என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சண்முகம்
    X
    சண்முகம்

    டாஸ்மாக் பார் ஊழியர் கொலையில் தீவிர விசாரணை

    காளையார்கோவில் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் கொலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பக்கமுள்ள புரசடி உடைப்பு பகுதியில் செயல்படும் திறந்தவெளி சிறைச்சாலை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்? என்று விசாரணை நடத்தினர். அதில் அவர் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்த அதியதிரும்பல் கிராமத்தை சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் சண்முகம் (வயது 32) என்பது தெரியவந்தது.

    கோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்த  அவர் ஊருக்கு வந்திருந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விவரம் தெரியவில்லை. 

    இது தொடர்பாக காளையார் கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சண்முகம்  கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்புதுலங்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் கொலையாளிகள் குறித்து  எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×