இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம்

காரைக்குடி பிரபு பல் மருத்துவமனையில் இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.
இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
Published on

காரைக்குடி

காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள பிரபு பல் மருத்துவமனையில் இலவச வாய் மற்றும் வாய்வழி புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். இதில் வாய்வழி மற்றும் மாக்சில்லோ பேஷியல் நோயியல் நிபுணர் டாக்டர் அருணா சிவதாஸ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டார்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளை செய்து கொண்டனர். 20 பேருக்கு ஆய்வகத்தில் பயாப்ஸி சோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பிரபு டெண்டல் நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் பிரபு, டாக்டர் பாஸ்கர சேதுபதி, மருத்துவர்கள் அம்ரிதா, பிரியங்கா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஹரிதாஸ், கண்ணன், தெய்வானை, கலா காசிநாதன், முன்னாள் நகர இளைஞரணி செயலாளர் காரை சுரேஷ், அப்துல் கலாம் கிட்ஸ் பள்ளி தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காரைக்குடி பகுதியில் இதுபோன்ற வாய் புற்றுநோய் இலவச கண்டறியும் முகாம் நடந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com