என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் கூட்டம்"

    • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
    • ஐ.டி.ஐ. மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதி உடையவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி யில் இன்று நடந்தது.

    முகாமை மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் எட்வர்ட் உடன் இருந்தார். முகாமில் குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக கலந்துகொண்டு நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்தனர்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதி உடையவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனால் முகாமில் கூட்டம் அலைமோதியது. இளம்பெண்களின் கூட்டமே அதிகமாக காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கினர்.

    முகாமின் மூலம் தனியார் துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதா ரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட் டாது என்று அதிகாரிகள் கூறினர்.

    ×