என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக-திமுக
    X
    அதிமுக-திமுக

    பள்ளத்தூர் பேரூராட்சியில் 7, 8-வது வார்டில் தி.மு.க.-அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

    பள்ளத்தூர் பேரூராட்சியின் 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் ருக்மணியும், 8-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் தெய்வானையும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
    காரைக்குடி,:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    பள்ளத்தூர் பேரூராட்சியின் 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் ருக்மணியும், 8-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் தெய்வானையும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இறுதிநாளான நேற்று இந்த 2 வார்டுகளிலும் இவர்களை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக ருக்மணியும், தெய்வானையும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

    7, 8-வது வார்டுகளில் இன்று மனு சரிபார்க்கப்படுகிறது. இதன் பின் இதற்குரிய முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×