என் மலர்
சிவகங்கை
குன்றக்குடி அருகே ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
குன்றக்குடி போலீஸ்சரகம் ஆத்தங்குடி- முத்துப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 45). இவர் கோனாபட்டு பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீ்ட்டில் வசித்து வருகிறார். முத்துப்பட்டணத்தில் உள்ள இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த அவர் அங்கு சென்று பார்த்த போது பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 12 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் நகை திருடியவர்களை தேடி வருகிறார்கள்.
பூவந்தி அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:
பூவந்தி அருகே உள்ள சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏலப்பிச்சன் (வயது 42). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகங்கை சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சித்தாலங்குடி அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி செல்லாயி பூவந்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இளையான்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள தெற்கு கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகர் (வயது 60). இவர் கடந்த ஆண்டில் மலேசியாவில் வேலை பார்த்து விட்டு கொரோனா காலத்தில் ஊர் திரும்பியுள்ளார். இங்கு விவசாயம் பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்து உள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பருத்தி பயிருக்கு தெளிக்க வாங்கி வைத்த பூச்சி மருந்தை எடுத்து அழகர் குடித்து விட்டார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி பாலம்மாள் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தி அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புவனம்:
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது பி.வேலாங்குளம்.இந்த பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பவித்ரா (வயது 21).இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றது. குழந்தை இல்லாததால் பவித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட பவித்ராவின் தந்தை பழனிக்குமார் தனது உறவினர் வீட்டில் மகளை தங்க வைத்துள்ளார். அங்கு பவித்ரா கழிவறைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர் அங்கு சென்று பார்த்த போது பவித்ரா துப்பட்டாவால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். பதறிய உறவினர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
திருப்புவனம் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புவனம்:
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது பி.வேலாங்குளம்.இந்த பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பவித்ரா (வயது 21).இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றது. குழந்தை இல்லாததால் பவித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட பவித்ராவின் தந்தை பழனிக்குமார் தனது உறவினர் வீட்டில் மகளை தங்க வைத்துள்ளார்.அங்கு பவித்ரா கழிவறைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர் அங்கு சென்று பார்த்த போது பவித்ரா துப்பட்டாவால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். பதறிய உறவினர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இளையான்குடி அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள மேலத்துறையூர் கிராமத்தில் சுப்பிரமணி மற்றும் கண்ணப்பன் குடும்பத்தினரிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. சுப்பிரமணி மகன் யோகேஸ்வரன் (வயது 19). இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் பி.காம் 2- ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவர் தனது நண்பர்கள் பாலசுந்தர், அஜித் ஆகியோருடன் தாயமங்கலத்தில் ஓட்டலில் இரவு உணவை முடித்து ஊருக்கு புறப்பட்டு உள்ளார். அப்போது தாயமங்கலம் விலக்கு வில்லிசேரி என்ற இடத்தில் கண்ணப்பன் மகன் நிவாஷ் (23), மற்றும் சத்தியவான் (24) முத்துக்குமார்( 28) ஆகியோருடன் வந்து யோகேஸ்வரனை தாக்கியுள்ளனர். இதில் முழங்காலில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர் ஓட்டி வந்த புதிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் சேதம் அடைந்தது. காயமடைந்த யோகேஸ்வரன் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து யோகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் தாக்குதல் நடத்திய நிவாஷ், சத்தியவான், முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:
அதிக இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. மக்களுக்கு எதிரான திட்டங்களையே மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அவர்களது திட்டங்களை மக்கள் ஏற்க தயாராக இல்லை.
வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என பா.ஜ.க.வினர் விமர்சித்து வருகின்றனர். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை. இந்தி பேசும் மாநிலத்தில் மட்டும் தான் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. பிற மாநிலங்களில் இக்கட்சிக்கு வளர்ச்சி இல்லை. தேசியமும், திராவிடமும் இணைந்து தமிழ் வளர்த்த தமிழகத்தில் எக்காலத்திலும் பா.ஜ.க. துளிர்க்க முடியாது. பா.ஜ.க. விஷச்செடி போன்றது.
தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றினால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் எடுபடாது. அந்த கூட்டணி கட்டாயத் திருமணம் போன்றது. தொடர்ந்து மத்திய அரசு தவறுகளை விமர்சிப்பேன். 2024-ம் ஆண்டு நடக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும் பிரசாரத்திற்கு வருவேன் என தெரிவித்தார்.
திருப்புவனம் அருகே வங்கிக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:
பூவந்தி அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி. கொத்தனார். இவரது மனைவி ரம்யா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் ரம்யா அருகில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் ரம்யாவின் தந்தை பெரியாம்பிள்ளை பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி தலைமையில் சிவகங்கையில் நடந்தது. கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், முத்துராமலிங்க பூபதி, கருப்புசாமி, ஆறுமுகம், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் வைகை பாசன கண்மாய்கள் பெரும்பகுதி நிரம்பாத நிலையில் உள்ளது. எனவே கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும். காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்.
ெதாடர் மழை காரணமாக சாலைக்கிராமம் பகுதியில் மிளகாய் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருப்புவனம் தாலுகாவில் முக்குடி, செங்குளம் உள்ளிட்ட 9 கிராமங்களில் வெங்காயம் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டது. பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் பரவலாக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. விளைந்த நெல்களை கொள்முதல் செய்வதற்கு 445 ஊராட்சிகளிலும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கல்லல் அருகே சரக்கு வாகனத்தில் பேட்டரி திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லல்:
கல்லல் அருகே வெற்றியூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். 2 சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 25-ந்தேதி வீட்டு முன் நிறுத்தி இருந்த 2 வாகனத்தில் இருந்தும் பேட்டரி, டீசல், ரேடியோ திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் கல்லல் போலீசார் வழக்குபதிவு செய்து புலி கண்மாயை சேர்ந்த காளிமுத்து மகன் ரமேஷ் என்பவரை கைது செய்தனர். பேட்டரி திருடியவர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசில் சிக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையான்குடி அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
இளையான்குடி:
திண்டுக்கல் மாவட்டம், வேடம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா. இவருடைய மனைவி பார்வதி(வயது 61). இவர் தனது உறவினர்கள் அழகம்மாள்(59), முத்துலட்சுமி(58), ஆராயி(62) ஆகியோருடன் இளையான்குடி அருகே பாவாகுடி ஊருக்கு உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரசு பஸ்சில் சென்றார். அந்த பஸ் சிவகங்கையில் இருந்து இளையான்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தது.
இந்த நிலையில் செங்குளம் என்ற இடத்தில் பஸ் சென்ற போது பஸ்சில் நின்றிருந்த 2 பெண்களில் ஒருவர் பார்வதியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை நைசாக திருட முயன்றார். தனது கழுத்தில் இருந்து சங்கிலி நழுவதை பார்த்ததும் உடனே சுதாரித்த பார்வதி, சங்கிலியை பிடித்து கொண்டு திருடி, திருடி என சத்தம் போட்டார்.
இவரது சத்தத்தை கேட்டதும் அவரது உறவினர்கள் நகையை பறிக்க முயன்ற பெண்ணை அங்கிருந்து தப்பி செல்ல விடாமல் தடுத்து கொண்டனர். அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் சக பெண் பயணிகள் பிடித்து வைத்து கொண்டனர்.
உடனே பஸ் டிரைவர் வெங்கடேஷ் இளையான்குடி போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டி சென்றார். நகை பறிக்க முயன்ற பெண்களை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த இசக்கி மனைவி லட்சுமி(24), அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மனைவி சாந்தி(27) என தெரிய வந்தது. இதில் லட்சுமியின் கையில் தேவி என பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் தவறான முகவரி கூறினாரா? என விசாரணை நடக்கிறது. சம்பவம் சிவகங்கை தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால் 2 பெண்களையும் இளையான்குடி போலீசார் அங்கு ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள கரும்பு கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (36). இதே ஊரைச் சேர்ந்த ஜெயந்த்ராஜ் மகன் மரியஹீலன் (24). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சாலைக்கிராமம் நோக்கி சென்றனர். அப்போது துகவூர் விலக்கு நான்கு ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த ரகுபதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மரியஹீலன் மீது வழக்குபதிவு செய்து இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






