என் மலர்
சிவகங்கை
- நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினர்.
- உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த மனிதநேய மக்கள் கட்சியினர், உள் நோயாளிகள் அனைவருக்கும் ரொட்டி, பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர். உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.
அரசு தாலுகா தலைமை மருத்துவர் அயன்ராஜ் முன்னிலை வகித்தார். ம.ம.க. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் முகமது அசாருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுதொழில் சங்க தலைவர் சிவனேஷ் ராஜா, ம.ம.க. நகரத் தலைவர் அப்துல் வஹாப், செயலாளர் சேக் அப்துல்லா, பொருளாளர் சேக் அப்துல்லா, ம.ம.க. நகரச் செயலாளர் ஜாபர் அலி, எஸ்.டி.பி.ஐ. அன்வர்தீன் நசீர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
- சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 140 ஆண்டு புகழ் பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது.
இங்கு 128-ம் ஆண்டு திருஇருதய தேர்பவனி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது. இங்கு மாதம்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று காலைகூட்டுதிருப்பலி பூஜை, மாலை திருவிழா திருப்பலி பூஜைகளை மறைமாவட்ட பரிபாலக ஆயர் ஸ்டீபன் அந்தோணி நடத்தினார்.
இதில் பல்வேறு ஊர்களில் உள்ள அருட்பணியாளர்கள் ஏசுவின் இறை செய்திகளை வாசித்தனர். நிறைவாக ஆலயம் முன் திருஇருதய ஆண்டவர் அழகிய சொரூபம் மின்சார தேரில்அலங்கரிக்கப்பட்டு இடைக்காட்டூர் தெருக்களில் வலம் வந்து திருத்தலத்தை அடைந்தது.
அதை தொடர்ந்து பக்தர்கள் நன்றி செலுத்தும் திருப்பலியில் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று நற்பவனி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பணியாளர் இம்மானுவேல் தாசன் , இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் , செல்ஸ் பேரவை உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.
- மீனாட்சி-சொக்கநாதர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- கோவில் ஆகம விதிமுறைகள் படி 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவில் பாண்டிய மன்னரான மாற வர்ம சுந்தரபாண்டியன் என்ற மன்னரால் கி.பி. 1216 கட்டப்பட்ட மிக பழமை வாய்ந்த கோவில் ஆகும்.
இந்த கோவில் ஆனது குரு சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாகும். கோவில் ஆகம விதிமுறைகள் படி 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வருடந்தோறும் ஆனி மாதம் திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக 2 வருடமாக திருவிழா நடைபெறவில்லை
இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் கொடிகம்பத்தில் சிவாச் சாரியார்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தனர். இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி -அம்பாள் காட்சி அளித்தனர்.
விழாவில் வருகிற 10-ந் தேதி அன்று மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணமும், 11-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
- இடைக்காட்டூரில் திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா நடந்து வருகிறது.
- தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இங்கு 128 -ம் ஆண்டு திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா கடந்த
23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருஇருதய பெருவிழா சிறப்பாக 10 நாட்கள் நடைபெறும்.
இந்த விழாவில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசு நாதரின் வாழ்வின் அற்புதங்களை எடுத்துரைப்பார்கள்.
இன்று முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா சிறப்பு திருப்பலியும், மாலை 6மணிக்கு திருஇருதய சொரூபம் தாங்கிய திரு தேர்பவனியும் நடைபெறுகிறது. நாளை (2-ந்ேததி) நற்பவனி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பணியாளர் இம்மானுவேல் தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செசல்ஸ் பேரவையினர் செய்து வருகின்றனர்.
திருவிழாவை முன்னிட்டு மதுரை மத்திய பஸ்நிலையம், எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இடைக்காட்டூர் ஆலயத்துக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடதுபக்க இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இதுதான். பிரான்ஸ் நாட்டு கட்டிட கலையான "கோதிக்'' கட்டிட கலை நுட்பத்துடன தமிழகத்தில் முதன் முதலில் கட்டப்பட்டது இந்த தேவாலயம் ஆகும்.
- தேவகோட்டையில் குட்கா, புகையிலை விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
- 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.
தேவகோட்டை
தமிழக அரசு குட்கா- புகையிலை விற்பனையை தடை செய்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தர வுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேவகோட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அறிவுரைப்படி நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் தேவகோட்டை நகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான ஸ்நாக்ஸ் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
அங்கிருந்த குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனை செய்தவரை ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வட்டார உணவு பாதுகாப்புதுறை அலுவலர் வேல்முருகன், உதவியாளர் மாணிக்கம் அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
- குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் 56-வது நாண் மங்களப் பெருவிழா நடைபெற்றது.
- அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நாண் மங்களப் பெருவிழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள குன்றக்குடி குரு மகா சன்னிதானம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் 56-வது நாண் மங்களப் பெருவிழா திருமடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நாண் மங்களப் பெருவிழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 10, 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர், பணியாளர்கள், அனைவருக்கும் பரிசுகள் வழங்கினர்.
தொடர்ந்து பள்ளி கல்லூரி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கினர். முன்னதாக 45-வது குருமாக சன்னிதான நினைவு மண்டபத்தில் மாலையிட்டு அருளாசி விழா நடைபெற்றது. தொடக்க பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள்
வழங்க ப்பட்டது.
மருத்துவமனைகளுக்கு நாற்காலி, மேல்நிலை பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மைய மருத்துவர் செந்தில் குமரன், பேராசிரியர் மோகன்ராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் மருது மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அந்த மின்மயான சுடுகாட்டை தெம்மாபட்டு பகுதிக்கு மாற்ற திட்டமிட்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அச்சுக்கட்டு பகுதியில் அமைந்துள்ள அரசு பொது மயானத்தில் ரூ.1.50 கோடி செலவில் மின் மயானம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மின்மயானம் அமைப்பதற்கு அந்த சுடுகாட்டை பயன்படுத்தி வரும் குறிப்பிட்ட சமூகத்தி னரிடம் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி ஆகியோர் உடனடியாக அந்த மின்மயான சுடுகாட்டை தெம்மாபட்டு பகுதிக்கு மாற்ற திட்டமிட்டனர்.
இதனையடுத்து அந்தப்பகுதியில் மின்மயானம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கும் எதிர்ப்பு கிளம்பவே, அந்த திட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது.
2 நாட்களுக்கு முன்பு தென்மாபட்டில் உள்ள மற்றொரு பகுதியில், அரசு பள்ளி மற்றும் குடிநீர் குளம் அருகில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மயானம் அமைக்கும் பணியை ஆரம்பித்தது.
இங்குள்ள மக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மின் மயா னத்தை பள்ளி அருகே அமைக்கக்கூடாது, வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு அளித்தனர். அப்போது செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், இது அரசு உத்தரவின் பேரில் கொண்டு வந்த திட்டம். நிச்சயமாக இந்த இடத்தில் மின்மயானம் அமைக்கப்படும் என்று தெரிவித்தாராம்.
மின் மயான திட்டத்திற்கு முதன்முதலாக எந்த இடத்தை தேர்வு செய்தீர்களோ அந்த இடத்தில் அமையுங்கள் என பொதுமக்கள் கூறவே, அங்கு விவாதம் ஏற்பட்டது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு சிவகங்கை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
- காரைக்குடி பிரபு பல் மருத்துவமனையில் இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
- காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.
காரைக்குடி
காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள பிரபு பல் மருத்துவமனையில் இலவச வாய் மற்றும் வாய்வழி புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். இதில் வாய்வழி மற்றும் மாக்சில்லோ பேஷியல் நோயியல் நிபுணர் டாக்டர் அருணா சிவதாஸ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளை செய்து கொண்டனர். 20 பேருக்கு ஆய்வகத்தில் பயாப்ஸி சோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பிரபு டெண்டல் நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் பிரபு, டாக்டர் பாஸ்கர சேதுபதி, மருத்துவர்கள் அம்ரிதா, பிரியங்கா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஹரிதாஸ், கண்ணன், தெய்வானை, கலா காசிநாதன், முன்னாள் நகர இளைஞரணி செயலாளர் காரை சுரேஷ், அப்துல் கலாம் கிட்ஸ் பள்ளி தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காரைக்குடி பகுதியில் இதுபோன்ற வாய் புற்றுநோய் இலவச கண்டறியும் முகாம் நடந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகையை அரசுக்கு ஆதிதிராவிடர் நல அலுவலகம் திருப்பி அனுப்பியது.
- மாணவிகளுக்கு அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை
ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்காக 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 3,4-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ம், 5,6-ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1000-மும், 7,8 -ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 1500-ம் வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவிகளின் எண்ணிக்கை, எத்தனை மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்?, இந்த ஆண்டில் எத்தனை மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க செயலாளர் வீரையா ஆதி திராவிடர் நலத்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த துறை நிர்வாகம் மொத்த ஆதி திராவிடர் மாணவிகளின் எண்ணிக்கை தங்களிடம் இல்லை என்றும், 2021-22-ம் ஆண்டில் 6,854 மாணவிகளுக்கு ரூ.65லட்சத்து29 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
மேலும் 361 மாணவிகளுக்கு சரியான வங்கி கணக்கு விபரங்கள் இல்லாததால் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்தை அரசின் வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்பபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் வங்கி கணக்கு சரியாக இல்லை என்றால் மீண்டும் சரிபார்த்து மாணவிகளுக்கு ஊக்க தொகைவழங்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசிற்கே நிதி திரும்ப செலுத்தப்பட்டது தவறு. தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் அந்த நிதியை சமன் செய்ய அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து மீண்டும் மாணவிகளுக்கு ஊக்க தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாத பட்சத்தில் மாணவிகளின் பெற்றோர்களுடன் இனைந்து போராட்டம் நடத்தப்படும் என்று தீண்டா மை ஒழிப்பு முன்னனியினர் எச்சரிக்கைவிடுத்தனர்.
மாணவிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வங்கி விபரம் முறையாக இல்லை என கூறி அதிகாரிகள் அரசிற்கே திருப்பி அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சாதி, மத அடையாளங்களை குறிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- இருசக்கர வாகனங்களில் சாதி, மதம் சம்மந்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றார்.
தேவகோட்டை
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆணைக்கிணங்க, துணை சூப்பிரண்டு ரமேஷ் உத்தர வின் பேரில் ேதவகோட்டை நகர் காவல் நிலையத்தில் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடந்தது.
நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி பேசுகையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாதி, மதத்தை விளக்கும் விதத்தில் கயிறு மற்றும் பிற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் பள்ளி, கல்லூரி வாளகத்தில் மாணவ, மாணவிகள் கயிறு அணிந்து வர அனுமதிக்க கூடாது. மாலை நேரங்களில் வீட்டுக்கு செல்லும் மாணவர்கள் வெளி இடங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் அதிக நேரம் நிற்க கூடாது. இருசக்கர வாகனங்களில் சாதி, மதம் சம்மந்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றார்.
இக்கூட்டத்தில் நகரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி முதல்வர்கள், பேன்சி ஸ்டோர் உரிமையாளர்கள், ஸ்டிக்கர் ஒட்டும் கடை உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளி தடகள வீரருக்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.
- தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுகிறது.
சிவகங்கை
தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் சார்பில் 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிக்கு மாற்றுத்திறனாளி வீரரான சிவகங்கை மாவட்டம், சிவல்பட்டி கிராமத்தை வினோத்குமார் தகுதி பெற்றுள்ளார்.
அவருக்கு பாராலிம்பிக் கமிட்டியால் நுழைவு கட்டணம், போக்குவரத்து, உணவு, தங்குமிடம், மருத்துவ உதவிகளுக்காக ரூ. 25 ஆயிரம் நிதி உதவியை பாராலிம்பிக் கமிட்டியின் சிவகங்கை மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் வழங்கினார்.
அப்போது சிவகங்கை மாவட்ட பாரா ஒலிம்பிக் விளையாட்டு செயலாளர் பாபு, துணைத் தலைவர் சரவணன், பொருளாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த அய்யங்காளை அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
- சொத்து தகராறில் தந்தையை மகன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி (வயது 60). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மூத்த மகன் அய்யங்காளை, கூலித்தொழிலாளி. சொத்து பிரிப்பதில் இவருக்கும், தந்தை பழனியாண்டிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று இரவும் இது தொடர்பாக தந்தை-மகனுக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த அய்யங்காளை அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி இன்று அதிகாலை வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பழனியாண்டியை, மகன் அய்யங்காளை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் பழனியாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அய்யங்காளையை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை மகன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






