search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
    X

    மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

    • சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என லெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2022-23-ம் நிதியாண்டிற்கு 1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,000-மும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000-மும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.4,000-மும், இளங்கலை பட்டம் பட்டயப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.6,000-மும், முதுகலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.7,000-மும், ஆண்டொன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் 75 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கான வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.3,000-மும், இளங்கலை பட்டம், பட்டயப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.5,000-மும், முதுகலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.6,000-மும், ஆண்டொன்றுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டங்களின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார்அட்ைட, குடும்பஅட்டைநகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், 9-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல் நகல் (40 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்) 9-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் வாசிப்பாளரின் விவரம் ஆகிய சான்றுகளுடன், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×