என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    சந்தைக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும்- சுகாதாரத்துறையினர் அறிவுரை

    கொரோனா 2-வது அலை உருவாகி வருவதால் கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
    கல்லல்:

    கல்லல் பகுதிகளில் சொக்கநாதபுரத்தில் (செவ்வாய்க்கிழமை),பாகனேரியில் (புதன்கிழமை), மதகுபட்டி கல்லல் பகுதியில்(வியாழக்கிழமை) வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைகளில் பொதுமக்கள் காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க அலைமோதுவது உண்டு. சமீப காலமாக கொரோனா தொற்று குறைந்ததால் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. அதோடு சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. தற்போது கொரோனா 2-வது அலை உருவாகி வருவதால் கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அடுத்த முறை சந்தை நடைபெறும் நாட்களில் வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×