search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambalam"

    • மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகையை அரசுக்கு ஆதிதிராவிடர் நல அலுவலகம் திருப்பி அனுப்பியது.
    • மாணவிகளுக்கு அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்காக 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 3,4-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ம், 5,6-ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1000-மும், 7,8 -ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 1500-ம் வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவிகளின் எண்ணிக்கை, எத்தனை மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்?, இந்த ஆண்டில் எத்தனை மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க செயலாளர் வீரையா ஆதி திராவிடர் நலத்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த துறை நிர்வாகம் மொத்த ஆதி திராவிடர் மாணவிகளின் எண்ணிக்கை தங்களிடம் இல்லை என்றும், 2021-22-ம் ஆண்டில் 6,854 மாணவிகளுக்கு ரூ.65லட்சத்து29 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

    மேலும் 361 மாணவிகளுக்கு சரியான வங்கி கணக்கு விபரங்கள் இல்லாததால் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்தை அரசின் வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்பபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் வங்கி கணக்கு சரியாக இல்லை என்றால் மீண்டும் சரிபார்த்து மாணவிகளுக்கு ஊக்க தொகைவழங்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசிற்கே நிதி திரும்ப செலுத்தப்பட்டது தவறு. தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் அந்த நிதியை சமன் செய்ய அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து மீண்டும் மாணவிகளுக்கு ஊக்க தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவ்வாறு செய்யாத பட்சத்தில் மாணவிகளின் பெற்றோர்களுடன் இனைந்து போராட்டம் நடத்தப்படும் என்று தீண்டா மை ஒழிப்பு முன்னனியினர் எச்சரிக்கைவிடுத்தனர்.

    மாணவிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வங்கி விபரம் முறையாக இல்லை என கூறி அதிகாரிகள் அரசிற்கே திருப்பி அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×