என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் விடுமுறை நாளில் செயல்பட்ட 47 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த்  உத்தரவின்படியும்  மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர்  குமரன்,  இணை ஆணையர்  சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டு தலின்படியும், தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேசிய விடுமுறை தினமான  குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.

     தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கான  படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கான படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்£ன படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணிநேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அலு வலர்களிடம் சமர்ப்பிக்க  வேண்டும்.

    அவ்வாறு தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று மற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின்போது சட்ட விதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களின் மீது சிவகங்கை மாவட்டத்தில் 47 நிறுவனங்களில் முரண் பாடுகள் கண்டறியப்பட்டு   உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சிவகங்கை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிமுறை கள் மற்றும் தேர்தல் நட வடிக்கைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதுசூதன் ரெட்டி  தலைமையில் நடந்தது. 

    இதில் கலெக்டர் பேசுகையில், மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் உள்ள 117 வார்டு உறுப்பினர், கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 11 பேரூராட்சிகளில் உள்ள 168 வார்டு உறுப்பினர்கள் கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 

    இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1,63,577, பெண் வாக்காளர்கள் 1,72,527, இதரர் 13 மொத்தம் 3,36,117 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 

    வேட்பு மனு தாக்கல் இன்று(28-ந்தேதி)  தொடங்கி  வருகிற  4.2.2022 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். 

    வேட்பு மனுக்கள் ஆய்வு செய்தல் 5.2.2022 அன்று நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் 7.2.2022. வாக்குப்பதிவு நடைபெறும் நாள் 19.2.2022,  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 22.2.2022 ஆகும்.

    இந்த தேர்தலில் நன்னடத்தை விதிகளையும்,  கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திர மாகவும் மற்றும் பாதுகாப் பாகவும் நடைபெற  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    வருவாய் கோட்டாட்சியர்கள்  முத்துக்கலுவன் (சிவகங்கை),  பிரபாகரன் (தேவகோட்டை), மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப் பாளர்  வெற்றிச்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர்  ரத்தினவேல்,  கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)  லோகன் மற்றும்  தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூர் அருகே செங்கல் சூளை அதிபர் விபத்தில் பலியானார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெருவை சேர்ந்தவர் சையதுஅலி (வயது46). இவர் கே.வைரவன்பட்டியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். 

    சையதுஅலி வழக்கம்போல காலையில் செங்கல் சூளைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். 

    அப்போது காரையூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகன் ராஜா (30) என்பவர் திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில்  சையதுஅலி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். 

    ராஜாவும் தலையில்  காயத்துடன் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

    விபத்து தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பராமரிப்பு பணி காரணமாக தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    தேவகோட்டை


    சிவகங்கை மாவடம் தேவகோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு  பணிகள் நடைபெற உள்ளன. 

    இதன் காரணமாக  தேவகோட்டை டவுன், உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை,  காயாவயல், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தேவகோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.
    சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா திருத்த முகாம் 28-ந் தேதி நடக்கிறது
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட  கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப் பிடங்களுக்கே கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.
     
    அதன் தொடர்ச்சியாக வருகிற 28ந்தேதி (வெள்ளிக்கிழமை) காரைக்குடி வட்டத்தில் வெற்றியூர் கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் மாடக்கோட்டை கிராமத் திலும், திருப்பத்தூர் வட்டத்தில் மகிபாலன்பட்டி கிராமத்திலும், சிங்கம் புணரி வட்டத்தில் முறையூர் கிராமத்திலும், சிவகங்கை வட்டத்தில் நகரம்பட்டி கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் விளத்தூர் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் வு.நெல்முடிக்கரை கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில் சூராணம் கிராமத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் முத்தூர் கிராமத்திலும் கணினி பட்டா திருத்த முகாம்கள் நடைபெற உள்ளன.

    பொதுமக்கள் மேற்கண்ட கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில்  கலந்து கொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதும், தாங்கள் வந்த தடயங்களை மறைப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்து எரித்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் 5-வது வீதியில் கணேசன் என்பவர் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் நிலையில், மனைவி நித்யா மற்றும் குடும்பத்தினர் மட்டும் இங்கு வசித்து வந்தனர்.

    கடந்த 22-ந் தேதி நித்யா மற்றும் குடும்பத்தினர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனால் அவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப்துறையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயமூர்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே துக்க வீட்டுக்கு சென்ற நித்யா உள்ளிட்ட குடும்பத்தினர் தகவல் அறிந்து வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டை பார்த்து கதறி அழுதனர்.

    வீடு முழுவதும் தீ பரவியதால் வீட்டுக்குள் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இதனால் யாரோ மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதும், தாங்கள் வந்த தடயங்களை மறைப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்து எரித்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகங்கை தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடம் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

    தேவகோட்டை ராம்நகர் பகுதியானது வளர்ந்து வரும் பகுதியாகும். நீதிமன்றங்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் இந்தப்பகுதியில் உள்ளன. இதனால் தேவகோட்டையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு அதிக அளவில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வரு கின்றனர். இங்கு கொள்ளை சம்பவம் மற்றும் தீ விபத்து நடைபெற்றிருப்பது அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகங்கை அருகே ரசாயனம் இல்லாத இயற்கை முறையில் விளைந்துள்ள நெற்பயிர்களை விவசாயிகள் பார்த்து வியந்து வருகிறார்கள்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே  உள்ள குமாரபட்டி கிராமத் தில் 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ள  மாப்பிள்ளை சம்பா ரக நெற்பயிர்களை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்

    குமாரபட்டி கிராமத்தை சேர்ந்த காளைமாயாண்டி தனது வயலில் ரசாயன உரம் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பாரம் பரிய நெல் ரகமான மாப் பிள்ளை சம்பாவை சாகுபடி செய்துள்ளார். 

    இந்த நெற்பயிர்கள் தற்போது 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன. நெற்பயிர்கள் நன்றாக தூர் வெடித்துக் காணப்படுவதால் ஒவ்வொரு கதிரிலும் 200-க்கும் அதிக மாக நெல்மணிகள் விளைந்துள்ளன.இதையறிந்த சுற்றுவட் டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நேரில் வந்து பயிர்களை பார்த்து வியந்து, சாகுபடி முறை மற்றும் பராமரிப்பு குறித்து ஆர்வத்துடன் கேட்டுச் செல் கின்றனர். 

    காளைபாண்டிக்கு சொந்தமாக சில ஏக்கர் நிலம் உள்ளது. அவர் கூறுகையில், எல்லா விவசாயிகளை போலவே நானும் ரசாயன உரத்தைப் பயன்படுத்தி குறுகிய கால நெல் ரகங்களைத்தான் சாகுபடி செய்து வந்தேன். சாகுபடி செலவு அதிகம், மகசூல் குறைவு என்றாலும்  உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது  என்று எண்ணி லாப, நஷ்ட கணக்குப் பார்க்காமல் குறுகிய கால நெல் ரகங்களையே சாகுபடி செய்து வந்தேன்.

    கடந்த சில ஆண்டுகளாகவே ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் மாட்டு சாணம் உட்பட இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்வது குறித்த விவரங்களைக் கேட்டு சேகரித்து  வந்தேன்.  முதல் முறையாக இந்த ஆண்டு தான் பாரம்பரிய நெல் சாகு படிக்கு மாறினேன்.

    முதல் முறை என்பதால் மொத்தமுள்ள எல்லா நிலத்திலும் சாகுபடி செய்ய வேண்டாம் என முடிவு செய்து, ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் சாகுபடி செய்தேன். நண்பர் ஒருவரிடம் பாரம்பரிய ரகமான  மாப்பிள்ளை சம்பா  விதைநெல் 2 கிலோ வாங்கி அதைக்கொண்டு பாய் நாற்றங்கால் முறையில் விதைத்தேன்.

    பின்னர் நெற்பயிர் களைப் பறித்து வயலில் நடவு செய்தேன். நடவுக்கு முன்பு  வயலில் தண்ணீர்பாய்ச்சி உழவு ஓட்டியதுடன் சரி, வேறு எதுவும் செய்ய வில்லை. அத்துடன் எந்த ரசாயன உரத்தையும் பயன்படுத்தவில்லை.

    தொடக்கத்திலேயே பயிர்கள் நன்கு வளரத் தொடங்கின. அவ்வப்போது மழை பெய்ததால் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையும் மிச்சமானது.

    தற்போது, நட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன. இன்னும் சில நாட்களுக்குள் அறுவடை செய்துவிடலாம். 

    மாப்பிள்ளை சம்பா நன்கு உயரமாக வளரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.

    ஒவ்வொரு கதிரிலும் 200-க்கும் மேற்பட்ட நெல் மணிகள் விளைந்துள்ளன. பயிர்கள் நன்கு திடமாக வளர்ந்துள்ளதால் இதன் மூலம் கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கும் நல்ல தீவன மாகும். இனி, என்னு டைய எல்லா வயல்களிலும் மாப்பிள்ளை சம்பா ரகத்தையே சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.
    காரைக்குடியில் சாலையில் தவற விட்ட நகையை ஒரு மணி நேரத்தில் உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
    காரைக்குடி

    தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயலைச் சேர்ந்தவர் பழனியப்பன். அவரது மனைவி விசாலாட்சி.இவர் தனது வைரம் மற்றும் தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைப்பதற்காக தாயாருடன் இருசக்கர வாகனத்தில் காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.

    வங்கிக்கு சென்று பார்த்தபோது ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம், செல்போன் வைத்திருந்த கைப்பை காணாமல் போனதை கண்டு  அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனடியாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் பெரியார் சிலை அருகே கீழே விழுந்த கைப்பையை மர்ம நபர் ஒருவர் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.ஒரு மணி நேரத்தில் அவரிடம் இருந்து கைப்பையை கைப்பற்றி போலீசார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  

    இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் நகை பையை விசாலாட்சியிடம் ஒப்படைத்தனர்.
    சிங்கம்புணரி அருகே விவசாயிகள் கள் குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி பகுதியில் இயற்கை விவசாயி சிவராமன் தலைமையில் விவசாயிகள் ஒன்றிணைந்து கள் இறக்கும் போராட்டம் நடத்தினர். 

    இதில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் நடைபெறும் கள் இறக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில் உலகம்பட்டி ஞானியார் மடம் அருகிலுள்ள தென்னை மரத்தில் கள் இறக்கி அதன் தேவையும் அதன் பயன்பாடும் அதன் பொருளாதாரமும் அதன்மூலம் ஈட்டக்கூடிய அண்ணிய செலாவணியையும் எடுத்துக்கூறி விவசாயிகள் கள் இறக்கி அதனை குடித்து போராட்டம் நடத்தினர். 

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் 88,510 கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை சோலை நகரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 16&ந்தேதி முதல் இந்த ஆண்டு 20ந்தேதி வரை மொத்தம் 16 லட்சத்து 69 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 9 லட்சத்து 99 ஆயிரத்து 136 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட 49 ஆயிரத்து 145 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

    தற்போது கோவிஷீல்டு 69 ஆயிரத்து 430 டோசும், கோவாக்சின் தடுப்பூசி 19 ஆயிரத்து 80 டோசும் சேர்த்து மொத்தம் 88 ஆயிரத்து 510 தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளது.

    கொரோனா நோய் தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முழுமையாக தங்களது முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி மருந்துகளை செலுத்திக்கொள்வது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்பத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் இந்துமதி(வயது 19). கல்லூரி மாணவியான இவர், தனது தாயாரின் மறைவிற்கு பிறகு ஊர்க்குளத்தான்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். 

    இந்த நிலையில் தனது உறவினர்களிடம் தனக்கு ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறிய இந்துமதி, வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை உள்தாழிட்டு இருந்துள்ளார்.  வெகுநேரமாகியும் பூட்டிய கதவை திறக்காததால், சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, மாணவி இந்துமதி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.  

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

    கல்லூரி மாணவி தற்கொலை குறித்து கண்டவராயன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
    தேவகோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து எண்ணை ஏற்றிக்கொண்டு  ஒரு லாரி வந்தது. அந்த  லாரியை காரைக்குடியை சேர்ந்த சுந்தரம் என்பவர் ஓட்டி வந்தார். 

    லாரி நேற்று இரவு தேவகோட்டை அருகே உள்ள கோவணி கிராம பகுதிக்கு வந்தபோது டயர் பஞ்சரானது. இதையடுத்து டிரைவர் லாரியை ரோட்டின் ஓரமாக நிறுத்தினார். பஞ்சரான டயரை கழற்றி விட்டு வேறு டயரை மாற்ற முயற்சித்தார். அந்த பகுதி இருட்டாக இருந்தது.

    இதனால் லாரி நிறுத்தப்பட்டிருந்த ரோட்டின் அருகே உள்ள வீட்டில் இருந்த விவசாயி உடையப்பன் (வயது 54) என்பவரை தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் உடையப்பனும் அங்கு வந்து  லாரியின் டயரை டிரைவர்  எளிதாக கழற்றுவதற்காக, தனது செல்போன் லைட்டை ஒளிர செய்தபடி சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக காரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் சென்றார். அவர் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த உடையப்பன் மற்றும் லாரியின் டிரைவர் சுந்தரம் ஆகியோர் மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    மோட்டார் சைக்கிள் மோதியதில் உடையப்பன், சுந்தரம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உடையப்பன் பரிதாபமாக இறந்தார். லாரி டிரைவர் சுந்தரம் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்பு அவர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உடையப்பன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் எது என்று துப்பு துலக்கி வருகின்றனர். 

    லாரி டயர் பஞ்சரானதால் தவித்தப்படி நின்ற டிரைவருக்கு உதவிய விவசாயி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    ×