என் மலர்
சிவகங்கை
பள்ளத்தூர் பேரூராட்சியின் 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் ருக்மணியும், 8-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் தெய்வானையும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
காரைக்குடி,:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
பள்ளத்தூர் பேரூராட்சியின் 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் ருக்மணியும், 8-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் தெய்வானையும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இறுதிநாளான நேற்று இந்த 2 வார்டுகளிலும் இவர்களை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக ருக்மணியும், தெய்வானையும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
7, 8-வது வார்டுகளில் இன்று மனு சரிபார்க்கப்படுகிறது. இதன் பின் இதற்குரிய முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
பள்ளத்தூர் பேரூராட்சியின் 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் ருக்மணியும், 8-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் தெய்வானையும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இறுதிநாளான நேற்று இந்த 2 வார்டுகளிலும் இவர்களை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக ருக்மணியும், தெய்வானையும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
7, 8-வது வார்டுகளில் இன்று மனு சரிபார்க்கப்படுகிறது. இதன் பின் இதற்குரிய முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காளையார்கோவில் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் கொலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பக்கமுள்ள புரசடி உடைப்பு பகுதியில் செயல்படும் திறந்தவெளி சிறைச்சாலை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்? என்று விசாரணை நடத்தினர். அதில் அவர் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்த அதியதிரும்பல் கிராமத்தை சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் சண்முகம் (வயது 32) என்பது தெரியவந்தது.
கோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்த அவர் ஊருக்கு வந்திருந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விவரம் தெரியவில்லை.
இது தொடர்பாக காளையார் கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சண்முகம் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்புதுலங்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் கொலையாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி சிக்ரி கண்டுபிடித்துள்ள மண் பரிசோதனை கருவி விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி மையத்தில் சிக்ரி விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மண் பரிசோதனை கருவியினை விவசாயிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, வேளாண்மைத்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிக்ரி ஆராய்ச்சி மைய கூட்டரங்கில் நடைபெற்றது. மைய இயக்குநர் டாக்டர் கலைச்செல்வி, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் மண் பரிசோதனை கருவியை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
விவசாயிகளின் உயிர்நாடியாக இருப்பது மண்ணாகும். விளைநிலத்தில் மண் நன்றாக இருந்தால் தான் நாம் மேற்கொள்ள உள்ள பயிர் வகைகள் நல்ல மகசூலை பெற்றுத்தரமுடியும். அந்த அளவிற்கு மண் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அந்த மண்ணை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் பரிசோதனைக்கு எடுத்து வந்து, பரிசோதனை செய்து அதற்குரிய விபரங்கள் தெரிவதற்கு 4 முதல் 5 நாட்கள் வரை ஆகும். இதனால் விவசாயிகளுக்கு காலவிரயம் மற்றும் பொருட்செலவு ஏற்பட்டு வந்தது.
தற்போது காரைக்குடியில் உள்ள சிக்ரி ஆராய்ச்சி நிறுவனத்தை சார்ந்த விஞ்ஞானிகள் மூலம் எளியமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள மண் பரிசோதனைக்கருவி வேளாண்மைத்துறை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கருவியினை ஒவ்வொரு வட்டார அளவிலும் உதவி வேளாண்துறை அலுவலர்கள் தலைமையில் வேளாண்மைத்துறை விரிவாக்க அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக எடுத்துச்சென்று விவசாயிகள் முன்னிலையில் அவர்களின் நிலங்களில் மண் பரிசோதனை செய்து, மண்ணில் உள்ள சத்துத்தன்மை அளவை எடுத்துச்சொல்வதுடன், எந்த வகையான பயிர்களை பயிரிடலாம் எனவும் எடுத்துரைப்பார்கள்.
இந்த பரிசோதனை மூலம் ஒரு விவசாயிக்கு 15 நிமிடங்களில் மண் பரிசோதனை செய்து உரிய விவரத்தை தெரிவிக்கமுடியும். இதற்காக விவசாயி குறைவான கட்டணம் செலுத்தினால் போதும். இத்தகைய திட்டம் என்பது விவசாயிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.
மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மண் பரிசோதனைக்கருவி தேவையான அளவு பெற்றுக்கொள்ள ஏதுவாக, காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி மையம் மூலம் வழங்குவதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிக்ரி ஆராய்ச்சி மைய இயக்குநர்(ஓய்வு) டாக்டர்.பாலகிருஷ்ணன், வேளாண் துறை பேராசிரியர்கள் மதியரசன், கண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழக முதல்வர் செந்தூர்குமரன், காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி மையப்பொறியாளர்கள் கென்னடி, சுரேஷ், சசிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கையில் இயக்கப்படும் பஸ்களில் அதிக ஒலி எழுப்பி ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கையாவிற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து இன்று அவரது தலைமையிலான குழுவினர் சிவகங்கை பஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தனர். இதில் பல தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்ககளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்தனர். டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இது போன்ற ஏர்ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் திடீரென்று ஆய்வு செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மானாமதுரை பகுதிகளில் குழந்தை தொழிலாளர் குறித்து அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தெருவாழ் சிறார்கள் கண்டறிவதற்கான கள ஆய்வு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் ஜீவானந்தம், ரசீந்திரகுமார், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இல்லம் சாரா பாதுகாப்பு அலுவலர் முத்துக்கண்ணு, சமூக பணியாளர் சத்தியமூர்த்தி, புறத்தொடர்பாளர் நாகராஜன், சைல்டு லைன் துணை மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், உறுப்பினர் சரவணன், காவலர்கள் கலைச்செல்வி, லதா ஆகியோர் ஈடுபட்டனர்.
மானாமதுரை வாரச்சந்தை, ஆனந்த வள்ளியம்மன் கோவில், காந்தி சிலை, பழைய பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலைய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 6&ந்தேதி தொடங்குகிறது
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் புகழ்பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா வருகிற 6ந்தேதி மாலை 6 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
மறுநாள்(7ந்தேதி) காலை 7 மணிக்கு சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் காலை 9.18 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. வருகிற 12ந்தேதி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவமும், 13-ந்தேதி மாலை சூர்ணாபிஷேகமும் தங்கத் தோளிக்கினியானில் சுவாமி திருவீதி புறப்பாடும், தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடுதல் விழாவும் நடைபெறுகிறது.
14ந்தேதி அரண்மனை மண்டகப்படியும், குதிரை வாகன புறப்பாடும், 15ந்தேதி வெண்ணெய்த்தாழி சேவையும், பகல் 10.50 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் வைபவமும், 16ந்தேதி தெப்பத்திருளான்று காலை 10.10 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு தெப்பம் கண்டருளல் வைபவமும் நடைபெற உள்ளது. 17ந்தேதி தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.
தெப்பத்திருவிழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி டி.எஸ்.கே. மதுராந்தக நாச்சியார், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தேவகோட்டையில் திருமணமான வாலிபர், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தாய் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 17 வயது மகள் காரைக்குடியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த மாணவியின் தாயார் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
உடல் முழுவதும் கருகிய நிலையில் காணப்பட்ட மாணவியின் தாயாருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு காரைக்குடியில் பணிபுரியும் நாகர்கோவிலைச் சேர்ந்த திருமணமான முத்துக்கருப்பன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை மாணவியின் தாயார் கண்டித்துள்ளார். ஆனாலும் அதை கண்டு கொள்ளாத முத்துகருப்பன் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மிரட்டியும் வந்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த மாணவியின் தாய் தீக்குளித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 17 வயது மகள் காரைக்குடியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த மாணவியின் தாயார் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
உடல் முழுவதும் கருகிய நிலையில் காணப்பட்ட மாணவியின் தாயாருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு காரைக்குடியில் பணிபுரியும் நாகர்கோவிலைச் சேர்ந்த திருமணமான முத்துக்கருப்பன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை மாணவியின் தாயார் கண்டித்துள்ளார். ஆனாலும் அதை கண்டு கொள்ளாத முத்துகருப்பன் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மிரட்டியும் வந்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த மாணவியின் தாய் தீக்குளித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே முன்விரோத காரணமாக மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மறவமங்களம் அருகே புரசைவிடுப்பு திறந்தவெளி சிறைச்சாலை அருகே உள்ள வயல்வெளியில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் இன்று இறந்து கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காளையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
அவரை யாரோ மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் கொலை செய்யப்பட்டவர் மறவமங்கலம் அருகே உள்ள அளியாதிரும்பள் கிராமத்தை சேர்ந்த சின்னயா என்பவரின் மகன் சண்முகம் (வயது35) என்பது தெரியவந்தது.
இவர் கோவையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஊருக்கு வந்திருந்த இவர் நேற்று இரவு மறவமங்கலம் சாலையில் உள்ள மதுபான கடையில் மது வாங்கி விட்டு மறைவான பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில் மதுபான கடையில் இருந்து சிறிய தூரத்தில் சண்முகம் கொலை செய்யப்பட்டு கிடப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் சண்முகத்தின் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கொலை நடந்த இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.இதையடுத்து சண்முகத்தின் உடல் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சண்முகத்தை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது தெரியவில்லை. இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
அவர் சண்முகத்தை கொன்ற கொலையாளிகளை விரைவில் பிடிக்க உத்தரவிட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக சண்முகம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் 36 பேர் மனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் கடந்த 3 நாட்களில் 5 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க. சார்பில் 23 வேட்பாளர்களும், பா.ஜனதா சார்பில் 2 வேட்பாளர்களும், தே.மு.தி.க. சார்பில் 1 வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி சார்பில் 3 வேட்பாளரும், சுயேட்சையாக 7 வேட்பாளர் என 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை நகராட்சியில் போட்டியிட நேற்று வரை 41 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ. 2.88 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் களைகட்ட தொடங்கியுள்ளது. முக்கிய அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். தேர்தலில் பணப்பட்டு வாடா, அன்பளிப்பு வழங்குதல் போன்றவற்றை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி சிங்கம்புணரி ரோட்டில் வட்டாட்சியர் சாந்தி, சப்&இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், போலீஸ்காரர்கள் குணசேகரன், பாண்டி, மலைச்சாமி ஆகியோர் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனி மாவட்டம் போடியில் இருந்து திருமயத்திற்கு சென்ற சரக்கு வேனை மறித்து பறக்கும்படையினர் சோதனை செய்தனர்.
அந்த வேனில் திருமயத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி முகமது அனிபா(வயது22) என்பவர் ரூ.94ஆயிரத்து500 வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் தம்பிபட்டி பைபாஸ் ரோட்டில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் வந்த கருங்குளத்தை சேர்ந்த முருகன்(54) என்பவர் ரூ.52 ஆயிரத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றது தெரியவந்தது. போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் பறக்கும் படை அதிகாரி நெப்போலியன், போலீஸ் சப்-&இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் வாகனசோதனை நடந்தது. அப்போது காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி சென்ற வாகனத்தை சோதனை செய்தபோது வெங்கடேஷ் என்பவர் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்தை ஆவணம் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பணம் கொண்டு வந்தவர்களிடம் உரிய ஆவணங்களை காட்டி அதனை பெற்றுச்செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் ஆவணம் இன்றி கொண்டு சென்றதாக ரூ 2.88 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவிகளை கலெக்டர் பாராட்டினார்.
சிவகங்கை
தமிழக அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு ஏதுவாக ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சபானா, அரசு இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி, கோயம்புத்தூரிலும், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.திவ்யா அரசு மருத்துவக்கல்லூரி ராமநாத புரத்திலும், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.மாதேஸ்வரி, அரசு மருத்துவக்கல்லூரி சிவகங்கையிலும் மற்றும் மாங்குடி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஸ்நேகா செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி கிருஷ்ணகிரி என மொத்தம் 4 மாணவிகளுக்கு இட ஒதுக் கீட்டிற்கான ஆணைகள் பெறப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் வரும் ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று இதுபோல் மருத்துவப்படிப்பில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்தநிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரேவதி, அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சர்மிளா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காரைக்குடியில் நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பல் பொதுமக்களிடம் கைவரிசை காட்டி வருகிறது.
காரைக்குடி
ஆதார் கார்டு, பான்கார்டு எண்கள் விவரங்களை பொதுமக்களிடம் செல்போனில் பேசி அதன் மூலம் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும் நூதன மோசடி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தற்போது அரங்கேறி வருகிறது. அந்த கும்பல் காரைக்குடியை சேர்ந்த 2 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளது.
காரைக்குடி பெரியார் நகரை சேர்ந்தவர் ஜோஸ்பின் நிர்மலா. இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 30ந் தேதி குறுந்தகவல் வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில் பான்கார்டு இணைக்கப்படவில்லை என்றும், உடனடியாக இந்த குறுந்தகவலில் உள்ள லிங்க்கில் சென்று பான்கார்டை இணைக்கும் படி தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜோஸ்பின் நிர்மலா அந்த லிங்க்கில் சென்று தனது பான்கார்டு மற்றும் விவரங்களை பதிவு செய்துள்ளார். சற்றுநேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பறிபோனது. இதுகுறித்து ஜோஸ்பின் நிர்மலா சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி கண்ணதாசன்நகரை சேர்ந்தவர் அழகுமலை குருசாமி. இவருடைய செல்போனுக்கும் அதே போல் குறுஞ்செய்தி வந்தது. அவரும் குறிப்பிட்ட லிங்க்கில் சென்று விவரங்களை இணைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்தும் ஒரு லட்ச ரூபாய் எடுக்கப்பட்டு இருப்பதாக சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரிலும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கும்பல் காரைக்குடியில் பலரது செல்போன் எண்களை பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று செல்போனில் வரும் தகவல்களை நம்பி விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்றும், இது போன்ற விசயங்களில் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறும் போலீசார் எச்சரித்துள்ளனர்.






