என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானாமதுரை வாரச்சந்தையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் தலைமையில் கள ஆய்வு நடந்தது.
குழந்தை தொழிலாளர் குறித்து அதிகாரிகள் கள ஆய்வு
மானாமதுரை பகுதிகளில் குழந்தை தொழிலாளர் குறித்து அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தெருவாழ் சிறார்கள் கண்டறிவதற்கான கள ஆய்வு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் ஜீவானந்தம், ரசீந்திரகுமார், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இல்லம் சாரா பாதுகாப்பு அலுவலர் முத்துக்கண்ணு, சமூக பணியாளர் சத்தியமூர்த்தி, புறத்தொடர்பாளர் நாகராஜன், சைல்டு லைன் துணை மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், உறுப்பினர் சரவணன், காவலர்கள் கலைச்செல்வி, லதா ஆகியோர் ஈடுபட்டனர்.
மானாமதுரை வாரச்சந்தை, ஆனந்த வள்ளியம்மன் கோவில், காந்தி சிலை, பழைய பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலைய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
Next Story






