என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போட்டோ ஸ்டுடியோ, வீடியோ கடைகள் உள்ளன.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு வீடியோ எடுக்கும் பணியினை அந்தந்த மாவட்ட போட்டோ, வீடியோ தொழிலாளர்களிடம் வழங்காமல் கார்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கியுள்ளனர்.
இதனை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள போட்டோ ஸ்டுடியோ, வீடியோ எடிட்டிங் சென்டர், கலர் லேப் மற்றும் புகைப்பட தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து வீடியோ கடை உரிமையாளர்கள் கூறுகையில், தேர்தல் வீடியோ ஒளிப்பதிவு செய்யும் பணியை கார்பரேட் நிறுவனத்திற்கு கொடுத்து வருகிறார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கார்பரேட் கம்பெனிகள் வழங்கும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வந்தோம்.
எங்களுக்கு நேரடியாக இந்த பணியை வழங்கினால் மட்டுமே தேர்தல் ஆணையம் வழங்கும் முழுமையான சம்பளம் கிடைக்கும்.
எங்களது நிலையை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சி ஆளவந்தான்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). இவர் செவரக்கோட்டை ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தவல்லி அ.தி.மு.க. பிரமுகராக உள்ளார்.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக சிவகங்கை தேர்தல் அலவலர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி காளிமுத்து (வேளாண்மை துறை) தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் காரைக்குடி வருமான வரித்துறை ஆய்வாளர் பெருமாள், நிகில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அவரது வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அங்கு இருந்த ஊராட்சி மன்ற செயலர் நாகராஜன், அவரது மனைவி ஆனந்தவல்லி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே அவரது வீட்டுக்கு வெளியே கத்தை கத்தையாக பணம் கிடந்தது. அந்த பணத்தை வருமான வரி துறையினர் எடுத்து எண்ணி பார்த்தனர். மொத்தம் ரூ. 70 ஆயிரத்து 600 இருந்தது. அந்த பணம் குறித்து அவர்கள் 2 பேரிடமும் விசாரித்தபோது சரிவர பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது? வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கப்பட்ட பணமா? அதிகாரிகள் வந்ததை அறிந்து வீட்டில் இருந்து வெளியே வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால் கல்லல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி:
காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற திசையை நோக்கி அனைவரும் பயணிக்கின்றனர். நமது லட்சியமும் ஆட்சி மாற்றம்தான். 10 ஆண்டுகால அவலத்தை முழுமையாக உடைதெறிய வேண்டும். இந்த சரித்திர நிகழ்வை படைக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
தற்போது தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும், தமிழ்மொழிக்கும் பேராபத்து ஏற்பட்டு வருகிறது என எச்சரிக்க விரும்புகிறேன்.
பேராபத்தை ஏற்படுத்தும் நச்சுச்செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தேர்தலையே திருடும் கட்சி பா.ஜனதா கட்சி. இதனை உயர்ந்த கலையாகவே நினைத்து செயல்பட்டு வருகிறது.
பல மாநிலங்களில் அரசியலை சில்லறை வியாபாரமாக செய்து வரும் பா.ஜனதா, தமிழகக்தில் மொத்த வியாபாரமாக செய்ய முயன்று வருகிறது. அ.தி.மு.க. தலைமை ஆட்சியையும், கட்சியையும் அவர்களிடம் அடமானம் வைக்கிறது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு பல்வேறு அவசர அறிவிப்புகளை வெளியிட்டார். வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியிடம் அனுமதிபெற வேண்டும். இவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள்.
பா.ஜனதா இந்துக்களை, முஸ்லிம்களை, கிறிஸ்தவர்ளை வேறுபடுத்தி பிரித்து பார்க்கிறது. என்னை கண்ட துண்டமாக வெட்டிப்போட்டாலும் இதனை நான் ஏற்க மாட்டேன். பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர், பெண்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும், சட்ட நீதிமன்றங்களுக்கும், சமூகத்திற்கும் பாதுகாப்பின்மை, தமிழ்மொழியை, தமிழ் இனத்தை பாதுகாக்க வெகுண்டெழுந்து வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இந்த பணிகள் முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரத்திலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
கீழடியில் தோண்டப்பட்ட ஒரு குழியில் பாசி மணிகள், சில்லுவட்டுக்கள் மற்றும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொந்தகையில் வாய் பகுதி மூடிய நிலையில் உள்ள முழுமையான முதுமக்கள் தாழி மற்றும் சேதமுற்ற முதுமக்கள் தாழிகள் என பல கண்டுபிடிக்கப்பட்டன.
அகரத்தில் ஒரு குழி தோண்டி அகழாய்வு மேற்கொண்ட போது முதலில் சேதமுற்ற நிலையில் சிறிய பானை ஓடுகள் கிடைத்தன. தொடர்ந்து குழியை ஆழமாக தோண்டிய போது சேதமுற்ற நிலையில் தானியங்கள் சேமித்து வைக்கும் மண்கலன் நேற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த கலன் சேதமுற்ற நிலையில் சுவருடன் ஒட்டிய நிலையில் உள்ளது.
முந்தைய காலங்களில் களிமண்ணால் வட்ட உறை ஆக செய்து வீடுகளில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து பூசி இருக்கிறார்கள். இந்த கலன்களில் நெல், தானியம் சேமித்து வைத்து, தேவைப்படும் போது சிறுக, சிறுக எடுத்து மக்கள் பயன்படுத்தி இருப்பதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே வகுப்பில் படித்து வரும் பிளஸ்-1 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களை கவலையடைய வைத்துள்ளது.
இதை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து நேற்று பள்ளியில் சக மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பிளஸ்-1 படிக்கும் இன்னொரு மாணவிக்கும், மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே வகுப்பில் படித்துவரும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.
பின்னர் அந்த பள்ளியில் படித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கூட பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அது மட்டுமின்றி அந்த பள்ளி செயல்பட்டு வரும் ஊரிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அந்த பள்ளியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் யசோதாமணி ஆகியோர் பார்வையிட்டனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சரஸ்வதி வாசக சாலை வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி.
இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கார்த்திக் (வயது 45).திருமணமாகாத இவர், வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கார்த்திக் வீடு திரும்பவில்லை. அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.
இதற்கிடையே இன்று காலை சிலம்பணி ஊரணியில் வாலிபர் பிணம் கிடப்பதாக தேவகோட்டை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயங்களுடன் காணப்பட்ட உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது கார்த்திக் என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு வந்த அவர்கள், மகனின் உடலை பார்த்ததும் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கொன்று உடலை ஊரணியில் வீசிச் சென்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான கார்த்திக்குக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அய்யனார், கார்த்திக் வீட்டுக்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. எனவே இந்த சந்தேகத்தின் அடிப்படையில் அய்யனாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ராசகுமார் போட்டியிடுகிறார். இவர் இன்று காரைக்குடி சந்தை பேட்டை மயானத்தில் உள்ள கல்லறைகளுக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த நூதன பிரசாரம் குறித்து ராசகுமார் கூறுகையில், நான் காரைக்குடி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அனாதை பிணங்களை இதே கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்துள்ளேன். அவர்கள் ஆசி கிடைக்கவும், எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அனைவரும் கடைசியில் இங்குதான் வரவேண்டும். இதை உணர்த்தும் வகையில் எனது பிரசாரத்தை இங்கிருந்து தொடங்கி உள்ளேன் என்று கூறினார்.






