவன், கூட்டுறவு வங்கி இயக்குனர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எஸ்.புதூர்:
எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய தலைவர் வில்லியம் ராஜா தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்புவனம் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தர்.
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே உள்ள கீழப்பூவந்தி பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது 22). இவர் மதுரை ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு சென்றபோது அ.வெள்ளக்கரை கிராமத்தை சேர்ந்த கருப்புராஜா(24), ராஜா(19) ஆகிய இருவரும் ராமுவிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்தனர்.
இச்சம்பவம் குறித்து ராமு பூவந்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குபதிவு செய்து கருப்புராஜா, ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
போலீஸ் நிலையத்தில் பதிவாகும் வழக்குகளை கையாள்வது குறித்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை கையாள்வது குறித்த பயிற்சி 5 நாட்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் பணிபுரியும் 2 தலைமை காவலர்கள், 2 முதல் நிலை காவலர் மற்றும் இரண்டு காவலர்களுக்கு இந்த பயிற்சி கொடுக்கப்படுகிறது.
இந்த பயிற்சியின் போது கோப்புகளை எப்படி எழுதுவது மற்றும் சாட்சிகள், தடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் தேக்கம் இன்றி நீதிமன்ற விசாரணைக்கு செல்வதற்கு உதவியாக இருக்கும்.
இதில் பயிற்சி பெற்ற காவலர்கள், வழக்கு கோப்புகளை திறம்பட கையாண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சாக்கோட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
சாக்கோட்டை போலீஸ் சரகம் மித்திரா வயலை சேர்ந்தவர் சுப்பையா (வயது 55). விவசாயியான இவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் அவரது நோய் குணமாகவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவகோட்டை அருகே வீடு புகுந்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
தேவகோட்டை ரஸ்தா அருகே உள்ள நாகவயல் சாலையில் வசித்து வருபவர் தீபன். இவர் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து வாசல் அருகில் தூங்கி உள்ளார். அப்போது வீட்டுக்குள் சத்தம் கேட்டு விழித்தபோது மர்மநபர் தப்பி ஓடினான். அவனை விரட்டிப் பிடிக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை திருடுபோய் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி அருகே நடந்து சென்ற ஆசிரியர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்களம் இமானுவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது48). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி ஓய்வுபெற்றார். இவர் திண்டுக்கல் -திருப்பத்தூர் சாலை ஓரத்தில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.வி. மங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக ரகசிய தகவல் சாலைக்கிராமம் காவல்துறையினருக்கு வந்துள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாண்டியன் சோதனையிட்டு வாணியங்குடி கிராமத்தில் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்தார்.
இதுதொடர்பாக பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது35), அடைக்கலராஜ் (43) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர்.
சிங்கம்புணரி பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கம்புணரி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக வாரச்சந்தை பகுதியில் தாசில்தார் திருநாவுக்கரசு, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு மற்றும் செயல் அலுவலர் ஜான்முகமது ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாரச்சந்தையில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்த வியாபாரிகள், முககவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்தவர்கள் மற்றும் வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் ஒரே நாளில் அபராத தொகையாக ரூ.6ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது பிரான்மலை அரசு வட்டார மருத்துவர் செந்தில்குமார், சிங்கம்புணரி பேரூராட்சி தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் ரவிச்சந்திரன், தென்னரசு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் தினகரன், மதியரசன், எழில்மாறன், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மங்கையர்கரசி மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
சிவகங்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளான் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் புதிய வேளான் மசோதாவை நிறைவேற்றியது. இதில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்கள் உள்ளதாக கூறி அனைத்து எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தி.மு.க., ம.தி.மு.க, கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளருமான கே.வீரபாண்டி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரெத்தினம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, கண்ணன், கார்கண்ணன், மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து கட்சி பிரமுகர்கள் சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விவசாய பணிகளுக்காக சிங்கம்புணரி அருகே கடந்த 66 ஆண்டுகளாக 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் இன்று வரை கடைபிடித்து வருகின்றனர்.
சிங்கம்புணரி:
ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு சத்தம் காதை கிழிக்கும் வகையிலும், அன்றைய தினம் புத்தாடை அணிந்து, வீடுகளில் விருந்து உபசாரம் நடைபெற்றும், தலை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு விஷேச கவனிப்பும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் ஒரு பக்கம் கொரோனா தொற்று மக்களை தாக்கி வரும் வேளையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடலாமா அல்லது புறக்கணிக்கலாமா என்று மக்கள் நினைத்து வரும் வேளையில் கடந்த 66 ஆண்டுகளாக சிங்கம்புணரி அருகே உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.
இந்த பருவ மழை காலத்தின் போது தமிழகம் முழுவதும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தான் இந்த தீபாவளி பண்டிகை வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை இந்த கிராம மக்கள் தவிர்த்து இன்று வரை கடைபிடித்து வருகின்றனர். இதுகுறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரிய அம்பலக்காரர் சபா ராசராசன் என்பவர் கூறியதாவது:-
கடந்த 1953-ம் ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டது. இங்குள்ள எஸ்.மாம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய பணி முடங்கியது.
ஆனாலும் இந்த கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தங்களது விவசாய பணியை துறக்க முடியாமல் இருந்த நிலையில் அப்போது இங்கு வசித்த பணம் படைத்தவர்களிடம் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை கடனாகப் பெற்று விவசாயத்தை மேற்கொண்டனர். அந்த காலகட்டத்தில் தீபாவளி பண்டிகை வந்தது. ஏற்கனவே கடும் வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையிலும், மற்றொரு புறம் கடன் வாங்கி விவசாயத்தை மேற்கொண்ட வகையில் அப்போது வசித்த கிராம மக்களுக்கு கையில் பணம் இல்லாமல் இருந்தனர்.
இதுகுறித்து அப்போது இந்த கிராமத்தில் வசித்த பெரிய அம்பலக்காரரான பெரி சேவுகன் என்பவரது தலைமையில் கிராம மக்கள் ஊர் கூட்டம் கூடி தற்போது மிகவும் கஷ்டமான காலத்தில் இருப்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து இனி வரும் காலங்களிலும் நமது சந்ததியினரை இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட அனுமதிக்கக்கூடாது என முடிவு செய்தனர். இதற்கு பதிலாக விவசாயம் அறுவடை காலமாக தை பொங்கல் தினத்தை தொடர்ந்து 3 நாட்கள் கோலாகலமாக கொண்டாடுவது என முடிவு செய்தனர்.
அப்போது அந்த கிராம மக்கள் எடுத்த முடிவை சுமார் 66 வருடங்களுக்கு பின்னர் இன்று வரை இந்த 12 கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கடைபிடித்து வருகிறோம். இதுதவிர இந்த கிராமங்களில் இருந்து பெண் கொடுத்தாலோ அல்லது மற்ற ஊர்களில் இருந்து பெண் எடுத்தாலோ அவர்கள் கூட இன்று வரை தலை தீபாவளியை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர். தற்போதைய தலைமுறையினரும் இதை கடைபிடித்து வருகின்றனர்.