என் மலர்
சிவகங்கை
- கிறிஸ்தவ சப்பரம் பவனி திருவிழா நடந்தது.
- 2 ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் வருடம் தோறும் சப்பரம் என்னும் தேர் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். 2 ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்த ஆண்டு சிங்கம்புணரி பங்குத்தந்தையால் தேவாலயத்தில் ஜெப நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளான மேல கச்சேரி தெரு, பொன்னமராவதி சாலை, ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் சப்பரம் வலம் வந்தது.
சப்பரத்தை சாதி மத பேதமில்லாமல் அனைத்து மதத்தினரும் கண்டு களித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமுழுக்கு யோவான் ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
- வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலியானார்.
- தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தளக்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து (38), தனியார் மில்லில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுதா (32), இவர்களுக்கு யோகேஸ்வரி (13), புவனேஸ்வரி (12) என 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று இரவு மணிமுத்து வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மணிமுத்துவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதலமைச்சரால் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது 2022 வழங்கப்பட உள்ளது.
இந்த விருது பெறுவ தற்கு கீழ்காணும் தகுதிகளை யுடைய தமிழக அரசின் (https://awards.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பங்ளை (தமிழ மற்றும் ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தலா 2 நகல்கள் மற்றும் புகைப்படம்) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்திலுள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகதிதில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
- வீட்டின் முன்பகுதியில் நின்று இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் மார்க் ஆண்டனி (வயது 43). இவரது மனைவி கற்பகம் (38). இவர்களுக்கு ரவீந்திரன்(22), நவீன்(18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரவீந்திரன் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். நவீன் பாலிடெக்னிக் படிக்கிறார்.
ஆண்டனி கேரளாவில் கரிமூட்டம் போடும் வேலை செய்து வந்தார். மனைவி மற்றும் மகன்களை பார்க்க விடுப்பு எடுத்து கொண்டு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அதே போல் 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கைக்கு வந்திருக்கிறார்.
ஆண்டனிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஊருக்கு வந்திருந்த நேரத்தில் மது குடித்தப்படி இருந்துள்ளார். நேற்று இரவும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். தனது கணவரின் இந்த செயல் கற்பகத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று காலை மகன்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டனர். அந்த நேரத்தில் மது குடித்து திரிவது குறித்து தனது கணவரிடம் கற்பகம் கேட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
வீட்டின் முன்பகுதியில் நின்று இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த மார்க் ஆண்டனி, கீழே கிடந்த உடற்பயிற்சி செய்யும் தம்புல்ஸை எடுத்து கற்பகத்தின் தலையில் அடித்தார். இதில் படுகாயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆத்திரத்தில் அடித்ததில் மனைவி இறந்து கிடந்ததை கண்டு மார்க் ஆண்டனி வேதனை அடைந்தார். அவர் தனது மனைவியை அடித்து கொலை செய்து விட்டதாக கூறி, சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து மார்க் ஆண்டனியின் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வந்தனர்.
அவர்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மது குடிப்பதை கண்டித்த மனைவியை கணவர் அடித்து கொன்ற சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறித்து வங்கி தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்துகின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.
இந்த ஏ.டி.எம். பிரதான சாலையில் இருப்பதால் தினமும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து பணம் எடுத்து செல்வார்கள். இதனால் இந்த ஏ.டி.எம்.மில் தினமும் ரூ.10 லட்சம் வரை நிரப்பப்படும்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு ஒரு மர்மநபர் வந்துள்ளார்.
அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதியை அந்த நபர் உடைத்தபோது அலாரம் ஒலித்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் அந்த வழியாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகனத்தில் வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் அலாரம் ஒலித்து கொண்டிருந்ததால் சந்தேகத்தின்பேரில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர்.
கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்த அவர்கள், அதுபற்றி மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறித்து வங்கி தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்துகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை கண்டுபிடிப்பதற்காக ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது அலாரம் அடித்ததால் பணத்தை கொள்ளையடிக்க வந்த மர்மநபர் சிக்கி விடுவோம் என்று அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டார். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.
பிரதான சாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது மானாமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மானாமதுரை பகுதி சிவாலயங்களில் பிரதோஷ பூஜை விழா நடந்தது.
- ஆனிமாத முதல் பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மானாமதுரை சுற்றி உள்ள சிவாலயங்களில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தன. வைகை ஆற்றுகரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் நடந்த பூஜையில் நந்திக்கும் சோமநாதருக்கும் பல வகையான அபிஷேகம், உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள ஆதிசங்கரருக்கும் இடைக்காட்டூர் மணிகண்டேசுவரருக்கும், வேம்பத்தூர் கைலாச நாதருக்கும், நாகலிங்கம் நகரில் உள்ள அண்ணா மலையாருக்கும், மேலெ நெட்டூர் சொர்ண வாரீஸ்வ ரருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
மானாமதுரை-பரமக்குடி சாலையில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் காசிநந்திக்கு ஏராளமான பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். ஆனிமாத முதல் பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மானாமதுரை சுற்றி உள்ள சிவாலயங்களில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு ரூ.4.35 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
- தன்னார்வ சட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 15 மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டன.
இதையடுத்து மாவ ட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 71 குற்றவியல் வழக்குகளும், 86 காசோலை மோசடி வழக்குகளும், 262 வங்கிக் கடன் வழக்குகளும், 198 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், மின்வாரியம் சம்மந்தப்பட்ட வழக்குகள் 1, 37 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 171 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 981 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 1807 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.
இதில் 1066 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.3 கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 399 வரையில் வழக்காடிகளுக்கு நிவாரணமாக கிடைத்தது. அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 450 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 192 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 50 வரையில் வங்கிகளுக்கு வரவானது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர்கள், இளநிலை நிர்வாக உதவியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். வழக்காடிகள் திரளாக கலந்து கொண்டு தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். தன்னார்வ சட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
- 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளடக்கிய இந்த நகராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது கேள்வி குறியாக உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பழமையானது ஆகும். 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளடக்கிய இந்த நகராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது கேள்வி குறியாக உள்ளது.
தேவகோட்டையில் 10-க்கும் மேற்பட்ட தனியார் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாமல் குழந்தைகளை அதிக கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவலநிலையில் பெற்றோர் உள்ளனர்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தேவகோட்டை அருகே உள்ள பெரியகாரை, அனுமந்தகுடி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். மாணவிகள் நகரில் இருந்து கிராமங்களுக்கு சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே பிளஸ்-1 வகுப்பில் சேர்க்கப் படுகின்றனர். மாவட்ட கல்வி அலுவலகம் தேவகோட்டை நகரில் இருந்தும், நகருக்கு மேல்நிலைப்பள்ளி இல்லாதது கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளுக்கு துணையாக செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் அரசு மேல்நிலைப் பள்ளி கொண்டு வரவில்லை என்று தெரிகிறது.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் அறிக்கையில் தேவகோட்டை நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டுவரப்படும் என உறுதி அளித்தார்.
ஆனால் வருடம் ஆகியும் மேல்நிலைப்பள்ளி இதுவரை வரவில்லை. நகரில் உள்ள மக்கள் குழந்தைகளின் மேல்நிலை படிப்பு அதிக கட்டணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய அவலநிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முடிவு காணப்படும் நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மேல்நிலைப்பள்ளி வருமா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
- சாதனை புரிந்தவர்களுக்கான குடியரசு தின விருது பெற விண்ணப்பிக்கலாம்.
- அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வருகிற ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை,இலக்கியம்,
மருத்துவம், சமூகசேவை,அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிகள் உடைய தனித்தன்மைக் கொண்ட நபர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விருது எப்பொழுதும் உயரிய சாதனை செய்பவருக்கே வழங்கப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் சாதனை எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருக்க வேண்டும். இந்த விருது உயர்ந்த தர நிர்ணயத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படும். பத்ம விருதுகள் நாட்டிலேயே 2-வது உயரிய விருதாக இருப்பதால் விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே அவர்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மானிய விருதோ பெற்றிருக்க வேண்டும்.
விருதிற்கு உரியவரை தேர்ந்தெடுக்கப்படும் போது சமூகத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பெண்கள் நலிவடைந்த சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விருதிற்கு பரிந்துரை செய்யப்படும்.
அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
மேற்காணும் தகுதிகள் பெற்றவர்கள் பத்ம விருதிற்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபடிவம் www. padmaawards.gov.inஎன்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விருதிற்கு இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.9.2022 ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிராம உதவியாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
- மாநில துணைத் தலைவர் மாரி தலைமையில் சிவகங்கையில் நடந்தது.
சிவகங்கை
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க ஆலோசனை கூட்டம் மாநில துணைத் தலைவர் மாரி தலைமையில் சிவகங்கையில் நடந்தது.
கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், 10 ஆண்டு பணி முடித்த கிராம உதவியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில இணைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் சுருளிபாண்டி, பொருளாளர் ஜெயபாலன், மகளிரணி செயலாளர் காளீஸ்வரி, துணைச் செயலாளர் ஜெயக்குமாரி, வட்டத் தலைவர் செல்வகுமரன், பொருளாளர் கார்த்திகேய ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கல்பனா சாவ்லா விருது பெற சாதனை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கல்பனா சாவ்லா விருது ஆண்டு தோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப் பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமுதாயத்தில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்ச பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள கண்டரமாணிக்கம் ஊராட்சி, கே.வலையப்பட்டி கிராமத்தில் "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டிதலைமை தாங்கினார். சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பெரியகருப்பன் விழாவில் கலந்து கொண்டு மருத்துவமுகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
கிராமப்புறங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் மருத்துவச்சேவை பெறுவதற்காக நகர்ப்புறங்களுக்கு செல்ல வேண்டியதை தவிர்த்து, நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அதனை அறிந்து கொள்வதற்கு ேபர் பயன் பெற்றனர்.
நடப்பாண்டான 2022-2023-லும் 36 முகாம்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு ஏப்ரல் 2022 முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்மூலம் 14 ஆயிரத்து 800 ேபர் பயன்பெற்றுள்ளனர்.
இந்த முகாமில் பொது மருத்துவர்மற்றும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு இதய நோய் மருத்துவம், சிறுநீரகம் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மருத்துவம், மனநல மருத்துவம், மகளிர் மற்றும் குழந்தைகள்நல மருத்துவத்துறைகளை கொண்டு பரிசோதனை செய்து, நோயைக் கண்டறிந்து, தேவைப்படுவோருக்கு உயர்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், கொரோன தடுப்பூசி. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து ஊட்டச்சத்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்ச பெரியகருப்பன் வழங்கினார்.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, இணை இயக்குநர்(மரு த்துவப்பணிகள்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர்(சுகாதாரத்துறை) ராம்கணேஷ், கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.






